articles

தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையின் வரலாற்றுப் பாதை

1980 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சுயசார்பும் ஒருமைப் பாடும் கடும் சோதனைக்கு உள்ளாயின. பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (IMF) கட்டளைகளுக்கு இந்திரா காந்தி அரசு தலை வணங்கியது. உலக வங்கி மற்றும் ஐஎம்எப் (IMF) நிபந்த னைகளை ஏற்று கடன்களைப் பெற்றது.  ஒன்றிய-மாநில அரசுகள் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பெயரால் மக்கள் மீது கடும் சுமைகளைத் திணித்தன. ரயில் கட்டணம், பால் விலை, சரக்குக் கட்டணம், பெட்ரோலியப் பொருட்களின் விலை என அனைத்தும் கடுமையாக உயர்ந்தன. மறைமுக வரிகள் பெருகின. ஏற்றுமதியை விட இறக்குமதி 9,000 கோடி ரூபாய் அதிகரித்தது. உள்நாட்டு கனரக தொழில்கள் முடங்கின. உள்நாட்டி லும் வெளிநாட்டிலும் கடன் சுமை பெருகி, அரசின் கருவூலம் காலியானது.

தொழிலாளர் ஒற்றுமையின் எழுச்சி

இந்த மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங் கள் வெடித்தன. சிஐடியு உள்ளிட்ட எட்டு மத்திய தொழிற்சங்கங்களும், 40-க்கும் மேற்பட்ட தொழில்வாரியான சம்மேளனங்களும் ஒன்றிணைந்து தேசிய பிரச்சாரக் குழுவை உருவாக்கின. 1981 ஜூன் 4 அன்று மும்பையில் நடந்த சிறப்பு மாநாடு “தில்லியில் அணிவகுப்போம்” என அறைகூவல் விடுத்தது. 1981 நவம்பர் 23 அன்று தில்லியில் நடந்த பேரணி தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் மாபெரும் வெளிப்பாடாக அமைந்தது. பொதுத்துறை, தனியார் துறை, ரயில்வே, பாதுகாப்பு, அரசு ஊழியர்கள், இரும்பு, நிலக்கரி, சுரங்கம், சணல், ஜவுளி, பொறியியல், போக்குவரத்து, மின்சாரம் என அனைத்துத் துறைகளிலி ருந்தும் தொழிலாளர்கள் அலை அலையாக திரண்டனர். தோட்டம், கைத்தறி, பீடி, கட்டுமானம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என அமைப்பு சாரா தொழிலாளர்க ளும் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். உழைக்கும் பெண்களின் பெருந்திரள் பங்கேற்பு தொழிற்சங்க இயக்கத்தின் புதிய எழுச்சியைக் காட்டியது.

வேலைநிறுத்தமும் தியாகங்களும்

பேரணியின் முடிவில் 1982 ஜனவரி 19 அன்று அகில இந்திய வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அந்த வரலாற்று நாளில் வெளிப்பட்ட தொழிலாளர் ஒற்றுமை அதுவரை கண்டிராத அளவிற்கு உயர்ந்தது. முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதர வோடு பல இடங்களில் பந்த் ஆக மாறியது. ஆனால் அன்றைய நாள் இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் இரத்தம் சிந்திய நாளாகவும் மாறியது. நாடு முழுவதும் பத்து தோழர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்தனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொழிலாளர்களோடு இணைந்து நின்ற விவசாய இயக்கத் தோழர்கள் மீது துப்பாக்கி முனை நீட்டப்பட்டது. அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகிய மூன்று தியாகச் செம்மல்கள் வீர மரணம் அடைந்தனர். பெருமாள்நல்லூர், பிச்சங்கட்டளை, சீதை சிந்தாமணி, கண்ணங்குடி-சவுரி யார்புரம், காலமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் காவல்துறையினர் வன்முறை யில் இறங்கினர். வீடுகளுக்குள் புகுந்து ஆண், பெண், குழந்தைகள் என அனைவ ரையும் தாக்கினர். குடிசைகளில் இருந்த பாத்திரங்களை நொறுக்கி சூறையாடினர். நூற்றுக்கணக்கான தோழர்கள் படுகாயமடைந்தனர்.

நீதி மறுக்கப்பட்ட வரலாறு

திருமெய்ஞானம் வழக்கு மயிலாடுதுறை துணை நீதிமன்றத்தில் பல ஆண்டு கள் இழுபறியானது. குற்றத்தை நிரூபிக்க முடியாத நிலையில் 1989 மார்ச் 27 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் மூன்று உயிர்களின் பலிக்கு நீதியும் நியாயமும் மறுக்கப்பட்டது. இது நம் வரலாற்றின் கறுப்புப் பக்கமாக நிற்கிறது. இன்றைய சூழலும் தொடரும் போராட்டங்களும் இன்று மோடி தலைமையிலான பாஜக அரசின் பத்தாண்டு கால படுபிற்போக்கு கொள்கைகள் இந்தியாவின் உழைக்கும் மக்களையும், வேலையில்லா இளைஞர்களையும் வரலாறு காணாத அளவில் பாதித்துள்ளன. அதனால்தான் இந்திய தொழிலாளர் வர்க்கம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆனால் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1982 ஜனவரி 19 தியாகிகளின் நினைவு நாளில், அவர்களது தியாகப் பாதை யில் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம். ஒற்று மையை குலைக்க முயலும் ஆட்சியாளர்களின் சதிகளை முறியடிப்போம். உழைக்கும் மக்களின் வாழ்வை வளமாக்க இடைவிடாது போராடுவோம். பெரணமல்லூர் சேகரன்