பின்னடைவு காலத்தில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்த 14வது மாநாடு! - அ.அன்வர் உசேன்
இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி யின் 14ஆவது அகில இந்திய மாநாடு 1992ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் 9 வரை சென்னையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் பயணத்தில் இந்த மாநாடு கீழ்க்கண்ட காரணங்களால் மிக முக்கியத்துவத்தை பெற்றது:
Fசோவியத் யூனியனில் சோசலிச பின்னடை வும் அதனால் உருவான விளைவுகளும்
Fவி.பி.சிங் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது Fபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% ஒதுக்கீடு குறித்து மண்டல் ஆணைய பரிந்துரைகள் அமலாக்கம்.
Fரத்த யாத்திரையாக மாறிய அத்வானியின் ரத யாத்திரை.
Fவலுப்பெற்ற மதவாத அரசியல்
Fகுறுகிய காலத்தில் இரு தேர்தல்களை சந்தித்த அரசியல் உறுதியற்ற நிலைமை
Fநரசிம்ம ராவ் - மன்மோகன் சிங் தொடங்கி வைத்த நாசகர நவீன தாராளமய பொரு ளாதர கொள்கைகள்.
Fசிக்கலான சர்வதேச/ தேசிய சூழலில் சித் தாந்த கலங்கரை விளக்கமாக இருந்த தோழர் பி.டி.ரணதிவேயின் மரணம்.
சோசலிசத்தின் பின்னடைவு
முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளி லும் பின்னர் சோவியத் யூனியனிலும் சோசலி சத்துக்கு ஏற்பட்ட பின்னடைவு உலகம் முழுவ தும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் முற்போக்கு சக்திகளுக்கும் பெரும் பாதகமான அழுத்தத் தை ஏற்படுத்தியது. மாநாட்டின் அரசியல் பரி சீலனை அறிக்கை கீழ்கண்டவாறு குறிப்பிட்டது: “1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உருவானதிலிருந்து இத்தகைய மிகவும் வேதனை தருகின்ற ஒரு சர்வதேச சூழல் உருவானதே இல்லை” சோசலிசத்துக்கு ஏற்பட்ட பின்னடைவால் “உலக சக்திகளின் சமன்பாட்டில் இப்போதை க்கு ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான சூழல் உருவாகியுள்ளது” எனவும் தீர்மானம் மதிப்பிட் டது. மாநாட்டின் ஒரு முக்கிய பகுதியாக “சில சித்தாந்த பிரச்சனைகள் குறித்து” என்ற பொரு ளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிக முக்கி யமான ஒன்று. சோசலிச பின்னடைவு குறித்தும் அதிலிருந்து கற்க வேண்டிய படிப்பினைகள் பற்றியும் சர்வதேச கம்யூனிஸ்ட் அரங்கில் உரு வான துல்லியமான சித்தாந்த ஆவணம் இது எனில் மிகை அல்ல.
சோசலிசம் சந்தித்த பிரச்சனைகள்
புரட்சியானது, முதலில் பொருளாதார ரீதி யாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் என காரல் மார்க்சும் ஏங்கெல்சும் மதிப்பிட்டனர். ஆனால் அதற்கு மாறாக பின் தங்கிய நாடுகளில்தான் புரட்சி உருவானது என்பதை சுட்டிக்காட்டும் தீர்மானம், அத னால் ஏற்பட்ட சிக்கல்களையும் விவரிக்கிறது. ஒப்பீட்டளவில் குறைவான வளர்ச்சி கண்ட உற்பத்தி சக்திகளையும் அதனால் உருவான பின்தங்கிய சமூக உறவுகளையும் மின்னல் வேகத்தில் “வளர்த்தெடுக்க வேண்டிய தேவை உருவானது” என்பதையும் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தை தாண்டி அடுத்த கட்டத் துக்கு இந்த வளர்ச்சியைக் கொண்டு செல்ல வேண்டிய தேவை உருவானது என்பதையும் தீர் மானம் குறிப்பிடுகிறது. வளர்ந்த நாடுகளில் புரட்சி உருவாகவில்லை என்பதே, சோசலிசத்தை சாதித்த நாடுகளுக்கு பாதகமாக அமைந் தது எனவும் தீர்மானம் சொல்கிறது. 1991க்கு முன்பாகவே கோர்பச்சேவ் தலை மையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்த “கிளாஸ்னாஸ்ட்”(வெளிப்படைத் தன்மை), “பெரிஸ்த்ரோய்க்கா” (சீர்திருத்தம்) ஆகிய இரு கோட்பாடுகளும் சோசலிசத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக திசைமாறி அதனை சிதைக்கும் விதத்தில் அமலாக்கப் படுகிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்து வந்தது. குறிப் பாக சோவியத் கட்சியின் 20ஆவது மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல கோட்பாடுகளை நமது கட்சி நிராகரித்தது. சோசலிசத்தின் கடந்தகால சாதனைகள் நிராகரிப்பு/ தோழர் ஸ்டாலின் பங்கு குறித்து தவறான விமர்சனம் / புதிய சூழல் குறித்து தவறான மதிப்பீடுகள் ஆகிய சோவி யத் கட்சியின் குழப்பங்களை நமது கட்சி விமர்சித்தது. சோவியத் கட்சியின் 20ஆவது மாநாட்டின் தீர்மானத்தில் “ஏகாதிபத்தியம்” எனும் வார்த்தையே இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது.
பின்னடைவுக்கு காரணங்களும் படிப்பினைகளும்
பின்னடைவுக்கு கீழ்க்கண்ட முக்கிய கார ணங்கள் என 14ஆவது மாநாட்டுத் தீர்மானம் முன்வைத்தது:
Fசோசலிசத்தின் கீழ் அரசின் வர்க்கத்தன்மை பற்றிய சோவியத் கட்சியின் தவறான புரிதல்.
Fதொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” எனும் கோட்பாடு சிதைவு.
Fகம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசுக்கும் இருந்த உறவு. Fசோசலிச ஜனநாயகம் செழுமை காண்ப தில் ஏற்பட்ட புறக்கணிப்பு
Fகட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவம் பின்னுக்குச் சென்றது Fசோசலிச பொருளாதார நிர்மாணத்தில் ஏற்பட்ட சிதைவுகள் Fவேகமாக வளர்ந்த உற்பத்தி சக்திகள் பின்னர் தேக்கமடைந்து முதலாளித்துவ உற்பத்தி சக்திகளைவிட பின்னுக்குச் சென்றது
Fசொத்து வடிவங்களில் உருவான வறட்டுத் தனமான கோட்பாடு
Fதிட்டமிடல் மற்றும் சந்தையின் பங்கு பற்றிய தவறான பார்வை Fகட்சிக்குள் சிதைந்த சித்தாந்த உணர்வு
Fஅதிகார வர்க்க மனோபாவம் Fமொழிகளின் சமத்துவத்தில் நடைமுறை யில் ஏற்பட்ட பாதக அணுகுமுறை
Fஅரசாங்க நிர்வாக நடைமுறைகளில் அதீத மத்தியத்துவம்
- இப்படி, சோவியத் கட்சி மற்றும் அர சின் நடைமுறைகள் குறித்த பல முக்கிய மதிப்பீடுகளை 14ஆவது மாநாட்டுத் தீர்மா னம் முன்வைத்தது. அதே சமயத்தில் இது சோசலிசம் எனும் கோட்பாடுக்கு ஏற்பட்ட பின் னடைவு அல்ல எனவும் சில குறிப்பிட்ட நாடுக ளில் அமலாக்கப்பட்ட சோசலிச நடைமுறைக ளுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனவும்; சுரண் டல் இருக்கும்வரை மார்க்சிய-லெனினியம் மற்றும் சோசலிசத்தின் தேவை இருக்கும் என வும் கட்சி வலுவாக சுட்டிக்காட்டியது. சோசலி சத்தின் பின்னடைவுக்குப் பின்னர் 35 ஆண்டு கள் கடந்த பின்னரும் முதலாளித்துவம் மனித குலம் சந்திக்கும் எந்த பிரச்சனையையும் தீர்க்க இயலவில்லை. சோசலிசத்தின் தேவையை மக்கள் மேலும் மேலும் உணரத் தலைப்பட்டுள் ளனர். அதனை பயன்படுத்தி சோசலிச சக்தி களை முன்னேற்றுவது என்பதே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன் உள்ள முக்கிய கடமையா கும். அந்த வகையில் 14ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சித்தாந்த தீர்மானம் இன்றும் மிக முக்கிய ஆவணமாக உள்ளது எனில் மிகை அல்ல.
இந்தியாவில் உருவான அரசியல் சூறாவளி
இந்த கால கட்டத்தில் உள் நாட்டிலும் பல அரசியல் நிகழ்வுகள் வேகமாக நடந்தன. 1989 தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி கணிசமாக வெற்றி அடைந்தது. தேசிய முன்னணியுடன் இடதுசாரி சக்திகள் தொகுதி உடன்பாடு கண்டன. மறுபுறம் தேசிய முன்னணி பாஜகவுடனும் அரசியல் உறவு கொண்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வந்தவு டன் தேசிய முன்னணி - பாஜக கூட்டணி அரசுக்கு பாஜக முயன்றது. அத்தகைய அர சாங்கம் அமைந்தால் ஆதரவு இல்லை என இடதுசாரி கட்சிகள் திட்டவட்டமாக அறி வித்தன. எனவே வி.பி.சிங் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து ஆதரவு தர வேண்டிய கட் டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. இடதுசாரி கட்சி களும் வெளியிலிருந்து ஆதரவு தந்தன. இந்த அரசியல் சூழல் என்பதே பல முரண் பாடுகளை கொண்டிருந்தது. இந்த முரண்பாடு களைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வெல்லவும் இடதுசாரி களின் முன்னேற்றத்தை காணவும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான முனைப்பு களை முன்னெடுத்தது. மறுபுறத்தில் பாஜக தனது வலிமையைப் பெருக்கிக் கொள்ளவும் ஆட்சியை இழந்த காங்கிரஸ் தனது நலனை முன்னுக்கு கொண்டு செல்லவும் முயன்றன. ஆளும் வர்க்கங்களின் முதன்மை அர சியல் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு எதிராக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஒற்று மையை உருவாக்குவதும்; அதே வேளையில் இடதுசாரி ஜனநாயக மாற்று அரசியலை முன் னெடுப்பது என்பதும் கட்சியின் அரசியல் உத்தியாக இருந்தது.
மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாக்கம்
காங்கிரஸ் ஆட்சியில் ஓரம் கட்டப்பட்ட மண்டல் ஆணைய பரிந்துரைகளில் பிற்படுத்தப் பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு எனும் முடிவை அமலாக்குவது என வி.பி.சிங் அர சாங்கம் முடிவெடுத்தது. இதுபற்றி இடதுசாரி களுடன் கூட கலந்தாலோசிக்கவில்லை. எனி னும் சமூக நீதி பயணத்தில் இது முக்கிய நகர்வு என்பதால் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிக ளும் இதனை வலுவாக ஆதரித்தன. ஆனால் முற்பட்ட பிரிவினர் இதனை கடுமையாக எதிர்த்து வட மாநிலங்களில் வன்முறை போ ராட்டங்களை உருவாக்கினர். தனது கட்சி பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் வாக்குகளை நிரந்தரமாக இழக்கும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்த பாஜகவின் அத் வானி ராமர் கோவிலை முன்வைத்து ரத யாத்தி ரையை தொடங்கினார். ரத யாத்திரை சென்ற இடமெல்லாம் மதக்கலவரங்கள் வெடித்தன. அயோத்தி நோக்கி சென்று கொண்டிருந்த ரத யாத்திரை பீகாரில் நுழைந்த பொழுது லாலு பிரசாத் ஆட்சியால் அத்வானி கைது செய் யப்பட்டார். அடுத்த நிமிடமே வி.பி.சிங் ஆட்சி க்கு தனது ஆதரவை பாஜக திரும்ப பெற்றது. தனது பதவியை ராஜினாமா செய்ய வி.பி.சிங் முன்வந்தார். எனினும் நம்பிக்கை தீர்மா னத்தை நாடாளுமன்றத்தில் எதிர்கொண்டு பாஜகவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் இடதுசாரிகள் அறிவுறுத்தி னர். அதன்படியே நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் மீது காரசாரமான விவாதம் நடைபெற்றது.
மதவாதமும் நாசகர பொருளாதார கொள்கைகளும்
வி.பி.சிங் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் சில மாதங்கள் சந்திரசேகர் ஆட்சி காங்கிரஸ் தயவுடன் நடந்தது. எனினும் சில மாதங்களி லேயே இந்த ஆட்சி கவிழ்ந்து தேர்தல்கள் 1991இல் நடந்தன. ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூ ரில் படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பெரும் பான்மை குறைவாக இருந்த போதிலும் மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் விரும்பாத காரணத்தால் நரசிம்மராவ் அரசாங்கம் ஆட்சி அமைத்தது. நரசிம்மராவ் - மன்மோகன் சிங் கூட்டணி சார்பாக நவீன தாராளமய நாசகர பொருளா தார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. தனி யார்மயம் தறிகெட்டு பயணித்தது. நிதித்துறை யில் அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சர்வதேச நிதி அமைப்புகளுக்கு இந்திய அரசு அடிபணியும் சூழல் ஏற்பட்டது. மறுபுறம் மத வாத சக்திகள் தமது சீர்குலைவு பணிகளை வேகமாக முடுக்கிவிட்டன. இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் உத்தி:
1. காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்ப்பது
2. பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பது
3. பாஜக அல்லாத மதச்சார்பற்ற எதிர்க்கட்சி களின் ஒற்றுமையை உருவாக்குவது
4. இடது ஜனநாயக அரசியலை முன்னெடுப் பது - என நான்கு கடமைகளை கொண்டி ருந்தது.
திமுக ஆட்சி பதவி நீக்கம்
இந்த காலத்தில் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதம் வலுவாக தலையெடுத்தது. சிறுபான்மை சீக்கிய மதவாதத்தை அரசியல் ரீதியாக மட்டுமல்ல; களத்திலும் மார்க்சி ஸ்ட் கட்சிதான் தீவிரமாக எதிர்கொண்டது. இதனை அன்றைய பஞ்சாப் காவல்துறை அதி காரி ஜூலியோ ரெபைரோ பகிரங்கமாக கூறி னார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் முதன்மை எதிரியாக ஆனதால் மார்க்சிஸ்ட் கட்சியின் 200 முக்கிய ஊழியர்கள் படுகொலை செய்யப் பட்டனர். இதே போல காஷ்மீர் மற்றும் அசாமி லும் பிரிவினை இயக்கங்கள் செயல்பட்டன. தேச ஒற்றுமைக்காக மிக கடுமையான களப் பணிகளை மார்க்சிஸ்ட் கட்சி ஆற்றியது என்பது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரசேகர் ஆட்சியை பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பதவி நீக்கம் செய்ய கடுமை யாக முயன்றன. அப்பொழுது ஆளுநராக இருந்த பர்னாலாவை தோழர் சுர்ஜித் நேரடி யாக சந்தித்து காங்கிரசின் தவறான முடிவுக்கு துணை போக வேண்டாம் என வலியுறுத்தி னார். ஆளுநரையும் மீறி ஜனாதிபதி வெங்கட் ராமன் மிகவும் எதேச்சதிகாரமாக திமுக ஆட்சியை பதவி நீக்கம் செய்தார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு/ கேரளா/ ஆந்திரா/ மே. வங்கம்/ பீகார் ஆகிய மாநிலங்களில் வெற்றி கரமாக பந்த் நடந்தது
. கட்சித் திட்டம்/ அமைப்புச் சட்டம் மாற்றம்
சர்வதேசச் சூழலில் ஏற்பட்டுள்ள முக்கிய மான மாற்றங்களின் பின்னணியில் கட்சித் திட்டம் மாற்றப்பட வேண்டும் எனும் கோ ரிக்கை எழுந்தது. சர்வதேச சூழலின் மாற் றத்தை கவனத்தில் கொள்ளும் அதே சம யத்தில் கட்சியின் அடிப்படை நிர்ணயிப்பு களான புரட்சியின் கட்டம்/ அரசின் வர்க்கத் தன்மை/ புரட்சியின் எதிரி வர்க்கங்கள்/ புரட்சியை நடத்தும் வர்க்கங்கள் ஆகிய வற்றில் மாற்றம் இல்லை என தீர்மானத்தில் வலு வாக குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் கட்சித் திட்டத்தை தற்காலப்படுத்த ஒரு குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது. கட்சி அமைப்பில் மத்திய கட்டுப்பாடுக் குழு மத்திய குழுவால் தேர்வு செய்யப்பட்டு வந்தது. இதனை மாற்றி மத்திய கட்டுப்பாடு குழு நேரடியாக கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தேர்வு செய்யும் விதமாக அமைப்புச் சட்ட விதிகள் மாற்றப்படும் தீர்மா னம் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அதே போல மாநில கட்டுப்பாடுக் குழு மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்படும் என விதிகள் திருத்தப்பட்டன. இந்த மாநாட்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்சியின் சித்தாந்த கலங்கரை விளக்கமாக விளங்கிய தோழர் பி.டி.ரணதிவே அவர்கள் காலமானார். சர்வதேச மற்றும் தேசிய சூழல்க ளில் பல முக்கிய அரசியல் திருப்பங்கள் உரு வான காலத்தில் அவரது மறைவு பேரிழப்பாக அமைந்தது. மேலும் சரோஜ் முகர்ஜி/ அப்துல்லா ரசூல்/ குரு சரண் சிங் ரந்தாவா/ பகத்சிங்கின் தோழர் கிஷோரி லால் / காங்கி ரஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட சப்தர் ஹஷ்மி / தமிழ்நாட்டு தோழர்கள் அனந்தன் நம்பியார்/ டி.பி.முத்துசாமி ஆகியோர் உட்பட பலருக்கும் மாநாட்டில் அஞ்சலி செலுத்தப் பட்டது. சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் தமிழ் நாட்டிலும் பல அரசியல் சூறாவளிகள் அரங்கேறிய பின்னணியில் கட்சியை முன் னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வழி காட்டும் வகையில் 14ஆவது மாநாடு முக்கியத்து வம் பெற்று அமைந்தது. இந்த மாநாட்டில் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அவர்கள் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார்.