articles

img

போராட்டச் சுடராய் வழிகாட்டும் எம்.எம்.அலி - என்.முருகேசன்

போராட்டச் சுடராய் வழிகாட்டும் எம்.எம்.அலி - என்.முருகேசன்

பீடி சுற்றும் தொழிலாளியாக இருந்து குமரி மாவட்ட உழைப்பாளி மக்களின் மகத் தான தலைவராக உயர்ந்தவர் எம்.எம்.அலி என்கிற எம்.முகமது அலி. பாட்டாளி வர்க்கத்தின் பட்டறிவும், மார்க்சிய அறிவும் அவரை சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவ ராகவும் அடையாளப்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்க லையில் உள்ள மேட்டுக்கடையில் பீடித் தொழிலாளர்களின் உரிமைக ளுக்காகப் போராடியவர், பின்னர் மாவட்டம் முழுவதும் பீடி, தோட்டம், போக்குவரத்து என அனைத்து உழைப்பாளி மக்களின் துயரங்க ளைப் போக்க போர்க்குரல் உயர்த்தி அவர்களை சங்கமாகத் திரட்டினார். தொழிற்சங்கப் பணிகளின் ஊடாக கம்யூனிஸ்ட்டாக மாறினார்.  1942 ஆம் ஆண்டு நாகர்கோவி லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் கிளை அமைக்கப்பட்ட போது, அதில் உறுப்பினரானார். அவரது திறமையும், பேச்சாற்றலும், அர்ப்பணிப்புக் குணமும் அவரை கட்சியின் மாவட்டச் செயலாளர் நிலைக்கு உயர்த்தியது.  1964 முதல் 1971 வரை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக திறம்படச் செயல் பட்டார்.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னராகவும் பொறுப்பு வகித்தார். தொழிற்சங்க, கட்சி போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 1964 இல் கட்சி பிளவுபட்டபோது வெளியேறிய  31 மாநில கவுன்சில் உறுப்பினர்களில் எம்.எம்.அலியும் ஒருவர். அன்றி லிருந்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சி ஸ்ட்) கட்சியில் இணைந்து மாநி லக்குழு உறுப்பினராக பல ஆண்டு கள் செயல்பட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளராக பொறுப்பு வகித்து பல போராட்டங்க ளுக்கு தலைமை தாங்கினார். பயோ னியர் குமாரசாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபல தொழில் அதிபர்.

இவருக்கு சொந்தமாக போக்குவரத்து நிறுவனம், திரையரங்கம், ரயில்வே சேவைகள், உப்பளம், ரப்பர், தேயிலை, கிராம்பு தோட்டங்கள் இருந்தன. பயோனியர் மரவள்ளி, பயோனியர் வாழை, பயோனியர் சீனிக்கிழங்கு (சர்க்கரை வள்ளி) என சாதாரண மக்களுக்கு தேவையான வற்றை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடும் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களை திரட்டி சங்கம் அமைத்தார் எம்.எம்.அலி. பயோனியர் நிர்வாகம் தொழிலாளர்க ளை பழிவாங்கியது.

 அதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் பொதுமக் களை சந்தித்து பயோனியர் தயாரிப்பு களை புறக்கணிக்க அழைப்பு விடுத்த னர். போராட்டம் விரிவடைந்து மாவட்டம் முழுவதும் ஆதரவு பெருகி யது. பயோனியர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டு உத வினார். இப்போராட்டத்தை வழி நடத்திய எம்.எம்.அலிக்கும், கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏராள மான இளைஞர்கள் கம்யூனிஸ்ட் கட்சியால் ஈர்க்கப்பட்டனர். 1950 காலகட்டத்தில் மணவாளக் குறிச்சியில் கிரவ்தர் என்கிற ஆங்கி லேயர் அரியமணல் ஆலையை நடத்தி வந்தார். அதில் கடற்கரை மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோசைட், இல்மனைட், ரூட் டைல், சிர்கான், கார்னெட், சில்மனைட் போன்றவற்றை ஆலை வெளிநாடுக ளுக்கு அனுப்பி வந்தது.

1966இல் இந்திய அரசு கிரவ்தரின் ஆலையை மூடியது. அதன் அருகில் இந்திய அரசே சொந்தமாக ஐஆர்இ என்கிற அரிய மணல் ஆலையை நிறுவி, அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.  கிரவ்தர் ஆலையில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு ஐஆர்இ-யில் வேலை கேட்டு போ ராட்டம் வலுவடைந்தது. சங்கத்தின் செயலாளராக இருந்த எம்.எம்.அலி சாகும்வரை உண்ணாவிரதம் என  அறிவித்து போராட்டத்தை 15 நாட்க ளாக தொடர்ந்தார். ஆலைக்கு வெளியே ஆபத்தான நிலையிலும் நீடித்த இப்போராட்டத்தை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

தென்னை ஓலையால் மறைக்கப்பட்ட தடுப்பை தகர்த்து தொழிலாளர்கள் எம்.எம். அலியை வளாகத்துக்குள் கட்டிலுடன் கொண்டு சென்றனர். தொழிலாளர்க ளின் துணிச்சலையும், எம்.எம்.அலியின் உறுதியையும் கண்ட நிர்வாகம் மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களை வேலை க்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களை பாதுகாத்து செங் கொடியின் கீழ் அவர்களை அணி திரட்டிய மகத்தான தலைவர் எம்.எம்.அலி. குமரி மாவட்ட தொழிலாளர் வர்க்கம் என்றென்றும் அவரது நினைவுகளை நெஞ்சில் நிறுத்தும்.

திருமணத்தில் புரட்சி

கம்யூனிஸ்ட்டும் பீடித்தொழிலாளி யுமான எம்.எம்.மணியை அணுகிய ஒரு ஏழைத்தாய் தனது மகளின் திருமணத்துக்கு பண உதவி (சக்கத்) கோரினார். அரசியல் ரீதியான எதிரி ஒருவர் தன்னைப்பற்றி மிகையாக கூறியதை நம்பி அந்த தாயும் மகளும் வந்ததை அறிந்து கொண்டவர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பத்தை கோரினார். அடுத்த இரண்டு நாட்களில் எவ்வித முன்னேற்பாடும் விருந்தோம்பலும் இல்லாமல் தனது குடிசையில் வைத்து அந்த பெண்ணை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.