விழுப்புரம், ஜன. 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் எழுச்சி யுடன் நடைபெற்றது. ஜி. ராமகிருஷ்ணன் இதில் கட்சியின் தலைவர்கள் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை, மாநில உரி மைகள் பறிப்பு, தொழிலாளர் பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேசினர்.
நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக
கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், “சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 12 நாட்கள் நடைபெற்றது. ஆனால் உருப்படியாக 2 முதல் 4 நாட்களே விவாதம் நடந்தது. அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் கோரியபோது நான்கு நாட்கள் கூட்டத்தை ஒத்திவைத்தனர். அண்ணல் அம் பேத்கர் குறித்த விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இழி கருத்துக்களால் இரண்டு நாட்கள் கூட்டம் முடங்கியது. அரசிய லமைப்புச் சட்டம் 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பிரதமர் மோடி பதிலளிக்க வில்லை” என்றார். “2014-இல் ஆட்சிக்கு வந்த பின், பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, மோச மான சட்டங்களைக் கொண்டுவந்து மனித உரிமைகளைப் பறிக்கிறது. மாநில உரிமைகள் பறிப்பு, நிதிப் பகிர்வு, கல்வி உரிமை, நீட் தேர்வு திணிப்பு போன்ற பிரச்சனைகளில் திமுக வுடன் இணைந்து போராடியுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் உள்ளிட்ட தொழிலாளர் வர்க்கப் பிரச்சனைகளில் அரசின் கொள்கைகளை எதிர்த்தும் உறுதியாகப் போராடுகிறோம்” என்றார்.
பாஜக மகளிர் அணியின் போராட்டம் சுயநலமானது
மாநில செயற்குழு உறுப்பினர் கே. பால பாரதி பேசுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலில் போராடியது அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கமே. இப்போது பாஜக மகளிர் அணி கால் சிலம்பு டன் நாடகமாடுகிறது. குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை யாகும்போது இவர்கள் ஏன் போராடவில்லை? பாஜக ஆளும் 16 மாநிலங்களில் பெண் களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார். “கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை போட்டும் குற்றவாளி களை கண்டுபிடிக்கவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக, அதிமுக சுயநல அரசியலுக்கு பயன்படுத்து கின்றன. அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் யார் அந்த ‘சார்’ என்ற கேள்விக்கு தமிழக அரசு விடை சொல்ல வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் காவல்துறை தவறி வருகிறது” என்று சாடினார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன் பேசுகையில், “சமீபத்திய புயல், வெள்ளத்தால் தமிழகத்தில் 10 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மட்டும் 3 லட்சம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் மண் மூடி நாச மானது. ஒரு லட்சம் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆனால் ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை. தமிழக பாஜக தலைவர்கள் நிவாரணம் கேட்டு குரல் கொடுக்கவில்லை” என்றார். “விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை வழங்க மறுக்கும் மோடி அரசு, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை ஏற்க மறுக்கிறது. கடன் தள்ளுபடி கோரிக்கையை யும் நிராகரிக்கிறது. வேளாண் சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் உயிர்த் தியாகம் செய்தனர். இப்போது கொல்லைப்புற வழியாக அதே சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிபிஎம் தொடர்ந்து போராடும்” என்று ரவீந்திரன் அறி வித்தார்.