articles

img

விழுப்புரம் மக்களின் கோரிக்கைகளுக்காக களம் காணும் சிபிஎம் - என்.சுப்பிரமணியன் ,விழுப்புரம் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)

   விழுப்புரம் மாவட்டம் இரண்டு கோட்டங்கள், ஒன்பது தாலுக்காக்  கள், 34 குறு வட்டங்கள், 932 வருவாய் கிராமங்கள் மற்றும் 1,500க்கும் மேற்  பட்ட குக்கிராமங்களைக் கொண்டுள் ளது. மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதி கள், 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 668 கிராம ஊராட்சிகள் உள்ளன. மக்கள்தொகை மற்றும்  சமூக அமைப்பு 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 20,85,790  ஆகும். இதில் சுமார் 5 லட்சம் குடும்பங் கள் உள்ளன. ஒரு லட்சம் குடும்பங்கள் நகர்ப்புறங்களிலும், 4 லட்சம் குடும்பங்  கள் கிராமப்புறங்களிலும் வசிக்கின்றன.  மக்கள்தொகையில் 50% பிற்படுத்தப்  பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள், 30% தாழ்த்தப்பட்ட மற்றும்  பழங்குடியினர், 10% சிறுபான்மையினர் ஆகியோர் அடங்குவர். மாற்றுத்திற னாளிகள் சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்

பொருளாதார நிலை

மாவட்டத்தின் முக்கியத் தொழில் விவசாயமாகும். 13 லட்சத்திற்கும் மேற்  பட்டோர் சிறு, குறு விவசாயிகள், ஏழை  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்களாக உள்ளனர். அமைப்புசார் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளனர். இதில் 80% பேர் அமைப்புசாரா தொழி லாளர்கள். சிறு வியாபாரிகள் 5% பேர் உள்ளனர்.

பிரதான சவால்கள்

1.     கல்வி: மாநில அளவில் கல்வியில் கடைசி இரண்டு, மூன்று இடங்களில் 
உள்ளது.
2.     வருமானம்: தனிநபர் வருமானத் தில் கடைசி 5 மாவட்டங்களில் ஒன்று.
3.     வீட்டுவசதி: தமிழ்நாட்டின் மொத்த குடிசைகளில் 11% இம்மாவட்டத்தில் உள்ளது.
4.     விவசாய நெருக்கடி:
-     உரம், பூச்சி மருந்து, விதைகளின் விலை உயர்வு
-     மானியங்கள் குறைப்பு
-     கடன் தள்ளுபடி இல்லாமை
-     கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை
-     பாசன வசதிகள் குறைபாடு
5.     தொழில்மயமாக்கல் இன்மை:
- புதிய தொழிற்சாலைகள் இல்லாமை
- வேலைவாய்ப்பு பற்றாக்குறை
- இளைஞர்கள் வெளியேற்றம்
தீர்வுக்கான வழிகள்
1. விவசாயத்தை பலப்படுத்த:
- பாசன வசதிகளை மேம்படுத்துதல்
- விவசாய மானியங்களை அதிகரித்தல்
- கடன் வசதிகளை எளிதாக்குதல்
2. கல்வி மேம்பாடு:
-     கல்வி உட்கட்டமைப்பை மேம் படுத்துதல்
-     தொழிற்கல்வியை ஊக்குவித்தல்
-     இடைநிற்றலைத் தடுத்தல்
3. தொழில்மயமாக்கல்:
-     புதிய தொழிற்சாலைகளை நிறுவு
தல்
-     சிறு, குறு தொழில்களை ஊக்கு
வித்தல்
- திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குதல்
4. அடிப்படை வசதிகள்:
- சாலை வசதிகளை மேம்படுத்துதல்
- குடிநீர் வசதிகளை உறுதி செய்தல்
- மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துதல்
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொட
ர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.