மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சித் திட்டத் திலேயே வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதையும், சிறுபான்மை மக்களைப் பாதுகாப்பதையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. மத ரீதியான பழமைவாதம், பத்தாம்பசலித்தனம், மத வெறி மற்றும் சாதியம் மக்களைப் பிளவுபடுத்தி, அவர்களது ஜனநாயக உணர்வுகளைக் குலைக்கின்றன எனக் கூறும் கட்சித் திட்டம், அரசின் மதசார்பற்ற தன்மை உறுதி செய்யப்படும் என்றும், மத ரீதியான சிறுபான்மையோர் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களின் மதங்களுக்கு எதிரான எத்தகைய பாரபட்சமும் தடுக்கப்படும் என்றும் பிரகடனப்படுத்துகிறது.
வழிபாட்டுரிமை பாதுகாப்பு பாபர் மசூதி பிரச்சனை
சிறுபான்மை மக்களின் வழிபாடு உரிமை யைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. எனவே தான் சங் பரிவாரங்கள் தங்களது வகுப்புவாத அரசியல் நிகழ்ச்சி நிரல் அடிப்படையில் பாபர் மசூதி பிரச்சனையைக் கையிலெடுத்த போது சிறுபான்மை மக்களின் பக்கம் மார்க்சிஸ்ட் கட்சி நின்றது. இப்பிரச்சனையில் காங்கிரஸ் தலைமையி லான அரசு ஊசலாடிய போதெல்லாம் அத்த கைய நிலைபாடு இந்தியாவின் அரசிய லமைப்புச் சட்டம் வகுத்துள்ள மதசார்பின்மை கோட்பாட்டைச் சிதைத்து விடும் என்று எச்சரித்தது. பாபர் மசூதி பிரச்சனையில் அர சின் ஊசலாட்டம் முஸ்லீம்களின் பிற வழி பாட்டுத் தலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் ஆபத்துள்ளது என்பதைக் கூறி எச்சரித்தது மார்க்சிஸ்ட் கட்சி. அன்றைய காங்கிரஸ் அரசு பாபர் மசூதியின் சீல்களை அகற்றி, அதைத் திறந்து சங் பரிவாரத்தினர் வழிபாடு நடத்த அனு மதித்த போதும், அங்கு சிலன்யாஸ் எனும் செங்கல் பூஜை நடத்த அனுமதித்த போதும் கடுமையாகக் கண்டித்தது மார்க்சிஸ்ட் கட்சி. அத்வானி தலைமையில் கர சேவகர்கள் என்ற பேரால் சங் பரிவாரக் குண்டர்கள் ஆயுதங்களு டன் யாத்திரை நடத்தி அயோத்தி நோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வற்புறுத்தியது. மசூதி தகர்ப்பு சம்பவத்தின் போது, அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டும், நரசிம்மராவ் அரசு மசூதி தகர்க்கப்படுவதை வேடிக்கைப் பார்த்து நின்றது.
தற்கால சவால்கள்
பாபர் மசூதியைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது சங் பரி வாரத்தினர் தொடர் தாக்குதல் தொடுப்பர் என மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்தது போலவே, தற்போது: - மதுரா ஈத்கா மசூதி - வாரணாசி ஞானவாபி மசூதி - சம்பல் சாஜி ஜுமா மசூதி - ஆஜ்மீர் தர்கா போன்ற 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு, தற்போது வரை முஸ்லீம்கள் வழிபாடு நடத்தி வரும் வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் சங் பரிவாரங்களால் குறி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப் பாளர் தோழர் பிரகாஷ் கராத் உச்சநீதிமன்றத் தில் இடையீட்டு மனு தாக்கல் செய்து 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றும், கறாராக அமல்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரியது.
சிறுபான்மையினரின் வாழ்வியல் பிரச்சனைகள் சச்சார் கமிட்டி முன்னெடுப்புகள்
2004-ல் மன்மோகன் சிங் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்த போது தோழர் சீத்தாராம் யெச்சூரி குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கினார். அப்போது தான் சிறுபான்மை முஸ்லீம்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த பின்னர் அந்த அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 2007 மார்ச் 30-ல் புதுதில்லியில் சிறப்பு மாநாடு நடத்தி, கோரிக்கைகளை இறுதிப்படுத்தி பிரதமரிடம் வழங்கியது. இத்தகைய முன்னெடுப்பை செய்த ஒரே மதசார்பற்ற கட்சி மார்க்சிஸ்ட் கட்சி தான்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள்
நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரைப்படி முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென ஒன்றிய அரசைக் கோரியதோடு, அதை அமலாக்க மேற்கு வங்க இடது முன்னணி அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
சட்ட ரீதியான போராட்டங்கள்
- வக்ப் வாரிய திருத்தச் சட்டத்தை நாடாளு மன்றத்தில் கடுமையாக எதிர்த்தது - பொது சிவில் சட்டம் எனும் திட்டத்தை எதிர்த்து நிற்பது - 1991-ல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய மதவழிபாடு தலங்கள் குறித்த சட்டம் நிறைவேற்றப்படவும் முக்கிய பாத்திரம் வகித்தது
பாதுகாப்பு நடவடிக்கைகள் குஜராத் கலவரத்தின் போது
குஜராத்தில் மோடி ஆட்சியின் போது கோத்ராவில் சபர்மதி ரெயில் விபத்தைக் காரணம் காட்டி முஸ்லீம்கள் வேட்டையாடப் பட்டனர். 2000 முஸ்லீம்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கூட கொன்று குவிக்கப் பட்டனர். பெண்கள் பாலியல் கொடுமை களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதற்கு எதிராக நாடு தழுவிய கண்டன இயக்கம் நடத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. கூப்பிய கையுடன் உயிருக்கு மன்றாடிய குத்புதீன் எனும் இளைஞரை மேற்கு வங்கத்தில் உள்ள இடது முன்னணி அரசு பாதுகாத்தது. முசாபர்பூரில் சிறுபான்மை முஸ்லீம்கள் மீது சங் பரிவார குண்டர்கள் கடும் தாக்குதல் நடத்திய போது அம்மக்களுக்காக களத்தில் இறங்கிய மார்க்சிஸ்ட் கட்சி வீடிழந்த மக்க ளுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுத்து, பாது காத்தது.
தற்கால சவால்களில் தலையீடுகள்
சி.ஏ.ஏ. எனும் சட்டம் பாய்ந்த போது அதற்கெதிராக நாடாளுமன்றத்தில் வாதாடி, எதிர்த்து வாக்களித்ததோடு அம்மக்களின் போராட்டங்களில் அவர்களோடு இணைந்து களத்திலே நின்றது. சிறுபான்மை முஸ்லீம்களின் வீடுகளை புல்டோசர் மூலம் தகர்த்து, அவர்களது வாழ்விடத்தையும், வாழ் வாதாரத்தையும் தகர்த்த போது அதற்கெதிராக குரல் கொடுத்ததோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா கராத் அவர்கள் நீதிமன்ற தடையாணையுடன் தெருவில் இறங்கி, புல்டோசரைத் தன்னந்தனியராக தடுத்து நிறுத்தினார். வழக்கோ, விசாரணையோ இன்றி பல்லாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டி ருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் பிர காஷ்கராத் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அவர்களது விடுதலைக்காக கோரிக்கை வைத்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் வற்புறுத்தினார்.
கிறிஸ்தவ சமூகத்திற்கான ஆதரவு
முஸ்லீம்கள் மட்டுமன்றி சிறுபான்மை கிறிஸ்தவர்களும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மண்டைக்காடு கலவரத்தின் போது சிறுபான்மை கிறிஸ்தவ மீனவர் களோடு நின்ற மார்க்சிஸ்ட் கட்சி நீதிபதி வேணு கோபால் கமிசன் முன்னர் ஆஜராகி வாதாடி யவை சிபாரிசுகளாக கமிசன் அறிக்கையில் இடம்பெற்றது. மைக்கேல்பட்டி பள்ளியில் மாணவி யின் தற்கொலையை ஒட்டி அதை மதமாற்றத்தி னால் ஏற்பட்டது என்று கூறி சிறுபான்மை பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக மதச்சாயம் பூசிட முயற்சித்த போது அதை எதிர்த்து களத்தில் இறங்கியது மார்க்சிஸ்ட் கட்சி. மணிப்பூரில் பழங்குடி கிறிஸ்தவ மக்கள் மீதான தாக்குதலும், தேவாலயங்கள் மீதான கலவரமும் தொடர்கிறது. அதில் மார்க்சிஸ்ட் கட்சி சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறது. ரெங்கநாத் மிஸ்ரா கமிசன் கிறிஸ்தவர் களான பட்டியலின மக்களுக்கும் இந்துக் களுக்கு நிகரான சலுகைகளும் உரிமை களும் வழங்க சிபாரிசு செய்த போது அதற்காக குரல் கொடுத்து இயக்கம் நடத்திக் கொண்டி ருப்பதும் மார்க்சிஸ்ட் கட்சியே.
சிறுபான்மை மக்களின் பாதுகாவலன்
கொள்கை அடிப்படையில் கருத்தியல் ரீதியாகவும், களத்திலும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமைக்காக உணர்வு ரீதியாக அவர்களுடன் இணைந்து நிற்பது மார்க்சிஸ்ட் கட்சி. சிறுபான்மை மக்க ளுக்கு எதிராக வகுப்புவாத வன்முறை யாளர்களை எதிர்த்து களத்தில் போராடியதன் மூலம் பல கம்யூனிஸ்டுகள் தங்களது இன்னு யிரைத் தியாகம் செய்துள்ளனர். சிறுபான்மை மக்களின் உரிமைக்காக சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி பெரும் பான்மை மக்களும் இணைந்து நிற்க வேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்னும் உன்னத லட்சியத்துடன் அனைத்து சமூக மக்களையும் இணைத்து செயல்படும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு விலும் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
சமரசம் இல்லை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியே சிறுபான்மை மக்களின் உரிமை களையும், பாதுகாப்பையும் உத்தரவாதப் படுத்தும். கட்சியின் கொள்கைகளும், செயல்பாடுகளும் சிறுபான்மை மக்களின் நலனுக்கான சமரசமற்ற போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றன.