இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்த கைகோர்த்துள்ளனர். பாஜக கூட்டணி (என்டிஏ)-3 அரசின் பெருநிறுவனக் கொள்கைகளை எதிர்த்துப் போராட நவம்பர் 26, 2024 அன்று உறுதி பூண்டுள்ளனர். 2020ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் பொதுவேலைநிறுத்தம் மற்றும் விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி அணிவகுப்பின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இது. அந்தப் போராட்டம் விவசாயத்தில் பெரு நிறுவன மயமாக்கலை நோக்கமாகக் கொண்ட மூன்று கருப்புச் சட்டங்களை பாஜக கூட்டணி (என்டிஏ)-2 அரசு திரும்பப் பெற வழிவகுத்தது. அதே நாளில்தான் 1949இல் இந்திய அரசியலமைப்பும் முதன்முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் 13 மாதங்கள் தொடர வேண்டியிருந்தது, 736 தியாகிக ளின் உயிர்ப்பலியும் ஏற்பட்டது.
நாடு தழுவிய பங்கேற்பும் ஆதரவும்
ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள சுமார் 500 மாவட்டங்களில் நடைபெற்ற தொழிலாளர்-விவசாயி கூட்டுப் போராட்டத்தில் சுமார் பத்து லட்சம் மக்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணிகள் பெரும்பாலும் மாவட்டத் தலைமையகங்களில் நடைபெற்றன. பல மாநிலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவிலும், தொழிற்சாலைப் பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களாக நடத்தப்பட்டன. காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறை ஊழியர்களின் பங்கேற்புடன் பல அலுவலகங்களில் மதிய உணவு நேர ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கூட்டு மனு அளிக்கப்பட்டது.
அடக்குமுறைகளும் எதிர்ப்புகளும்
பீகாரின் பாகல்பூரில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த தொழிலா ளர்கள் மற்றும் விவசாயிகள் மீது போலீசார் வன்முறையில் ஈடுபட்டனர், தடியடியும் நடத்தினர். ஆறு பேர் காயமடைந்தனர். மூன்று தலைவர்களை போலீசார் கைது செய்தனர். பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் -பாஜக கூட்டணி அரசின் தொழிலாள வர்க்க விரோத குணாம்சத்தை இந்தச் சம்பவம் அம்பலப் படுத்தியது.
அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு, சுயேச்சைத் துறைசார் கூட்டமைப்புகள்/சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) ஆகி யவை இணைந்து இந்தக் கூட்டுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
சமூகப் பிரிவுகளின் பங்கேற்பு
பிற சமூகப் பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது. பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள், பிற தொழில் வல்லுநர்கள், கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் துறையினர் தங்கள் கோரிக்கைகளுடன் இணைந்து, தொழிற் சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோ ரிக்கைகளுக்கு ஆதரவாகவும் பங்கேற்றனர். பல இடங்களில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள், சிறு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் போராட்டத்தில் இணைந்து, தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தவாறு ஆதரவு அளித்தனர்.
உள்ளூர் அளவிலான செயல்பாடுகள்
தங்களது செல்வாக்குள்ள பகுதிகளில் பல உறுப்பு அமைப்புகளால் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது நாடு முழுவதும் தெரியக்கூடிய போராட்டத்தை உறுதி செய்ய உதவி யது. திட்டப் பணியாளர்கள் பரவலாக போராட்டத்தில் இணைந்தனர். நாடு முழுவதும் பெண்களின் பெரும் பங்கேற்பை காண முடிந்தது. கடந்த ஆண்டுகளில் எஸ்கேஎம் மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் தொடரில், நாடு முழுவதும் உறுப்பு அமைப்பு களுக்கிடையேயான ஒருங்கிணைப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் தாக்கமும் எதிர்காலத் திட்டங்களும்
இந்த மக்கள் நடவடிக்கை ஆளும் வர்க்கத்திற்கும் அதன் முதன்மை அரசியல் கட்சியான பாஜகவிற்கும் ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்தது. விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைகளில் பெருநிறுவன ஆதிக்கத்தை திணிக்க மக்கள் அனுமதிக்க மாட்டார் கள் என்பதையும், மக்கள்தொகையில் பெரும் பான்மையாக உள்ள இரண்டு உற்பத்தி வர்க்கங்க ளான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அடிப்படை மற்றும் நியாயமான உரிமைகளை பாஜக கூட்டணி (என்டிஏ) 3 அரசால் புறக்கணிக்க முடியாது என்பதையும் இது காட்டுகிறது.
மக்கள் இயக்கங்களின் வளர்ச்சி
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மிகப்பெரிய அமைப்புகளின் தலைமையின் கீழ் தொடர்ச்சியான வர்க்க நடவடிக்கைகள் மூலம் வளர்ந்து வரும் இந்த விஷய அடிப்படையிலான ஒற்றுமை நாட்டின் அரசியல் செயல்முறையை தீர்மான கரமாக பாதிக்கிறது. விலைவாசி உயர்வு, வேலை யின்மை, சமூகப் பாதுகாப்பின்மை, இடம்பெயர்வு நெருக்கடி, கடுமையான விவசாய நெருக்கடி உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எரியும் பிரச்சனை களை இப்போது எந்த முக்கிய அரசியல் கட்சிகளா லும் புறக்கணிக்க முடியவில்லை.
நவதாராளவாத கொள்கைகளின் தாக்கம்
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக புதிய தாராளவாதக் கொள்கைகளின் திணிப்பு, கடந்த ஒரு தசாப்தத்தில் பாஜக கூட்டணி ஆட்சியின் கீழ் தீவிரமடைந்தது ஆகியவற்றின் நேரடி விளைவாக இந்தப் பிரச்சனைகள் உள்ளன. உற்பத்திச் செலவு அதிகரிப்பு, லாபகரமான விலை மறுப்பு மற்றும் பண வீக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஊதிய மறுப்பு ஆகிய வடிவத்தில் விவ சாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தின் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல் மக்கள் போராட்டங்களுக்கான முக்கிய பிரச்சனைகளாக மாறியுள்ளன. கடுமையான விவசாய நெருக்கடி மற்றும் அதன் விளைவாக பெரிய அளவிலான கிராமப்புறத்தி லிருந்து நகர்ப்புறத்திற்கான இடம்பெயர்வு நெருக்கடி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள தொழிலாளர்களின் துயரத்தில் கனமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தொழிலாளர்-விவசாயி கூட்டணியின் அவசியம்
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான பெரு நிறுவனத் தாக்குதலை எதிர்த்துப் போராடவும், உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்கான மாற்றுக் கொள்கைகளை உறுதி செய்யவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணி அவசி யமாகிறது. 2021 டிசம்பர் 9 அன்று எஸ்கேஎம் உடன் செய்த எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை செயல்படுத்த பாஜக கூட்டணி அரசு மறுக்கிறது. அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை செயல்படுத்த திட்டமிடுகிறது.
போராட்டத்தின் பன்முக கோரிக்கைகள்
கொள்கை சார்ந்த கோரிக்கைகளைத் தவிர, மாவட்ட அளவில் உறுப்பினர்களால் பல உள்ளூர் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. குறைந்த பட்ச ஆதரவு விலை, குறைந்தபட்ச ஊதியம், வேலை உத்தரவாதம், சமூகப் பாதுகாப்பு, அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய கோரிக்கைகளுடன், 12 அம்ச முக்கிய கோரிக்கைகளில் வகுப்புவாத பிரிவி னையைத் தடுக்க கடுமையான சட்டங்கள், சிறு பான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியி னருக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவையும் அடங்கும்.
விவசாயத் தொழிலாளர் இயக்கங்களின் பங்கு
கடந்த காலங்களில் எஸ்கேஎம் மற்றும் தொழிற் சங்கங்களின் கூட்டு அழைப்புகளில் விவசாயத் தொழி லாளர் இயக்கம் மிகவும் பங்கேற்றிருந்த போதிலும், இம்முறை தொழிற்சங்கம் அல்லது விவசாய அமைப்புகளில் இல்லாத விவசாயத் தொழிலாளர் சங்கங்களையும் ஈடுபடுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. இந்த முயற்சியின் தாக்கம் போராட் டத்தில் கிராமப்புற தொழிலாளர்களின் பெரும் பங்கேற்பில் பிரதிபலித்தது. கிராமப்புற பணக்கார கூட்டணிக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டங்க ளை மேம்படுத்தவும், நீண்ட காலத்தில் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமையை கட்டமைக்கவும் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (ஏஐகேஎஸ் மற்றும் ஏஐஏடபிள்யு) இணைந்து பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. இது அடித்தள அளவில் ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிகளில் ஒரு தரமான முன்னேற்றமாகும்.
பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்காலத் திட்டங்களும்
அறிக்கைகளின்படி, அதிகபட்ச மாநிலங்களில், மாநில மற்றும் மாவட்ட அளவில் மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் தளத்தின் உறுப்பு அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2024 நவம்பர் 7 முதல் 25 வரை வாகன ஊர்வலம், சைக்கிள் ஊர்வலம், பாத யாத்திரை மற்றும் துண்டு பிரசுர விநியோகத்திற்கான வீடுவீடாகச் சென்று சந்திக்கும் பணி உள்ளிட்ட தாலுகா மற்றும் கிராம அளவில் பரந்த பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டது. அடித்தள அளவில் செயற்பாட்டா ளர்களின் ஒற்றுமையை உறுதி செய்வதிலும், அதிகபட்ச உழைக்கும் மக்களை சென்றடைவதிலும் இந்தப் பணி முக்கியமானதாக இருந்தது. முக்கிய கோரிக் கைகளை முன்னிலைப்படுத்த துண்டுப்பிரசுரம் மற்றும் பல சுவரொட்டிகள் உள்ளிட்ட பிரச்சாரப்பொருட்கள் வடிவமைக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டன, அவை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
எதிர்கால இலக்குகளும் செயல்திட்டங்களும்
வரும் நாட்களில் முக்கிய பணி என்னவென்றால், இந்தியா முழுவதும் கிராமம்-தொழிற்சாலை-பணியிட அளவில் தொழிலாளர்கள் மற்றும் விவ சாயிகளின் ஒற்றுமையை வளர்க்க தளங்களுக்கி டையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவ தாகும். அது தொழிலாளர்-விவசாயி ஒற்றுமைக்கு பெருநிறுவன ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த போதுமான வலிமையை திரட்ட உதவும். அதன்மூலம் தங்களது நியாயமான உரிமை களை பெறவும், விவசாய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரவும், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் மாற்றுக் கொள்கைகளை ஏற்க நிர்ப்பந்திக்கவும் முடியும். மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் எஸ்கேஎம் விரைவில் சந்தித்து பிரச்சாரம் மற்றும் பங்கேற்பை மதிப்பாய்வு செய்து, பதவியில் உள்ள அரசின் பெருநிறுவன ஆதரவு கொள்கை முறையில் மாற்றத்தை உறுதி செய்வதற்காக மேலும் தீவிரமான போராட்டங்களை திட்டமிடும்.
தமிழில் : எஸ்.பி.ஆர்