articles

img

கடலில் தத்தளிப்பவரை காப்பாற்றாமல் புதிய படகு வாங்கப் புறப்பட்ட மோடி அரசு - கே.பி.பெருமாள்

உற்பத்தி செய்யும்  பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிய அரசு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் மொத்தம் ரூ.14,235.30 கோடி யில் ஏழு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. அந்த ஏழு திட்டங்கள் வருமாறு:

1.டிஜிட்டல் அக்ரிகல்ச்சர்  மிஷன் (விவசாய இயக்கம்) 

டிஜிட்டல் விவசாய இயக்கத்திற்கு, விவசாயிக ளின் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த பணிக்கு ரூ.2817 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விவசாய பதிவேடு, கிராம நில வரைபட பதிவு, பயிர் விதைக்கப்பட்ட பதிவு மற்றும் புவிசார் தரவு, வறட்சி, வெள்ளம் கண்காணிப்பு, வானிலை, செயற்கைக் கோள் தரவு, நிலத்தடி நீர், நீர் இருப்பு தரவு, பயிர் விளைச்சல், காப்பீடு, மண் விவர குறிப்பு, டிஜிட்டல் பயிர் மதிப்பீடு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் பிக்டேட்டா போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மொபைல் போன்களில் புதிய அறிவைக் கொண்டு வருதல் உள்ளிட்டவைகளை செயல்படுத்திடவும்.  2.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான பயிர் அறிவியல் இந்த திட்டத்திற்கு ரூ.3979 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளை கால நிலையை எதிர்க்கும் தன்மைக்கு தயார்ப்படுத்துதல் மற்றும் 2047க்குள் உணவுப்பாதுகாப்பை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படும்.

3.விவசாயக் கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை வலுப்படுத்துதல்
இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.2291 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை தற்போதைய சவால்களுக்கு தயார்ப்படுத்துதல் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியை நவீனப்படுத்துதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் மற்றும் ஏஐ தொழில்நுட்பம், ரிமோட் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த செல விடப்படும்.  4.நிலையான கால்நடை ஆரோக்கியம்  மற்றும் உற்பத்தி இந்த திட்டத்தில் 1702 கோடி ரூபாய் செலவில் கால்நடைகள் மற்றும் பால் உற்பத்தி மூலம் விவ சாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்க மாகக் கொண்டது. இதில் விலங்கு சுகாதார மேலாண் மை மற்றும் கால்நடைக் கல்வி, பால் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, விலங்கு மரபணு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் மேம்பாடு, விலங்குக ளின் ஊட்டச்சத்து உள்ளிட்டவைகளுக்கு செல விடப்படும். 

5.தோட்டக்கலை துறையின்  நிலையான வளர்ச்சி

இந்த திட்டத்தில் ரூ.1129.30 கோடி செலவில் தோட்டக் கலை ஆலை மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. இதில் மித மான தோட்டக்கலை பயிர்கள், வறண்ட பயிர்கள், காய்கறி, மலர் வளர்ப்பு மற்றும் காளான் பயிர்கள், மசாலா, மருத்துவம் மற்றும் நறுமண தாவரங்கள் வளர்ச்சிக்கு இந்த நிதி செலவிடப்படும்.  6.கிருஷிவித்யான் கேந்திராவை பலப்படுத்துதல் கிருஷிவித்யான் கேந்திராவை பலப்படுத்திட ரூ.1202 கோடி செலவிடப்படும். 7.இயற்கை வள மேலாண்மை இயற்கை வள மேலாண்மையை பலப்படுத்திட 1115 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று தெரி வித்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. 

இரட்டிப்பு வருவாய் அறிவிப்பு

2016ஆம் ஆண்டு பிப்ரவரி 28இல் பிரதமர் நரேந்திரமோடி 2022-23ஆம் ஆண்டிற்குள் விவசாயி களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று தெரிவித்தார். இது நாட்டின் 75ஆவது சுதந்திர தின பரிசு என்றார். கடந்த 9 ஆண்டுகளில் 2016ஆம் ஆண்டு  விவசாயிகள் எவ்வளவு வருமானம் பெற்றார்கள். இப்போது எவ்வளவு வருமானம் பெறுகிறார்கள் என்ற புள்ளி விவரங்கள்- இந்த அடிப்படையான புள்ளி விவரங்கள் - எதையும்  ஒன்றிய அரசு இன்று வரை தெரிவிக்கவில்லை.  மறுபுறத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கா மலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களாலும் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த தற்கொலை விவரங்கள் மூலம் தெரிய வருவது விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் அல்ல, அவர்கள் செலவு செய்த பணம் கூட கிடைக்க வில்லை என்பதே. அதனால் விவசாயிகள் தற்கொலை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த இரட்டிப்பு வருவாய் “கேப்பையில் நெய்வடிகிறது” என்ற பழமொழிக்கு ஏற்ப உள்ளது. 

விவசாயிகள் போராட்டம்

இக்காலத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க மிக வலுவான விவசாயிகளின் போராட்டங்கள் நடந்துள்ளன. ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் அளவுக்கு போராட்டங்கள் நடந்துள்ளன. இப்போராட்டத்தையொட்டி விவசாயிகளோடு ஒன்றிய அரசு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந் தத்தில் தெரிவித்த கோரிக்கைகளில் அரசு ஒன்றைக் கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. இதனால் ஒன்றிய அரசுக்கு எதிராக மீண்டும் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது.  குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) சி2+50 என்ற அடிப்படையில் தீர்மானித்திடவும், அதற்கான மத்திய சட்டம் அரசு கொண்டு வரவும், விவசாயி களின் கடனை தள்ளுபடி செய்திடவும் வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பஞ்சாப்- ஹரியானா எல்லையான கனவுரி யில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித்சிங் தல்லேவால் கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அதே போல பஞ்சாப், ஹரியானா மாநிலங்க ளில் பல இடங்களில் மகாபஞ்சாயத்துக்கள் மோடி அரசுக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.  இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் தலையிடாமல் ஒன்றிய அரசு புதிதாக விவசாயிக ளுக்கு ஏழு திட்டங்களை அறிவித்து அதன் மூலம் விவசாயிகள் இரட்டிப்பு வருவாயையும், 2047இல் உணவு பாதுகாப்பையும் செயல்படுத்துவோம் என்று தெரிவிக்கிறார்.  பிரதமர் அவர்களே, நீங்கள் தெரிவித்துள்ள ஏழு திட்டங்கள் ஒன்று கூட விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்காது. ஆனால் விவசாயிகளுக்கு உடனடிப் பலன்கள் தரக்கூடிய சி2+50 அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் அதற்கான மத்திய சட்டம், விவசாயிகளுக்கு விளை பொருட் களை அதிக அளவில் கொள்முதல் செய்தல், உரம், பூச்சி மருந்து மற்றும் இடுபொருட்களின் விலை குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதும், விவ சாயக் கடனை தள்ளுபடி செய்திடுவதும் உள்ளிட்டவை கள் தான் இப்போது தேவை. அவ்வாறு கிடைத்தால் தான் விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க முடியும். அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும்.  ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு எப்படி உள்ளது என்றால் “கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவரை காப்பாற்றாமல் பொறுமையாக இரு நான் புதிதாக படகு வாங்கி வந்து உன்னை காப்பாற்றுகிறேன்” என்பது போல் உள்ளது.  பிரதமர் அவர்களே, இந்த ஏமாற்று வேலையைக் கைவிட்டு விட்டு உடனடியாக, போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிட நட வடிக்கை எடுக்க வேண்டும். உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித்சிங் தல்லேவால் அவர்களை காப்பாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசே எங்களு க்கு தேவை 7 அம்ச திட்டம் அல்ல. சி2+50 அடிப்ப டையில், குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளு படி, டிஏபி உர மானியம் உள்ளிட்டவைகளே எங்க ளுக்கு தேவை. இதனை புறம் தள்ளினால் விவசாயி கள் நாடு முழுவதும் மீண்டும் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை முன்னெடுப்பார்கள். கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர்