articles

img

யானைகளின் இடதும் வலதும்

யானைகளின் இடதும் வலதும்

மனிதர்களிடம் இடது அல்லது வலது கை பழக்கம் காணப்படுவது போல தும்பிக்கையில் இருக்கும் சுருக்கங்களை வைத்து ஒரு யானை இடது அல்லது வலது தும்பிக்கை பழக்கமுடையதா என்று கண்டறியமுடியும். தும்பிக்கையின் எந்த பக்கத்தை பயன்படுத்தவேண்டும் என்பதை ஒரு யானை தன் விருப்பப்படி முடிவு செய்கிறது. அவற்றின் தும்பிக்கைப்பழக்கம் (trunkedness) ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் உள்ளது. ஒரு வளர்ச்சியடைந்த யானை தும்பிக்கையை எந்த பக்கம் வளைக்க விரும்புகிறது என்பதை இதன்  மூலம் அறியலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்ற னர். இடது பக்க தும்பிக்கையை பயன்படுத்தும் ஒரு யானை அதன் உடலின் இடது பக்கத்தில் இருந்து பொருட்களை எடுக்கிறது. இவ்வகை யானை அதன்  இடது புறத்தில் சுருக்கங்களையும் நீண்ட உரோ மங்களையும் அதிகமாக பெற்றுள்ளது. தும்பிக்கையின் வலது பக்கத்தில் அதிக உரோ மங்கள் உடைய யானை தரையுடன் அடிக்கடி தொடர்பு  கொள்கிறது. “உரோமங்களின் நீளத்தில் காணப்படும்  வேறுபாடு பெரியது. தெளிவாக புலப்படக்கூடியது. சுருக்கங்களால் ஏற்படும் தாக்கம் மிக நுணுக்கமா னது என்றாலும் முக்கியமானது. யானைகளால் சுருக்கங்களில் உள்ள பாணி  பகுதியளவு பயன்படுத்தப்படுவதை இது எடுத்துக்காட்டு கிறது” என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரி யரும் ஜெர்மனி பெர்லின் ஹம்போல்ட் (Humboldt) பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் மைக்கேல் ஃப்ரெக்ட்க் (Dr Michael Brecht) கூறுகிறார். யானை களின் நடத்தை குறித்த ஆய்வுக்குழுவினரின் பல கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. இதுபற்றிய ஆய்வுக் கட்டுரை ராயல் சங்கத்தின் திறந்த அறிவியல் (Royal Society Open Science) என்ற இதழில் வெளிவந்துள்ளது. வாழ்நாள் முழு வதும் வளரும் ஆசிய மற்றும் ஆப்ரிக்க யானைகளின்  தும்பிக்கைச் சுருக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு இது. இறந்த மற்றும் உயிருடன் உள்ள யானைகளின் தும்பிக்கைச் சுருக்கங்கள் ஆராயப்பட்டது.  சுருக்கங்கள் அடியில் இருந்து நுனியை நோக்கி செல்லும்போது அதிகரிக்கின்றன. ஆப்பிரிக்க யானைகளை விட ஆசிய யானை களில் தும்பிக்கையின் ஒரு பக்கத்தில் சுருக்கங்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது குறித்து மேலும் ஆராய்ந்தபோது இச்சுருக்கங்கள் ஆழமான மடிப்பு களுடன் உள்ளது தெரியவந்தது. அக்கார்டியன் (accordion) என்ற இசைக் கருவியில் உள்ளது போல அமைந்துள்ள இச்சுருக்கங்கள் தும்பிக்கையை நெகிழ்வுடன் பயன்படுத்த யானைக்கு உதவுகிறது.

தும்பிக்கை என்ற வியத்தகு உறுப்பு

ஆசிய யானைகளில் தும்பிக்கையில் அதிகச் சுருக்கங்கள் காணப்படுவது ஏன் என்பதை இது விளக்குகிறது. ஆப்பிரிக்க யானைகளின் தும்பிக்கை முனையில் பொருட்களை பிடித்துக்கொள்ள இரண்டு விரல்கள் போன்ற அமைப்பு உள்ளது. ஆசிய யானை களில் இந்த அமைப்பு ஒன்று மட்டுமே காணப்படு கிறது. இதனால் இவை ஆப்பிரிக்க யானைகளைப் போல இல்லாமல் தும்பிக்கையால் பொருட்களை சுற்றிப்பிடித்து எடுக்கின்றன. இவ்வாறு செய்ய யானைக்கு அதன் தும்பிக்கை அதிக நெகிழ்வுடன் இருக்கவேண்டும். இதனால் தும்பிக்கை அதிக சுருக்கங்களுடன் உள்ளது. ஒரு  யானையின் தும்பிக்கையின் இரண்டு பக்கங்களி லும் உள்ள சுருக்கங்களின் எண்ணிக்கை சமமான தில்லை. இது அதன் தும்பிக்கை என்ற உறுப்பின் சிறப்புப் பண்பு. யானைகள் பிறக்கும்போதே சுருக்கங்  களுடன் பிறக்கின்றன. இது முன்பே அறிந்தது. என்றா லும் இப்புதிய ஆய்வு கருவில் இருக்கும்போது யானை களில் சுருக்கங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை விளக்குகிறது. கழிவுகள் ஆராயப்பட்டபோது கருநிலையில் (gestation) உள்ள யானைகளின் தும்பிக்கையில் 80  முதல் 150 நாட்களில் ஒவ்வொரு 20 நாளிலும் சுருக்கங்களின் எண்ணிக்கை இரு மடங்காகிறது. இதன் பிறகு இந்த வேகம் வியத்தகு முறையில் குறை கிறது. பின் சுருக்கங்கள் மெதுவாக அதிகரிக்கின்றன. ஆப்பிரிக்க யானைகளை விட ஆசிய யானைகளில் இந்த மாற்றம் துரிதமாக நடைபெறுகிறது. தும்பிக்கை உயர் சிறப்புக்குரிய உறுப்பு. இந்த சுருக்கங்கள் அவற்றின் மூளைத்தண்டில் (Brainstem) உள்ள நியூரான்களில் வரைபடமாக்கப்படுகிறது. “பொருட்களை பிடித்தெடுக்க உதவும் யானை யின் தும்பிக்கை என்ற அசாதாரண உறுப்பு அற்புத மானது. ஆச்சரியமானது. வேறெந்த பாலூட்டியின் உடல் உறுப்பின் அமைப்பில் காணப்படுவதை விட  யானையின் தும்பிக்கையில் அதிக தசைகள் உள்ளன. கை மட்டுமே இதனுடன் ஒப்பிடக்கூடிய ஒரே  ஒரு உறுப்பு” என்று டாக்டர் மைக்கேல் ஃப்ரெக்ட் கூறு கிறார். யானைகளின் இடது மற்றும் வலது தும்பிக்கை பழக்கம் நடத்தை பண்பில் நிகழ்ந்த வளர்ச்சி பற்றி மேலும் ஆழமாக அறிய விஞ்ஞானிகளுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.