விக்கிரமசிங்கபுரம் தியாகிகள்
1946ஆம் ஆண்டு விக்கிரமசிங்கபுரம் ஹார்வி மில் தொழிலாளிகள் கூலி உயர்வு மற்றும் சட்டப்பூர்வமான உரிமைகளைப் பெறுவதற்காக வேலை நிறுத்தம் செய்து போராடினர். போராட்டத்தை நசுக்க ஆலை யின் வெள்ளைக்கார முதலாளி போலீசை ஏவினார். போலீஸ் தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 4 தொழிலாளர்கள் கொல்லப் பட்டனர். அதே ஆலையில் நிர்வாகத்தின் அசிரத்தையினால் நாராயணன் என்ற தொழிலாளி அநியாயமாக இறந்து போனார். அவரது சடலத்தை ஒப்படைக்கும்படி தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். போலீஸ் வந்து மில் வாயிற் கதவுகளை மூடி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் அருணாசலம். ஐயினிமஸ்தான் என்ற இரண்டு தோழர்கள் கொல்லப்பட்டனர். ^ ^ ^
செம்மேடு பழனிச்சாமி
கோவை ஆலாந்துறை செம்மேடு பகுதிகளில் விவசாயத் தொழி லாளர் இயக்கத்திலும், சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி இயக்கத்தி லும் முன்னின்ற செயல்வீரர் மார்க்சிஸ்ட் கட்சியின் இளம்ஊழியர் தோழர் கே.ஜி.பழனிச்சாமி. 22.3.1975 அன்று நிலப்பிரபுக்கள் அவரை குண்டர்களை ஏவிக்கொலை செய்தனர். தோழர் பழனிச்சாமியின் பணிகளால் அந்த வட்டாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு வேகமாய் பரவியது. இதை அவ்வட்டார நிலப்பிரபுக்களால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. தோழர் பழனிச்சாமி தனியே வந்து கொண்டிருந்த போது 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் சேர்ந்து அவரை மாறுகால் மாறுகை வாங்கி வெட்டிப் படு கொலை செய்தனர். 34 வயதே ஆன தோழர் பழனிச்சாமியின் தியாகத்தால் அவ்வட்டாரத்தில் செங்கொடி இயக்கம் மேலும் வலுப்பட்டதே தவிர நிலப் பிரபுக்களின் ஆசை நிறைவேறவில்லை. ^ ^ ^
குடவாசல் தங்கையன்,
கொரடாச்சேரி கண்மணி திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 1995இல் உலக வர்த்தக அமைப்பு (உட்டோ)வின் காட் ஒப்பந்தத்தை எதிர்த்து கட்சி நடத்திய பேரணியை யொட்டி அதிமுக குண்டர்கள் தகராறு செய்தனர். இதையொட்டிய பிரச்சனை யில் அதிமுகவைச் சேர்ந்த ராஜேந்திரன் கும்பல், கட்சியின் மூத்த தோழர் தங்கையனை படுகொலை செய்தது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் 1994இல் சமூகவிரோதிகளால் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்த தோழர் கண்மணி படுகொலை செய்யப்பட்டார். தோழர் கண்மணி வாலிபர் சங்கத்தின் துடிப்புமிக்க ஊழியராக செயல்பட்டவர். ^ ^ ^
தஞ்சை தியாகிகள்
மாரி, ஆறுமுகம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மண்ணல்காடு கிராமத்தில் 1920 டிசம்பரில் பிறந்தவர் மாரி. மண்ணல் காடு கட்சிக்கிளை தொடங்கப் பட்ட காலம் முதல் தீவிரமாகச் செயல்பட்டவர். விவசாயிகள் இயக்கம் பேரெழுச்சியோடு எழுந்த காலக்கட்டத்தில் நில உச்சவரம்புச் சட்டத்தைத் திருத்தக்கோரி நடைபெற்ற மறியலில் பங்கேற்று சிறையிலடைக்கப்பட்டார். திருச்சி சிறையிலேயே உயிர் நீத்தார். பாபநாசம் வட்டம் சோமேஸ்வரம் கிராமத்தில் அறிவுறுவோன், கமலதாசன் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர். விவசாயக் கூலித் தொழி லாளர்கள் ஒன்றுபட்டு போராடிய சூழலில், சாதிப்பிரிவினையை ஏற்படுத்தி ஒற்றுமையை உடைக்க நிலவுடமையாளர்கள் சதி செய்தனர். அதை எதிர்த்து அருகாமை ஊரான கணபதி அக்ரஹாரம் கிராமத்தின் தோழர்கள் சோமேஸ்வரம் தோழர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெரும் நிலக்கிழாரும் ஒரு பேருந்து முதலாளியும் சேர்ந்து கூலிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தினர். இதில் தோழர் சோமேஸ்வரம் ஆறுமுகம் படுகொலை செய்யப்பட்டார். ^ ^ ^
பொன்மலை தியாகி
பரமசிவம் பொன்மலை ரயில்வே தொழிலாளர் இயக்கம் பெற்றெடுத்த வீரப் புதல்வன், தொழிற்சங்கத்தை கட்டிவளர்த்த ஒப்பற்ற தலைவன் பரமசிவம். வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெறித்தனமான அடக்குமுறை யை வீரமுடன் சந்தித்தவர். 1941 அக்டோபர் 17 அன்று கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் உயிருடன் திரும்ப முடியாமலே போய்விட்டது. சிறையில் அக்டோபர் 25 அன்று கடுமையான டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஜன்னி கண்டது. இதையடுத்து ஒரு இருண்ட கொட்டடியில் விடப்பட்டார். மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது. சிறையில் உள்ள மற்ற தோழர்களின் போராட்டத் தால், நோய் முற்றிய நிலையில் நவம்பர் 4 அன்று வேலூரில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நவம்பர் 6 அதிகாலை பரமசிவம் மரணமடைந்தார். தகவல் அறிந்து வேலூர் நகரமும் பொன் மலை தொழிலாளிகளும் கொதித்தெழுந்தனர். ^ ^ ^
அருப்புக் கோட்டை
சோமசுந்தரம் அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்ட் கட்சியையும் நெசவுத் தொழி லாளர் சங்கத்தையும் கட்டி வளர்ப்பதில் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டவர் தோழர் சோமசுந்தரம். சிறந்த கம்யூனிஸ்ட் ஊழியர். இவர் நெல்லை சதிவழக்கில் எதிரியாக சேர்க்கப்பட்டு இரண்டாண்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கொடுமைகள் தாளாது பெல்லாரி சிறையிலேயே தோழர் சோமசுந்தரம் மரணமடைந்தார். ^ ^ ^
தியாகிகள் ஆறுமுகம்
, அப்பாத்துரை சேலம் ஜவகர் மில் தொழிலாளி தோழர் ஆறுமுகம், ஆலைத் தொழிலா ளர்களின் உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் போராடி யவர். 1950 பிப்ரவரியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டு துளைத்து தோழர் ஆறுமுகம் வீரமரணமடைந்தார். ஆரம்பப்பள்ளி ஆசிரியரான தோழர் அப்பாத்துரை அரூர் தாலுகாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர், போலீஸ் அடக்குமுறைக்குப் பலியாகி 1952இல் மரணமடைந்தார். ^ ^ ^
அத்திக்கோம்பை தியாகி
எம்.ஏ.வெங்கடாசலம் ஒட்டன்சத்திரத்திம் அருகிலுள்ள அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் தோழர் எம்.ஏ. வெங்கடாசம். இவர் தேச விடுதலைப் போராட்டத் தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1940ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விவசாயிகள் சங்கத்தைக் கட்டுவதில் தீவிரமாகப் பணியாற்றி னார். 1948-51 கால கட்டத்தில் அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. தனது சொத்துக்களை விற்று வழக்குகளுக்குச் செலவிட்டு மீண்டார். செங்கொடி இயக்கம் பரவுவதை நிலப்பிரபுக்கள் மற்றும் ஆதிக்க சக்திகளால் பொறுத் துக் கொள்ள முடியவில்லை. ஏழை, எளிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சேவை செய்த தோழர் வெங்கடாசலம் 9.10.1959இல் வர்க்க விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். ^ ^ ^
திருச்சி சிங்காரவேலு
திருச்சி உறையூர் கைநெசவுத் தொழிலாளியான தோழர் சிங்காரவேலு கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த ஊழியராகச் செயல்பட்டார். 1946 மார்ச் மாதத்தில் காங்கிரஸ்காரர்கள் செங்கொடியை இறக்க வேண்டு மென்று மிரட்டினர். தோழர் சிங்காரவேலு உயிரே போனாலும் கொடியை இறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதிபடக் கூறினார். காங்கிரஸ் குண்டர்கள் தோழர் சிங்காரவேலுவை வெட்டிக் கொன்றனர். ^ ^ ^
புதுக்கோட்டை தியாகிகள்
புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் தோழர் சி. சண்முகம் 1956ஆம் ஆண்டு முதலாளிகளின் குண்டர்களால் படுகொலை செய்யப் பட்டார். அறந்தாங்கி தாலுகாவில் பெருங்குடி ஆவணம் பகுதியில் விவ சாயிகள் இயக்கத்தை உருவாக்கிய தோழர் சிலுவைமுத்து நிலப் பிரபுத்துவ வெறியர்களால் சுட்டு கொல்லப்பட்டார். 1964இல் சிபிஎம் உரு வான பின்னர், 1967ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் ஆர்.உமா நாத் போட்டியிட்ட சமயத்தில் தேர்தல் பணியாற்றிய 33 வயதே நிரம்பிய தோழர் கருப்பையா, காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்டார். ^ ^ ^
கரூர் துரைசாமி கரூர் அருகிலுள்ள புகளூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அருந் தொண் டாற்றிய தோழர் துரைச்சாமி சாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டார். ^ ^ ^
சிவகங்கை தியாகி
ராமநாதன் சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் கிராமத்தில் வசதியான நகரத்தார் குடும்பத்தில் பிறந்தவர் ராமநாதன். பி.சீனிவாசராவ் அவர்களால் ஈர்க்கப் பட்டு கம்யூனிஸ்ட்டாகி அப்பகுதி முழுவதும் விவசாயிகள் சங்கத்தை கட்டு வதில் முன்னோடியாகத் திகழ்ந்தார். கண்டரமாணிக்கம் தோழர் கிருஷ்ண னுடன் இணைந்து விவசாயிகளை அணிதிரட்டினார். அவரை குறி வைத்த போலீசார் வளையப்பட்டி கிராமத்தில் சுற்றி வளைத்து கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். சிறையில் இருக்கும்போது மதுரை தோழர் பாலுவுக்கு தூக்குதண்டனை அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து தோழர் கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களை கொடூரமாக சித்ர வதை செய்தது போலீஸ். ராமநாதனை தடியால் அடித்து படுகாயம டையச் செய்து சிறைக் கொட்டடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கச் செய்து 1950 ஜூன் 20 அன்று படுகொலை செய்தனர். ^ ^ ^
கிருங்காக்கோட்டை
பாரிதாசன் இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியின் முக்கிய ஊழியர்களில் ஒரு வர் கிருங்காக்கோட்டையைச் சேர்ந்த தோழர் பாரிதாசன். பலமுறை போலீஸ் அடக்குமுறைக்கு ஆளானவர். பலமுறை சிறை சென்றவர். சிறைக் கொடுமைகளால் தீராத காசநோய்க்கு ஆளானார். சிறையில் போதுமான மருத்துவ வசதி கிடைக்காமல் தனது 42ஆவது வயதில் 14.6.57இல் பாரி தாசன் காலமானார். ^ ^ ^
உடுமலை தியாகிகள் கோபால்
, ஈஸ்வரன் கோயம்புத்தூர் மாவட்டம் (தற்போது திருப்பூர் மாவட்டம்) உடு மலைப்பேட்டை வட்டத்தில் நிலப்பிரபுக்களின் கடும் எதிர்ப்பை மீறி விவசாயத் தொழிலாளர் சங்கத்தை பல தோழர்கள் ஒன்றிணைந்து உரு வாக்கினர். 1972இல் வேட்டைக்காரன் புதூரில் தடைகளை மீறி விவசாயத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி, கம்யூனிஸ்ட் தலைவர் கே.ரமணியை அழைத்து பெரும் பொதுக்கூட்டத்தை நடத்திய விவசாயிகள் சங்கத் தலை வர் கோபால் மீது நிலப்பிரபுக்களின் ஆத்திரம் திரும்பியது. 1978ஆம் ஆண்டின் இறுதியில் தங்களது அடியாட்கள் மூலம் ஒரு நாள் அதிகாலை கோபாலை படுகொலை செய்தனர். 1981ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று உடுமலை வட்டம் வெள்ளியம்பாளையம் கிராமத்தில் வாலிபர் சங்கத்தலை வர் ஈஸ்வரன் உள்ளூர் நிலப்பிரபுவின் அடியாட்களால் படுகொலை செய்யப் பட்டார். 30 வயதே நிரம்பிய ஈஸ்வரன் அந்த கிராமத்தில் வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்கு வதில் முன்னின்றவர். ^ ^ ^
திருவைகுண்டம் தியாகி
மகாலிங்கம் 2002 ஏப்ரல் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் தனது அரிய செயல்வீரன் மகாலிங்கத்தை இழந்தது. திருவைகுண்டம் வட்டம் கெட்டியம்மாள்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் கட்சியின் வட்டக்குழு உறுப்பினராகவும், விவசாயி கள் சங்கத்தின் உதவித் தலைவராகவும், ஊராட்சி மன்ற உறுப்பினராக வும் செயல்பட்டு வந்தார். இங்கு விவசாயிகள் பயிரிட்டு வந்த வாழைப் பயிரை வெட்டி சமூக விரோதிகள் அழிக்க முற்பட்டனர். இதை எதிர்த்து விவ சாயிகளை மகாலிங்கம் திரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த சமூக விரோதிகள், ஏப்ரல் 22 அன்று விவசாயிகள் மறியலில் பங்கேற்று திரும்பிக் கொண்டிருந்த மகாலிங்கத்தை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படு கொலை செய்தனர். ^ ^ ^
வத்தலகுண்டு தியாகி
எம்.பி.பாண்டியராஜன் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதி விவசாயி களின் அன்பைப் பெற்ற தலைவராக தோழர் எம்.பி. பாண்டியராஜன் இருந்தார். 1966ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த வர். 1968 முதல் கட்சியின் வட்டக்குழு உறுப்பினராகவும், 1985இல் திண்டுக் கல் மாவட்டக்குழு உருவானது முதல் மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். 1974 முதல் 79 வரை பழைய வத்தலக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டவர். அப்பகுதி முழுவதும் தலித் விவ சாயிகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தினார். தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து ஏராளமான தலையீடுகளையும் இயக்கங்களை யும் மேற்கொண்டார். இந்நிலையில் 2003ஆம் ஆண்டில் பழைய வத்த லக்குண்டு, கட்டகாமன்பட்டி, குரும்பப்பட்டி கிராமங்களின் தலித் மக்க ளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி ஒரு போலி தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த நபர்கள் ஏமாற்றினர். இதை எதிர்த்து தொடர்ச்சியான போராட் டங்களை பிரம்மாண்டமாக நடத்திய தோழர் எம்.பி. பாண்டியராஜன் மீது ஆத்திரம் கொண்ட மேற்படி கும்பல், 2003 செப்டம்பர் 16 அன்று இரவு சைக்கி ளில் சென்று கொண்டிருந்த அவர் மீது பால் வாகனத்தை ஏற்றி படுகொலை செய்தனர். ^ ^ ^
ஓசூர் தியாகி சக்திவேல்
தோழர் கே.சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராஜ மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர். 1973-75இல் திருச்செந்தூர் ஐடிஐயில் மெசினிஸ்ட் படிப்பு முடித்துவிட்டு கோயம்புத்தூரில் டெக்ஸ்டூல் ஆலையில் பணி செய்தார். அப்போது தோழர் ரமணி உள்ளிட்ட தலைவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. சிஐடியு உறுப்பினரானார். 1980இல் ஓசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். தோழர் கே.எம். ஹரிபட் வழிகாட்டுதலில் முன்னணி ஊழியராக மாறிய சக்திவேல், நிர்வா கத்தின் அடக்குமுறைக்கு ஆளானார். தொடர் போராட்டங்களுக்கு தலைமை யேற்றதால் 1983 ஜூலை 1 அன்று நிர்வாகத்தின் கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ^ ^ ^
தியாகி என்.நாராயணசாமி
விழுப்புரம் தெற்கு திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் சரவண பாக்கத்தைச் சேர்ந்தவர் என்.நாராயணசாமி. கிராமத்தில் கட்சியை யும், விவசாயிகள் சங்கத்தையும் கட்டி வளர்த்ததால் ஆதிக்க சக்திகள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில் வாலிபர் சங்கத்தையும் உருவாக்கிய தால் எரிச்சலடைந்த கயவர்கள் கடப்பாறையால் அடித்து தோழர் நாராயண சாமியை படுகொலை செய்தனர். ^ ^ ^
உய்யவந்தான் தியாகி பழனி
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட உய்யவந்தான் கிராம மார்க்சிஸ்ட் கட்சி கிளைச் செயலா ளர் தோழர் பழனி. உடைகுளம் ஊராட்சித் தலைவராக இருந்த பன்னீர்செல் வம் மீது முறைகேடு புகார் செய்தார். இதன் காரணமாக பன்னீர்செல்வம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப் பட்டார். பன்னீர் செல்வத்தின் மோசடியை சமூகவிரோதச் செயலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடியது. இப்போராட்டத் தில் முன்னின்ற தோழர் பழனியை சமூகவிரோதி பன்னீர்செல்வத்தின் கும்பல் 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதியன்று பட்டப்பகலில் படுகொலை செய்தது. ^ ^ ^
சுமைப்பணி சங்க தியாகி
பாலமுருகன் தோழர் ஆர்.பாலமுருகன் மதுரை கூடல்நகர் ரயில்வே குட்ஷெட்டில் 25 ஆண்டுகளாக சுமைப்பணித் தொழிலாளியாக பணியாற்றினார். சிஐடியு சங்க செயலாளராகவும், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனக்குழு உறுப்பினராகவும் செயலாற்றினார். ரயில்வே குட்ஷெட்டில் எச்.எம்.எஸ்.சங்க நிர்வாகி செந்தில் என்பவர் தொழிலா ளர்களின் கூலியில் கை வைத்ததை எதிர்த்து தொடர்ச்சியாக தலையீடும் முறையீடும் செய்து வந்தார் தோழர் பாலமுருகன். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளில் அவர் தலையிட்டதால் சிஐடியு சங்கம் வலுப்பட்டது. இத னால் ஆத்திரமடைந்த மேற்படி செந்தில் தலைமையிலான சில சமூகவிரோதி கள் 2017 மார்ச் 2 அன்று, பாலமுருகனை மதுரை கோச்சடையிலிருந்து அவர் பணிக்காக வந்துகொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்தனர். ^ ^ ^
ல்கேரி தோழர் சுரேஷ்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கொடியாலம் ஊராட்சி கல்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் சுரேஷ். இக்கிரா மத்தில் வசிக்கும் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்கச் சக்திகள் கடுமையான தீண்டாமைக் கொடுமைகளை ஏவி வந்தனர். இதை எதிர்த்து தலித் மக்களை திரட்டி நியாயம் கேட்டதில் தோழர் சுரேஷ் முன்னணியில் நின்றார். இங்குள்ள கோவிலில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தலித் மக்கள் தங்கள் பகுதியில் 2 கோவில்களை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தினர். இத்தகைய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தோழர் சுரேஷ் தலைமையில் இப்பிரச்சனை யில் தலையிட்டது. 2009 ஜனவரி 1 அன்று, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு ஆலைய நுழைவுப் போராட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தலித் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக சுரேஷ் மாறினார். இத னால் ஆத்திரமடைந்த சாதி ஆதிக்க சக்திகள் அவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். 9 ஆண்டுகள் காத்திருந்து, 2018 ஏப்ரல் 19 அன்று, சாதி ஆதிக்க வெறிகொண்ட முருகேஷ் என்பவர் மூலம் நயவஞ்சகமாக கடத்தப்பட்டார். தேன்கனிக்கோட்டைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. ஏப்ரல் 21 அன்று ஜவலகிரி காட்டில் பிணமாகவே அவரது உடல் கிடைத்தது.