articles

img

வி.கே.புரம் குமார் ஜோ.ராஜ்மோகன், முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்

வி.கே.புரம் குமார் ஜோ.ராஜ்மோகன், முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்

பொதிகை மலையின் மடியில் அமைந்த அழகிய விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில், வரலாற்று பின்னணி கொண்ட ஹார்வி மில் தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடிய பாரம்பரியமிக்க குடும்பத்தில் அய்யாபிள்ளைக்கும் பேச்சியம்மாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் குமார். அவரது இரத்தத்தில் தொழிலாளர் போராட்டத்தின் தீ ஊற்றெடுத்திருந்தது.

மாணவர் உரிமைக்காக எழுந்த குரல்

திருவள்ளுவர் கலைக் கல்லூரியில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குமார் துணிந்து நின்றார். மாணவர் பேரவைத் தேர்தல் நடத்துவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டபோது, இந்திய மாணவர் சங்கமும் ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து போராடின. இப்போராட்டத்தில் குமாரின் தலைமைப் பண்பு மிளிர்ந்தது, இறுதியில் கல்லூரி நிர்வாகம் தனது நடவடிக்கையை திரும்பப் பெற்றது.

எதிரிகளின் கண்ணில் ஒரு முள்

1996ஆம் ஆண்டு திருவள்ளுவர் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில், இந்திய மாணவர் சங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கண்டு அச்சமடைந்த ஆதிக்க சக்திகள், சங்கத்தை ஒழித்துக்கட்ட திட்டமிட்ட னர். குமாரபாண்டியன் பண்ணையார் என்ற வல்லா திக்க சக்தி, இந்திய மாணவர் சங்கத்தை எதிர்த்து களம் இறங்கியது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்திய மாணவர் சங்கத் தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அறிந்து, உடனடியாக தன் சக மாணவர்களைப் பாதுகாக்க ஓடிச் சென்றார் குமார்

. மறைக்கப்பட்ட தியாகத்தின் இருண்ட பக்கம்

பணபலமும் ஆட்கள் பலமும் கொண்ட பண்ணையார், தன்னை எதிர்த்து நிற்கும் குமாரை ஒழித்துக்கட்ட திட்ட மிட்டார். 1995 ஜூலை 31ஆம் தேதி மதியம், தனக்கு நன்கு அறிமுகமான ஒருவரின் அழைப்பை நம்பி வெளியே வந்த 19 வயது இளைஞன் குமாரை, பண்ணை யாரின் கூலிக்கும்பல் காரில் கடத்தியது. அவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி, பின்னர் பண்ணை யாரின் மாந்தோப்பில் மரணம் வரை தாக்கினர். அத்து டன் நிற்காமல், அவரது உடலை அடையாளம் தெரியாத வாறு பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கினர்.

தியாகத்தின் எதிரொலி

இந்த கொடூரக் கொலையைக் கேள்விப்பட்ட விக்கிரமசிங்கபுரம் ஒரு வாரகாலம் முழுவதும் முடங்கிப்போனது. ஆயிரக்கணக்கான மக்கள் காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நீதி கேட்டு குரலெழுப்பினர். அந்த போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பரவியது. இறுதியில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குமார் எனும் இளஞ்சுடர் 19 வயதிலேயே அணைந்தது. ஆனால் அவரது வீரமும், தியாகமும் இன்றும் மாணவர் இயக்கத்தில் ஜொலிக்கிறது. கல்வி நிலைய ஜனநாயகத்திற்காகவும், மாணவர் உரிமைக்காகவும் போராடும் ஒவ்வொரு மாணவரின் இதயத்திலும் குமார் வாழ்கிறார். ஒரு குமாரை மண்ணுக்குள் புதைத்திருக்கலாம், ஆனால் அவர் விதைத்த ஜனநாயகக் கனவுகள் ஆயிரமாயிரம் மாணவர்களாக முளைத்துக் கொண்டிருக்கிறது! “ஒரு சோமுவையும் ஒரு செம்புவையும் ஒரு குமாரையும் கொன்றிருக்கலாம். ஆனால் அவர்கள் உயிர்த்திப் பிடித்த கொள்கைகளை ஒரு போதும் உங்களால் அழிக்க முடியாது.”