articles

img

மதச்சார்பற்ற சக்திகளின் ஒன்றுமையை உணர்த்திய 17ஆவது மாநாடு - ஹர்கிஷன் சிங் சுர்ஜித்

மதச்சார்பற்ற சக்திகளின் ஒன்றுமையை உணர்த்திய 17ஆவது மாநாடு - ஹர்கிஷன் சிங் சுர்ஜித்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17ஆவது அகில இந்திய மாநாடு 2001 மார்ச் 19-24 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற்றது.  இம்மாநாடு, சர்வதேச நிலைமையை மதிப்பிடும்போது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, குறிப்பிட்ட காலத்தில் சர்வதேச அளவில் நிலவும் முரண்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கார்ல் மார்க்ஸ், தனது காலத்தில் சில நாடுகளில் தோன்றிய முக்கிய முரண்பாடு தொழிலாளர் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே இருந்ததாக பகுப்பாய்வு செய்தார். பின்னர், லெனின் முதலாளித்துவத்தின் வளர்ச்சி யைப் பகுப்பாய்வு செய்து, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் மிக உச்சக் கட்டம் என குறிப்பிட்டார். இந்த கட்டத்தில் இரண்டு கூடுதல் முரண்பாடு தோன்றின - ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் காலனி நாடு களுக்கும் இடையிலான முரண்பாடு. சோவியத் யூனியன் நிறுவப்பட்டதன் மூலம் ஏகாதிபத்தி யத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு உருவானது. அடிப்படை முரண்பாடுகளின் வளர்ச்சியை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதும் அவற்றின் உறவுகளையும் 1968இல் பர்து வானில் நடைபெற்ற கருத்தியல் பிளீனத்தில் வரையறுக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு அந்த காலகட்டத்தின் மைய முரண்பாடாக இருப்பதை நாம் அங்கீகரித்தோம். இதன்  பொருள் மற்ற முரண்பாடுகள் தீவிரமடைய முடி யாது என்பதல்ல. தற்போதைய காலத்தில், ஏகாதிபத்திய உந்துதலுடன் கூடிய உலக மயமாக்கலின் பின்னணியில், ஏகாதிபத்தி யத்திற்கும் வளரும் நாடுகளுக்கும் இடையி லான முரண்பாடு அதிகமாக தீவிரமடைந்து ள்ளதை நாம் அங்கீகரிக்கிறோம்.

உலகப் பொருளாதார நெருக்கடி

உலகமயமாக்கல் கொள்கைகளின் காரண மாக ஏகாதிபத்தியத்திற்கும் வளரும் நாடு களுக்கும் இடையிலான முரண்பாடு தீவிர மடைந்து வருகிறது. நிதி மூலதனத்தின் சர்வ தேசமயமாக்கம் தொடர்ந்து வளர்ந்து வரு கிறது. ஐஎம்எஃப், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பின் பிடி மூன்றாம் உலக நாடு கள் மீது இறுக்கமாகியுள்ளது. அதே நேரத்தில், நிதி மூலதனத்தால் இயக்கப்படும் உலக முத லாளித்துவம் தாங்க முடியாத அளவை அடைந்தது. தற்போதைய நெருக்கடி அனைத்து முக்கிய முதலாளித்துவ மையங் களையும் பாதித்துள்ளது. உற்பத்தியில் கடுமை யான வீழ்ச்சியும், வேலையின்மை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும்  ஜெர்மனி ஆகிய நாடுகளும் பாதிக்கப் பட்டுள்ளன. “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்”: புதிய அமெரிக்க தாக்குதல் செப்டம்பர் 11க்குப் பிந்தைய சூழ்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் தனக்கு ஆதரவு  தரும் நாடுகள் மற்றும் தரமறுக்கும் நாடுகள் என பிரிவினையை உருவாக்க முனைகிறது. இப்போது அந்த போரை ஆப்கானிஸ்தானுக்கு அப்பால் விரிவுபடுத்த முயல்கிறது. “தீமை அச்சு” என்று கூறப்படும் இராக், ஈரான், வட கொரியா, சூடான் மற்றும் சோமாலியாவை இலக்காக வைத்துள்ளது.

பாலஸ்தீன மக்கள் மீதான கொடூரமான தாக்குதல்

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை பயன்படுத்தி, இஸ்ரேல் அர சாங்கம் பாலஸ்தீன மக்கள் மீது முழு அளவி லான தாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேல்  பாதுகாப்புப் படைகள் மேற்குக் கரை பகுதி யிலுள்ள பாலஸ்தீன அதிகாரப் பகுதிகளை முழு ஆயுத பலத்துடன் ஆக்கிரமித்தன. இஸ்ரேல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். யாசர் அராபத் ரமல்லாவில் உள்ள தனது அலுவலகத்தில் முற்றுகையின் பிடியில் இருந்தார். கட்சி அகில இந்திய மாநாடு இஸ்ரேல் ஆக்கிரமிப்பை கண்டித்து, பாலஸ்தீன மக்களுடனான உறுதியான ஒற்றுமையை வெளிப்படுத்தி ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியது. வரும் காலத்தில், சுதந்திர அரசுக்கான பாலஸ்தீன மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியப் பிரச்சனையாக இருக்கும்.

சோசலிச நாடுகள்

முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இருந்தபோதிலும், சோசலிச நாடுகள் சர்வதேச பொருளாதாரச் சூழலை வெற்றிகரமாக எதிர்கொண்டு, ஏகாதிபத்திய அழுத்தங்களை எதிர்த்து நின்றுள்ளன. மனித குலத்தில் கால்பகுதி இன்னும் சோசலிசத்தின் கீழ் வாழ்கிறது. சீனாவின் நிலையான ஆண்டு பொருளாதார வளர்ச்சி சுமார் எட்டு சதவீதம் உலகப் பொருளாதாரச் சூழலுக்கு நேர் எதிராக நிற்கிறது. தேசிய நிலைமை காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியால் உருவான  வெற்றிடத்தை, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் நிரப்ப முடியாத நிலையில், பாஜக தலைமையிலான வகுப்புவாத சக்திகள் விரைவாக வளர்ந்தன. 1984 தேர்தலில் வெறும் இரண்டு மக்களவை உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பாஜக, 1996இல் நாட்டின் மிகப்பெரிய ஒற்றைக் கட்சியாக உரு வெடுத்தது. வாய்ப்புக் கிடைத்தும், அது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற முடியாமல் அதன்  முறையற்ற அமைச்சரவை வெறும் 13 நாட்களே நீடித்தது. ஆனால், 1998இல், 12ஆவது மக்களவைத் தேர்தல்களுக்குப் பிறகு, சில கட்சிகளின் ஆதரவோடு மார்ச் 1998இல் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

பாஜக ஆட்சியின் ஆபத்து

ஒரு வகுப்புவாத கட்சியான பாஜக ஆட்சியில் இருப்பதன் ஆபத்து குஜராத்தில் நடந்த சமீபத்திய வெகுஜன படுகொலைகளில் தெளிவாகிறது. பிரிவினைக்குப் பிறகு நிகழ்ந்த மிக மோசமான வகுப்புவாத வன்முறையில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டுள்ளனர். கோத்ராவில் 58 பயணிகளைக் கொன்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் மீதான கொடூரத் தாக்குதலுக்கு “பழிவாங்கும்” பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட னர். சுமார் ஒரு லட்சம் மக்கள் அகதி முகாம் களில் தஞ்சம் புகுந்துள்ளனர். முதலமைச்சர் மோடி, கோத்ரா தாக்குதலுக்கு எதிர்வினையாக சிறுபான்மையினரைக் கொல்லும் அரசு ஆதரவுடனான வெகுஜனப் படுகொலையை நியாயப்படுத்த முயன்றார்.

காங்கிரஸ் பற்றிய நிலைப்பாடு

காங்கிரஸ் கட்சி பற்றிய அணுகுமுறை கட்சியின் அகில இந்திய மாநாட்டில் தீவிர விவாதத்திற்கு உள்ளானது. மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதன் ஆபத்தை உணர்ந்து, மத்தியக் குழு 1998இல் பாஜக,  நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற் கடிக்கப்பட்டு மாற்று அரசாங்கம் அமைக்கும் கேள்வி எழுந்தால், காங்கிரஸ் தலைமையி லான அரசாங்கத்திற்கு பிரச்சனை அடிப்படை யிலான ஆதரவு அளிக்க கட்சி முடிவு செய்தது. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், நமது நேசக் கட்சிகள் அனைவரை யும் நமக்கு ஒத்த நிலைப்பாட்டை ஏற்க ஊக்கு விக்க வேண்டும் என்று கட்சி முடிவு செய்தது. ஆனால் ஆர்எஸ்பி மற்றும் பார்வர்டு பிளாக் இந்த முன்மொழிவை ஏற்கவில்லை; சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸ் தலைமை யிலான அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க மறுத்தது. மாற்று அரசாங்கத்தை அமைக்க முடியாததும் அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற உதவியது.

பொருளாதாரக் கொள்கைகள்

பாஜக தலைமையேற்றுள்ள பிற்போக்கு பொருளாதார ஆட்சியை கட்சியின் அ.இ.  மாநாடு  கவனத்தில் கொண்டது. ஐஎம்எஃப்-  உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பின் ஏகாதிபத்திய பரிந்துரைகளை செயல்படுத்துவதில், பாஜக தலைமை யிலான அரசாங்கம் மிகவும் மோசமான தாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் அர சாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதையும், இந்திய பெரு முதலாளிகளுக்காக பொது நலனை தியாகம் செய்வதையும் குறிக்கிறது.

சமூகப் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளுங்கள்

சமூக சீர்திருத்தங்களுக்காக போராடு மாறு அரசியல் தீர்மானம் கட்சிக்கு அறிவுறுத்து கிறது. சாதி அடிப்படையிலான இழிவான நடைமுறைகள், பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறை, வரதட்சணைக் கொடுமை, தீங்கு விளைவிக்கும் சமூக மற்றும் மத பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் கட்சியால் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள். ஜனநாயக மதிப்புகளைப் பாதுகாப்பது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் முன்னேற்றத்திற்கு உதவும்.

கட்சியின் சுயேச்சையான பங்கை வலுப்படுத்துங்கள்

கட்சி, பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் ஏகாதிபத்திய சார்பு கொள்கைகளுக்கு எதிராக சுயமாகவும், இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இருப்பினும், “இந்த செயல்பாடுகள் அளவிலும் தாக்கத்திலும் போதுமானதாக இல்லை. அரசியல் மற்றும் வெகுஜன பிரச்சனைகளில் உள்ளூர் அளவில் தொடர்ச்சியான செயல்பாடுகளையும், நீடித்த போராட்டங்களையும் கட்சி தீவிரப்படுத்த வேண்டியுள்ளது” என்றுமாநாடு குறிப்பிட்டது.

கூட்டணி உத்திகள் பற்றிய மதிப்பாய்வு

1978இல் நடைபெற்ற 10ஆவது மாநாடு முதல் நாம் கடைப்பிடித்து வரும் கூட்டணி மற்றும் தேர்தல் உத்திகள் மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற உத்தி இலக்கை அடையும் திசையில் கட்சியை எந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளன என்பதை 17ஆவது மாநாடு ஆய்வு செய்தது. மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நமது அடித்தளங்களை வலுப்படுத்தி உறுதிப்படுத்த முடிந்தது என்றாலும், “கட்சி அகில இந்திய  அளவில் கணிசமான வெகுஜன செல்வாக்கு டன் ஒரு அரசியல் சக்தியாக அதே அளவுக்கு வளர்ச்சியடையவில்லை” என்று அரசியல்-அமைப்பு அறிக்கை குறிப்பிட்டது.

அமைப்பை வலுப்படுத்துங்கள்

அரசியல் தீர்மானம் மற்றும் அரசியல்-அமைப்பு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட பணிகளை செயல்படுத்தவும், மக்கள் ஜனநாயகம் என்ற இலக்கை நோக்கி முன்னேற வும், கட்சியை வலுப்படுத்துவது அவசியம். கட்சியின் வலிமையும் செல்வாக்கும் அகில இந்திய அளவில் வளராமல், இந்த பணியை செய்வது கடினமாக இருக்கும். பலவீனமான மற்றும் வலுவான மாநிலங்கள் இரண்டிலும் கட்சியையும் வெகுஜன அமைப்புகளையும் விரிவுபடுத்த அவசர தேவை உள்ளது. அனைத்து நிலைகளிலும் உள்ள கட்சி உறுப்பினர்களின் கருத்தியல் நிலையையும் விழிப்புணர்வையும் உயர்த்தவும், ஜனநாயக மையப்படுத்தலை வலுப்படுத்தவும், கம்யூனிஸ்ட் விழுமியங்களை பின்பற்றவும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்த முயலும் சூழ்நிலையில், ஜனநாயகம், அமைதி மற்றும் முற்போக்கு சக்திகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச அளவில் தீவிரமடைந்துள்ள நிலை யில், வகுப்புவாத சக்திகளின் அச்சுறுத்தல் தேசிய அளவில் அதிகரித்துள்ள சூழலில், சூழ்நிலையால் எழுப்பப்பட்ட சவால்களையும் பொறுப்புகளையும் எதிர்கொள்ள கட்சி அதிக  உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட வேண்டும். மக்களின் பரந்தளவிலான பிரிவுகளையும் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றி ணைத்து பாஜக தலைமையிலான அரசாங்கத்தை தோற்கடிக்க வரும் நாட்களில் கட்சி போராட்டங்களை தொடங்க வேண்டும். அரசியல் தீர்மானம் குறிப்பிடுவது போல் “இது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் விதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.” தமிழில் சுருக்கம் :

எஸ்.பி.ராஜேந்திரன்