தஞ்சை என்.வெங்கடாசலம்
செங்கொடி இயக்க வரலாற்றில் தஞ்சை மண் ஈன்றெடுத்த மற்றுமொரு வீரத்தின் சின்னம் தோழர் என்.வெங்கடாசலம். தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து நான்கு கிமீ தள்ளி அமைந்த ராயமுண்டான்பட்டி கிராமத்தில் பிறந்த அவர், “என்.வி.” என்றே அன்புடன் அழைக்கப்பட்டார். எங்கு சென்றாலும் நடந்தே செல்லும் அவரது வேக நடை போலவே, அநீதிக்கு எதிரான அவரது போராட்டமும் வேகமானது. 1952 தேர்தலில் தஞ்சை தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமலிங்கத்தின் வெற்றிக்குப் பாடுபட்டு பின்னர் கட்சியில் இணைந்தார். தத்துவார்த்த பிள வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவரது உறுதியான நிலைபாட்டால் 1964-இல் பாதுகாப்புச் சட்டத்திலும், நெருக்கடி நிலை காலத்தில் மிசா சட்டத்திலும் சிறை சென்றார். சிறையில் இருந்தபோதும், 1964 முதல் 21.9.1977 வரை 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டது அவரது மக்கள் செல்வாக் கின் அடையாளம். சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக அவரது போராட்டம் துணிச்சலானது. தலித் இளைஞர் ஒருவர் சாதி இந்துக்கள் தெருவில் சைக்கிளில் சென்றதற்காக அடிக்கப்பட்டபோது, அவரையே அழைத்துச் சென்று, “யார் அவன் சைக்கிளை பிடுங்கியது? உடனே கொண்டு வா” என கர்ஜித்ததும் நிமிடங்களில் சைக்கிள் திரும்பி யது. தீண்டாமைக் கொடுமைகளான இரட்டை கிளாஸ் முறை, மற்ற தெருக்களில் நடக்கத் தடை, செருப்பணி யத் தடை போன்றவற்றுக்கு எதிராகப் போராடினார். ஜமிலா என்ற இஸ்லாமியப் பெண் காவல் நிலை யத்தில் பாலியல் வன்கொலைக்கு ஆளானபோது, காவல்துறையின் மூடிமறைப்பை எதிர்த்து குரலெ ழுப்பி, குற்றவாளிகள் மீது நடவடிக்கைக்காக போராடினார். விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக வும், குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் தீவிரமாக உழைத்தார். தஞ்சையில் ஐஸ் விற்பனை, ஹோட்டல், டான்டெக்ஸ் பனியன், பஞ்சாலைத் தொழி லாளர் சங்கங்களை உருவாக்கினார். தஞ்சை மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் செய்த ஊழலை அம்பலப்படுத்தி, பணம் மீட்கப்படும் வரை போராடினார். குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்தார். அவரது அரசியல் நண்பர்கள் காங்கிரஸ் தலைவர் தஞ்சை ராமமூர்த்தி, திமுக எம்எல்ஏ நடராஜன், திரா விடர் கழகத் தலைவர் குப்புசாமி என பல கட்சிகளில் இருந்தனர். அரசியல் வேறுபாடுகளை மறந்து நட்புடன் விவாதித்தது சிறந்த பண்பாகும். உழைக்கும் மக்களின் அன்பைப் பெற்றிருந்த என்.வி. மீது நிலப்பிரபுக்கள் ஆத்திரம் கொண்டனர். 1977 செப்டம்பர் 21 அன்று சோளகம்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தன் ஊருக்கான நான்கு கிமீ பாதையில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இரவு முழுவதும் காணாமல் போனதும், தோழர்கள் கரு வேலங்காடுகள், குளங்கள், ஆறுகள் என எங்கும் தேடினர். தோழர் என்.வி. கொல்லப்பட்ட செய்தி அனைவரின் உணர்வுகளையும் உலுக்கியது. தஞ்சையில் நடந்த கண்டன ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். தோழர்களிடம் வசூலிக்கப்பட்ட குடும்ப நிதி ரூ.30 ஆயிரம் அவரது துணைவியார் லீலாவதி யிடம் வழங்கப்பட்டது. மூன்று மகன்களின் கல்விப் பொறுப்பை கட்சியின் மாவட்டக் குழு ஏற்றது. வெங்கடாசலத்தை கொன்றால் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடும் என நினைத்தவர்கள் மாண்டு போனார்கள். ஆனால் கட்சி பீடுநடை போட்டு அவ ரின் அடிச்சுவட்டில் வளர்ந்து கொண்டே வருகிறது. அவரது தியாகம் என்றும் மக்கள் மனதில் நின்று வழி காட்டும்.
இடுவாய் ரத்தினசாமி மக்களுக்காக உயிர்நீத்த செம்மணி கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் ரத்தினசாமி, வாலிபர் சங்கத்தின் மூலம் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். அவரது கண்களில் தெரிந்த கனவு ஒன்றே ஒன்றுதான் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதி. மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகச் செயலாளராக பணியாற்றிய அவர், கொங்கு மண்ணில் தோன்றிய மாசற்ற மாணிக்கமாக மிளிர்ந்தார்.
ஆதிக்கத்தை எதிர்த்த அஞ்சா நெஞ்சம்
\ நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவ சாதி ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கியிருந்த இடுவாய் ஊராட்சியில், ரத்தினசாமி 1996-இல் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். ஒரே குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஊராட்சி அதிகாரம் மக்களிடம் வந்தது. கண்ணீரோடு காத்திருந்த தலித் மக்க ளுக்கு குடிநீர் விநியோகம், சாலை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்தார். டீக்கடைகளில் இருந்த இரட்டைக் கிளாஸ் முறையை துணிச்சலு டன் எதிர்த்து, நூற்றாண்டுகால தீண்டா மைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மக்கள் கண்ணீர் துடைத்தார், ஆதிக்கவாதிகளின் நெஞ்சம் கொதித்தது.
கொலைக்குக் காரணம்? கம்யூனிஸ்ட்டாக இருந்தது!
1998-இல் ஊராட்சி அலுவலகத்தில் தனியாக இருந்தபோது, அடையா ளம் தெரியாத நபர்கள் அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டி, வாயில் விஷத்தை ஊற்றி சோளக்காட்டில் போட்டுவிட்டனர். 40 நாட்கள் மருத்துவ மனையில் போராடி உயிர் பிழைத்த ரத்தினசாமி, 2001-இல் எதிரணியினர் அனைவரும் “மக்கள் முன்னணி” என்ற பெயரில் ஒன்றிணைந்தும் இரண்டாவது முறையாக பெரும் வெற்றி பெற்றார். ஆனால் 2002 மார்ச் 13 அன்று, அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டார். கொலையாளிகள் எட்டு “குற்றங்களை” எழுதி அவரது கழுத்தில் கட்டினர் - தலித் மக்களுக்கு ஆதரவு, கிறிஸ்தவர்களின் வழிபாட்டு உரி மைக்குப் பாதுகாப்பு, ஆதிக்க சாதியினரை மதிக்காதது, மீண்டும் தேர்த லில் வெற்றி பெற்றது... முக்கியமாக, கம்யூனிஸ்ட்டாக இருந்தது!
அழியாத தியாகத் தடம்
உழைக்கும் மக்களுக்காக போராடும்போது இத்தகைய உயிரிழப்பு கள் வரும் என்பதை அறிந்தே கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கு மத்தியில், ரத்தினசாமி போன்ற தோழர்கள் மட்டுமே மாசற்ற மாணிக்கங்களாக இன்றும் பிரகாசிக்கின்றனர். அவரது குடும்பத்தாருக்கு இன்றும் கட்சி உறுதுணையாக இருக்கிறது. அவரது ரத்தத்தில் நனைந்த விதைகள் இன்று பல்லாயிரம் போராளிகளாக முளைத்துள்ளன. தியாகி ரத்தினசாமியின் கனவுகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்! தியாகி ரத்தினசாமி நாமம் வாழ்க!
பி.ஜே. சந்துரு விதையாய் வீழ்ந்தவன்எம். தாமஸ், சிபிஐ(எம்) விருதுநகர் மாவட்டக்குழு
உதவிப்பணம் வந்திருச்சு... நன்றி மகனேன்னு நேத்து தானே சொன்னேன். நீ வாங்கி தந்த உதவி பணத்திலேயே உனக்கு மாலை வாங்க வச்சுட்டாங்களே! ஆண்டவனே, என் உசுர எடுத்தாவது இந்தப் புள்ளையை காப்பாத்திருக்கக் கூடாதா!” - விருதுநகர் மருத்துவமனையில் ஒரு தாயின் புலம்பல் கூட்டத்தையே கலங்க வைத்தது. 1990 ஜூலை 15-இல் பி.ஜே.சந்துரு படுகொலை செய்யப்பட்டபோது, பாண்டியன் நகர் முழுவதும் கடையடைத்து, கூலி வேலை, பள்ளிக் கூடம் எதுவும் நடக்கவில்லை. அனைவரின் கண்ணீரில் நனைந்தது அந்த ஊர். எப்போதும் சிரித்த முகம், ஸ்டெப் கட்டிங், டிசர்ட், கட்ஷூ அணிந்து, எந்த விஷயத்தையும் ஈடு பாட்டோடு பேசி இளைஞர்களை ஈர்த்தவர். வேலையற்ற காலத்திலும் வீட்டிலிருந்து பெற்ற பணத்தை நண்பர்களுக்கும், தோழர் களுக்கும் செலவழித்து மகிழ்ந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பாண்டியன் நகர் கிளைச் செயலாளர், தாலுகா நிர்வாகி, ஸ்டார் கிரிக்கெட் கிளப், பகத்சிங் கபடி குழு என பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றினார். மாணவர்களுக்கு விண்ணப்பப்படிவம், முதியோருக்கு உதவித் தொகை, மருத்துவ உதவி, ரத்ததானம் என மக்க ளுக்காக வாழ்ந்தார். குடிநீர்ப் பிரச்சனைக்காக பாடை கட்டி ஊர்வலம், பேண்டேஜ் அணிந்து, காய்கறிகள் மாட்டி வித்தியாசமான போராட்டங்களை நடத்தி னார். பொதுக்கிணற்றை மீட்டு, பஞ்சாயத்து தலைவருடன் முறைத்து போராடி, பின் அவரையே பொங்கல் விழாவில் மரியாதையுடன் வரவேற்றார். வீட்டில் லெனின் படத்தை மாட்டுவதற்காக உணவை மறுத்து போராடினார். தோழர் சேகரின் பட்டினி பிள்ளைகளுக்கு யாருக்கும் தெரியாமல் அரிசி கொண்டு சென்று உதவினார். 1985 வறட்சி காலத்தில் விருதுநகர் மாநாட்டிற்கு மக்கள் நிதி திரட்டும் இயக்கத்திற்கு வழிகாட்டியவர். அல்லம்பட்டி பகுதியில் சமூக விரோத கும்பலை எதிர்த்ததால், விருதுநகர் தாலுகா மாநாட்டு பணி களில் ஈடுபட்டிருந்தபோது, காமராஜ், முருகன் ஆகியோருடன் தாக்கப்பட்டார். தோழர்களை “தப்பி ஓடுங்கள்” என்று காப்பாற்றி யவரின் கழுத்தில் கொடுவாள் பாய்ந்தது. கொல்லப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின் அரசு பேருந்து நடத்துநர் பணி நியமன ஆணை வந்தது. “நாங்கள் மரணத்தைக் கண்டு அஞ்சு வதில்லை, நாங்கள் மரணத்தின் பின்பும் உயிர்த்திருப்போம்” என்ற வரிகளுக்கேற்ப, சந்துரு ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் இத யங்களில் இன்றும் உயிர்த்திருக்கிறார்.
ஜே.ஜே.நாவலன்உயிர்த்துடிப்புள்ள முழக்கம் ஐ.வி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
திருமருகல் அருகே போலகம் கிராமத்தில் 1955ஆம் ஆண்டு ஜெகநாதன் - முத்துலெட்சுமி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த தோழர் நாவலன், தஞ்சை மண்ணின் மக்கள் போராட்ட வரலாற்றில் தங்கத் தடம் பதித்தவர். வெண்மணி, திருமெய்ஞானம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காக உயிர் நீத்த எண்ணற்ற தியாகிகளின் வரிசையில் நாவலனும் ஒரு போராளி.
இளமையிலேயே இலட்சியவாதி
1974இல் திருமியச்சூரில் குடியேறிய நாவலன், வசந்தாவை காதல் திருமணம் செய்துகொண் டார். 1976-இல் நன்னிலம் வட்டாரத்தில் சோச லிஸ்ட் வாலிபர் முன்னணியின் துடிப்பு மிக்க ஊழியராகத் தொடங்கி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டார். கட்சியின் நன்னி லம் ஒன்றிய குழுவின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய அவர், பின்னர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர், செந்தொண்டர் அமைப்பின் பொறுப்பாளர் ஆனார்.
கள்ளச்சாராயத்திற்கு எதிரான போர்க்குரல்
மக்கள் பிரச்சனைகளுக்காகவும், சமூக விரோதிகளுக்கு எதிராக வும் தொடர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார் நாவலன். குறிப்பாக, கள்ளச்சாராய மாஃபியாக்களுக்கு எதிரான அவரது சமரசமற்ற போராட்டமே அவரது உயிரைப் பறித்தது. 2010ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று, திருமெய்ஞானம் தியாகிகள் நினைவிடத்திற்கு செவ்வணக்கம் செலுத்திவிட்டு திரும்பும் வழியில், சாராய மாஃபியாவின் கூலிப்படை யால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
தியாகத்தின் எதிரொலி
அவர் படுகொலையின் மறுநாள் இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்க ணக்கான மக்கள் திரண்டு கண்ணீர் மல்க செவ்வணக்கம் செலுத்தினர். “நாவலனைச் சாய்த்துவிட்டோம்” என கருதிய கள்ளச்சாராய மாஃபி யாக்கள் இன்று சாய்ந்துபோய் கிடக்க, நாவலனின் இலட்சியக் கனவுகள் மக்கள் மனதில் வேரூன்றி நிற்கின்றன. அவர் அணிந்திருந்த வெள்ளைச் சட்டை அவர் சிந்திய ரத்தத்தால் செஞ்சட்டையாக மாறியது. அந்தச் சிவப்பு என்றென்றும் நம்மை வழிநடத்தும் தியாக ஜோதியாய் ஒளிர்கிறது! இன்று நன்னிலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நினைவகம் கம்பீர மாக எழுந்து நிற்கிறது. ஆண்டுதோறும் அவரது நினைவு தினத்தில் இளை ஞர்கள் ரத்ததானம் செய்வதும், மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்து வதும் நாவலனின் தியாகப் பணியின் தொடர்ச்சியே! தியாகி நாவலன் போராட்ட முழக்கம் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
பள்ளிப்பாளையம் வேலுசாமி கொடுமை கண்டு கொதித்தெழுந்தவன் எம்.அசோகன், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் விசைத்தறிகள் நிறைந்த பகுதி. இப்பகுதியில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைத்து வேலைவாங்கப்பட்டனர். 14 மணி நேரம் வரை கடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டனர். அடிப்பது, உதைப்பது, கொலை செய்து ஆற்றில் விடுவது போன்ற அராஜகங்களும் நடைபெற்றன. 1971இல் சிஐடியு விசைத்தறி தொழிலா ளர் சங்கம் உதயமானது. 1974இல் போனஸ் கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உரிமை யாளர்கள், தொழிலாளர்கள் மீது கடுமை யான தாக்குதலைத் தொடுத்தனர். விடு தலைப் போராட்ட வீரர் தோழர் வி.ராமசாமி, தோழர் கே.நாராயணன் போன்ற தலை வர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர் கள் மீது ஏராளமான பொய் வழக்குகள் புனையப்பட்டன. பண்ணை அடிமைகளைப் போல நடத்தப்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக பாதுகாக்கப் பட்டுள்ளனர். பாக்கி என்ற பெயரில் கொடுத்த பணத்தை விட கூடுதலாக வசூ லிக்கப்பட்டது தடுத்து நிறுத்தப்பட்டது. வேலுசாமியை ஈர்த்த சிஐடியு மேற்கண்ட போராட்டங்களில் ஈர்க்கப் பட்ட விசைத்தறி தொழிலாளர் தோழர் வேலுசாமி சிஐடியு சங்கத்தில் இணைந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி லும் இணைந்து பணியாற்றினார். 1988இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 2002 முதல் அக்ரஹாரம் கிளைச் செயலாளராக செயல்பட்டு வந்தார். அப் பகுதி மக்களின் அடிப்படை தேவைகளுக் காகவும், ரேசன் முறைகேடு, சட்டவிரோத மாக காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தவும், சாயப்பட்டறை மற்றும் சாக்கடை கழிவுகள் ஆற்றில் கலப்பதை எதிர்த்தும் முதியோர் மற்றும் ஊன முற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பிரச்ச னைகளுக்காகவும் மக்களை திரட்டி பல போராட்டங்களை நடத்தியுள்ளார். ஏழைகளுக்கு மருத்துவ உதவி கிடைத்தி டவும், காவிரி ஆற்றின் ஓரத்தில் குடி யிருக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்ட சமயங்களிலும் பல உதவிகளைச் செய்துள்ளார். படிக்க வசதியற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் நண்பர்களின் உதவி யுடன் வாங்கிக் கொடுத்தார். விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்தின் போது சிறை சென்ற வேலுசாமி காவல்துறையின் மிருகத்தன மான தாக்குதலுக்கு உள்ளானார். 2004இல் பள்ளிபாளையம் நகரில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும் பல வழக்கு கள் போடப்பட்டு சிறை சென்றார். பல பொய் வழக்குகளை சந்தித்தவர் தோழர் வேலு சாமி. இத்தகைய பின்னணியில்தான், கந்து வட்டித் தொழில் செய்து வந்த குண்டர்கள் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த பெண் விசைத்தறி தொழிலாளி தரவேண்டிய வட்டிப்பணத்திற்காக பாலியல் வல்லுற வுக்கு ஆளாக்கினர். அத்துடன் அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் விற்ற னர். கந்துவட்டிக் கும்பலின் இந்த அக்கிர மங்களைக் கண்டு தோழர் வேலுசாமி கொதித்தெழுந்தார். இக்கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என களமிறங்கி போராடியவரை 2010 மார்ச் 10 அன்று கய வர்கள் வெட்டி வீழ்த்தினர். கொடியவர்களின் மிரட்டலைக் கண்டு அஞ்சாது உயிரைத் துச்சமென நினைத்து களப்பணியாற்றிய தோழர் வேலுசாமி வீழ்த்தப்படவில்லை; விதைக்கப்பட்டுள் ளார்.