கோவை ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் கூலி உயர்வு கோரியும், வேலைப் பளு, அபராதம் விதித்தல், வேலை நீக்கம் போன்ற அட்டூழியங்களை எதிர்த்தும் 1946 அக்டோபரில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளிகள் மீது ஆலை நிர்வாகம் போலீசை ஏவியது. தொழிலாளி களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது. அம்மு என்ற இளம்பெண் தொழி லாளி தன்னை அடிக்க வந்த போலீஸ்காரனின் துப்பாக்கியைப் பிடித்து தடுத்தார். அம்முவை கீழே தள்ளிவிட்டு அந்த போலீஸ்காரன் துப்பாக்கியிலி ருந்த கத்தியால் குத்தி கொலை செய்தான். இதைப் பார்த்த ஆண் தொழிலாளி கள் திரண்டு வந்தனர். ஆயிரக்கணக்கில் திரண்டுவந்த தொழிலாளிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. 11 தொழிலாளிகள் மடிந்தனர். நூற்றுக்க ணக்கானோர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் அம்மு, குள்ளப் பன், மந்திரியப்பன், பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐவரை தவிர மற்றவர்களை அடையாளம் காண முடியாமல் போலீஸ் உருசிதைத்து விட்டது.
தியாகி ராஜம்மாள் 1948இல் தஞ்சை மேல்கண்ட மங்கலத்தில் கூலிப் போராட்டம் நடந்தது. மிராசுதார்கள் தங்கள் அடியாட்களை ஏவி விவசாயத் தொழிலாளி கள் மீது தாக்குதல் நடத்தினர். அந்த அக்கிரமத்தைக் கண்டித்து ஆண்களு டன் சேர்ந்து பெண்களும் போராடினர். தலைமை தாங்கிய தோழர் ராஜம் மாளை போலீஸ் துப்பாக்கியைத் திருப்பிக் கட்டையால் அடித்தே கொன்றது. ^ ^ ^ பூந்தோட்டம் சுப்பையா வேலூர் சிறையில் கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளான வர் மதுரை பூந்தோட்டம் தோழர் சுப்பையா. கடுமையான சித்ரவதை களுக்கு உள்ளாகியதால் விடுதலையானதும் இறந்தார். ^ ^ ^ பொதும்பு பொன்னையா மதுரை பொதும்பு கிராமத்தில் கட்சியை உருவாக்கியவர்கள் பொதும்பு பொன்னையா, செல்லம், ராமையா, வீரணன் போன்றவர்கள் விவசாயி கள் நலனுக்காகப் போராடினர். அபாயகரமான கம்யூனிஸ்ட்டுகள் என்று நால்வரையும் அரசு பிரகடனம் செய்தது. தலைமறைவு வாழ்க்கையில் வட்டப்பாறையில் இரவில் பாம்பு கடித்து பொன்னையா மரணமடைந்தார். ^ ^ ^ பொதும்பு வீராயி ‘மதுரை பொதும்பு கிராமத்தில் கட்சியை உருவாக்கிய தோழர்களில் ஒரு வரான வீரணனின் தங்கை வீராயி. தலைமறைவு கட்சி மையத்திற்கு உதவிகள் செய்யும் பணியை வீராயி திண்டுக்கல்லில் மேற்கொண்டார். அங்கி ருந்து மதுரைக்கு வந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நிலப்பிரபுக்களின் சதியால் போலீசாரால் விஷ ஊசி போடப்பட்டு கொல்லப் பட்டார். ^ ^ ^
தியாகி ராமசாமி மதுரை
ஹார்வி மில் தொழிலாளி தோழர் ராமசாமி 1946ஆம் ஆண்டு ரவுடி களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ^ ^ ^
தியாகி தில்லைவனம்
மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்வீரர் தோழர் தில்லைவனம். பொட்டல் சத்திரம் வட்டம் விருப்பாட்சி அருகில் ரெட்டைக்கல்லில் (அன்றைய மதுரை மாவட்டம் - இன்றைய திண்டுக்கல் மாவட்டம்) சுட்டுக் கொல்லப்பட்டார். ^ ^ ^
ஐ.வி.சுப்பையா மதுரையில்
கட்சியின் சிறந்த ஊழியராக இருந்த தோழர் ஐ.வி.சுப்பையா 1948இல் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டார். கடும் தாக்குதலுக்கு ஆளாகி சிறையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தார். ^ ^ ^
கடலூர் சிறை தியாகிகள்
1948 அடக்குமுறைக் காலத்தில் கடலூர் சிறையில் கம்யூனிஸ்ட்டுகள் பாதுகாப்புக் கைதிகளாயிருந்தனர். அவர்களில் தெலுங்கானா போராட்ட கைதிகளும் தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமனும், ஏ.கே.கோபா லனும் இருந்தனர். சிறையில் எப்படியேனும் பதற்றத்தை உருவாக்கி இவர்களை கொன்றுவிட சிறைக் கண்காணிப்பாளர் தாமஸ் என்பவர் உருமிக் கொண்டிருந்தார். இந்நிலையில் 1949 ஆகஸ்ட் 11 பிற்பகல் 3 மணிக்கு 200 போலீசார் குவிக்கப்பட்டு அனைவரும் ஆயுதமேந்தினர். திடீ ரென சிறைக் கதவுகள் திறக்கப்பட்டு பயங்கரமாய் கூச்சலிட்டுக் கொண்டே போலீசாரும் வார்டர்களும் உள்ளே புகுந்து, நிராயுதபாணிகளான தோழர் கள் மீது தாக்குதல் நடத்தி, கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசி கண்மூடித்தன மாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 20 வயது கூட நிரம்பாத தெலுங் கானா தோழர்கள் கொல்லிகொண்டா ராகவய்யா, ஜோகையா மற்றும் ஆந்திர கிசான் சபை தலைவர் சீத்தாராமையா(45) தஞ்சை மாவட்டம் பாப நாசம் தாலுகா ஆடுதுறையை அடுத்த குக்கிராமத்தில் பிறந்த விவசாயி மகன் 25 வயதே நிரம்பிய உத்திராபதி ஆகிய நான்கு பேர் கொல்லப்பட்டனர். ^ ^ ^
கோவையின் வீரத் தியாகிகள்
கோவை மாவட்டத்தில் 1950லிருந்து 60 வரையான காலத்தில் நான்கு முக்கிய ஊழியர்கள் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். சிங்காநல்லூர் கோத்தாரி மில்லில் தொழிற்சங்கத் தலைவராக இருந்து பல சங்கங்களை இணைத்துப் போராடியவர் தோழர் உப்பிலிபாளையம் முத்து. இவர் ஜனசக்தி பத்திரிகையின் விற்பனையாளராகவும் இருந்தார். இவர் முதலாளியின் கைக்கூலிச் சங்க ரவுடிகளால் 7.7.1954இல் மில்லுக் குள்ளேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். சில மாதங்களில் சிவானந்தா மில்லின் தொழிற்சங்க முக்கிய ஊழியர் நந்தகோபால் கொலை செய்யப் பட்டார். அதன்பின் கருப்பண்ணனும் கொலை செய்யப்பட்டார். கோவை மாவட்டம் பெருமாநல்லூர் கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர் தோழர் மணியால் அப்பகுதியில் செங்கொடி இயக்கம் வேகமாய் பரவியது. இதைப் பொறுக்கமுடியாத ஆதிக்க சக்திகள் அவரை திட்டமிட்டு கொலைசெய்தனர். ^ ^ ^
செல்வபுரம் கே.பூசாரி
விஜயலெட்சுமி மில் தொழிலாளியும் கட்சியின் உறுப்பினருமான செல்வ புரம் கே.பூசாரி 20.7.1955இல் கொலை செய்யப்பட்டார். மதுக்கரை சிமெண்ட் ஆலை தொழிலாளியான தோழர் ராக்கியண்ணன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சீராபாளையம் நிலப்பிரபுவை எதிர்த்து போராடினார். 24.7. 1957இல் அவர் இரவு சிப்டுக்கு வேலைக்கு சென்றபோது நிலப்பிரபு ஏவிய குண்டர்கள் அவரை கொலை செய்தனர். இதேபோல் பொள்ளாச்சி தாலுகா வில் தோழர் நடராஜனும் நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டார். மேட்டுப் பாளையம் தோழர் அருணாசலம் 8.5.73இல் படுகொலை செய்யப்பட்டார். ^ ^ ^ ஆஷர் மில் பழனிச்சாமி 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தொழிற்சங்கங்க ளும் தடை செய்யப்பட்டன. திருப்பூர் தொழிலாளர் தலைவர் ஆஷர் மில் பழனிச்சாமி தலைமறைவாக இருந்து கட்சிப்பணியுடன் தொழிற்சங்கப் பணியையும் சேர்த்து செய்தார். தலைமறைவாக இருந்து செயல்பட்ட தோழர் பழனிச்சாமியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறவினர்களே பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை அடித்தும் பல வித கொடுமைகள் புரிந்தும் சித்ரவதை செய்தனர். இறுதியில் இரவு 3 மணிக்கு அவரை போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர். 19-3-1950இல் அவர் இறக்கும்போது அந்த இளம் தலைவனுக்கு வயது 25தான். திருப்பூரின் முதல் கம்யூனிஸ்ட் தியாகியாக இன்றும் மக்கள் நெஞ்சங்களில் தோழர் பழனிச்சாமி வாழ்கிறார். ^ ^ ^
களப்பால் குப்பு தஞ்சை மாவட்டம்
களப்பால் கிராமத்தைச் சேர்ந்த களப்பால்குப்பு 31 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த மாவீரர். செங்கொடிச் சங்கத்தை அழிக்க பண்ணையார்கள் முயற்சித்தனர். வலிவலம் தேசிகர் முதல் குன்னி யூர் சாம்பசிவ ஐயர் வரை குண்டர்களைத் திரட்டி தாக்குதல்களில் ஈடுபட்ட னர். இந்த குண்டர்கள் சேரிக் குடியிருப்புகளில் புகுந்து உடமைகளை சேதப்படுத்துவது, பெண்களை மானபங்கம் செய்வது போன்ற அட்டூழி யங்களில் ஈடுபடுவர். எதிர்ப்பவர்கள் மீது போலீஸ் பொய் வழக்கு போடும். குன்னியூர் அய்யரின் ரவுடிகளை எதிர்த்து குப்பு தலைமையில் விவசாயி கள் போராடினர். இதில் இரு ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். பொய் வழக்குப் போட்டு குப்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 14.4.1946இல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தோழர்கள் நடேசன், செந்தாமரைக்கண்ணு, மஞ்சான் ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். திருச்சி சிறையில் விஷம் கலந்து கொடுக்கப் பட்டு களப்பால்குப்பு 18.4.48இல் ரத்தம் கக்கி மரணமடைந்தார். ^ ^ ^
மலேயா தோழர்கள்
எஸ்.ஏ.கணபதி, வீரசேனன்: தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை யிலிருந்து பிழைப்பு தேடி மலேயா சென்றனர். கணபதி அங்கு கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்பு நேதாஜியின் ஐ.என்.ஏ.படையில் சேர்ந்தார். அதன்பின் தொழிற்சங்கத் தலைவராகி கோலாலம்பூரில் தலைமறைவாக இருந்து செயல்பட்டார். பின்பு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் கைத்துப்பாக்கி இருந்ததாக வழக்கு ஜோடிக்கப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. -1948 மே மாதம் தோழர் மலேயா கணபதி தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார். கணபதியின் சக தோழராக அதே சிறையிலிருந்த தோழர் வீரசேனன் கடைசியாக கணபதியைப் பார்க்க விரும்பினார். சிறை அதிகாரி கள் மறுத்தனர். வாக்குவாதம் முற்றியது. அதிகாரிகள் வீரசேனனைச் சுட்டுக் கொன்றனர். ^ ^ ^
இரணியன், ஆறுமுகம்
பட்டுக்கோட்டை ஒரத்தநாடு பகுதியில் ஜமீன் - இனாம் எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட - வாட்டாக்குடி இரணியன் தலைக்கு ரூ.500 விலை அறிவிக்கப்பட் டது. அந்த வட்டாரத்தில் பல ‘போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட தலை வர். இவரை ஒழித்துக்கட்ட மிராசுதாரர்களும் போலீசும் திட்டமிட்டிருந்த னர். சம்பவத்தன்று இரணியனைச் சந்தித்துப் பேசுவதற்காக தோழர் ஆறுமுகம் வடசேரிக்கு வந்தார். 1950 ஜூன் 5இல் வடசேரி சவுக்குத் தோப்பில் காவல்துறையினர் கட்டி வைத்து இருவரையும் சுட்டுக்கொன்றனர். மர ணத்தைக் கண்டு துளியும் அஞ்சாமல் போலீசை எதிர்த்து இருவரும் சிம்ம கர்ஜனை புரிந்தனர். மரணத்திற்கு அஞ்சாத அவ்விருவரின் மரணம் கண்டு போலீஸ்காரர்கள் அஞ்சி, நடுநடுங்கி தலைகுனிந்தனர். ^ ^ ^
தியாகி சிவராமன்
விவசாய சங்கத்தினர் மீது மிராசுதார்கள் தாக்குதல் நடத்தினர். குத்தகை வார விவசாயிகளைப் பாதுகாக்கவும் கூலி உயர்வுக்காக வும் முத்துப்பேட்டைப் பகுதியில் தீவிரப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் ஜாம்பவான் ஓடைகிராமத்தைச் சேர்ந்த சிவராமன். மிராசுதாரர்களும் போலீசும் கூட்டுச் சேர்ந்து ரயிலைக் கவிழ்க்கத் திட்டமிட்ட தாகப் பொய் வழக்குத் தொடுத்தனர். சிவராமன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவருக்கு வயது 25தான். ^ ^ ^
சென்னை துறைமுகத் தியாகிகள்
தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்தக் கோரி சென்னைத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். வீரமிக்க அப்போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு துறை போலீசை ஏவியது. 16.6.1958 இல் போராடிய துறை முகத் தொழிலாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் கோபால், வேதாசலம், அப்துல்வகாப், நடராஜன், எத்திராஜ், மணி ஆகிய ஆறு தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். ^ ^ ^
பரமக்குடி தோழர் குப்புசாமி
பரமக்குடி தோழர் குப்புசாமி விவசாயிகள் அறப்போரில் ஈடுபட்டு மூன்று மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்றார். 15.9.61இல் பரமக்குடி யில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தோழர் குப்புசாமி கைது செய் யப்பட்டார். மதுரைச்சிறையில் அரசியல் கைதிகளாக நடத்தப்படாமல், குறைந்தபட்ச வசதிகள் கூட செய்து தராமல் போராளிகள் சித்ரவதைக்கு ஆளாகினர். சிறைக் கொடுமையால் தோழர் குப்புசாமி 7.10.61இல் மதுரை சிறையில் உயிர் நீத்தார்.
தியாகி சோரகை பெருமாள்
சேலம் மாவட்டம் சோரகையில் நடந்த விவசாயிகளின் உரிமைப் போரா ட்டத்தில் முன்னின்றவர் தோழர் பெருமாள். சோரகை வட்டத்தில் செங்கொடி ஏந்தி நிலங்களைக் கைப்பற்றி சாகுபடி செய்யும் போராட்டம், மாபெரும் தலைவர் அர்த்தநாரி வாத்தியார் தலைமையில் நடந்தது. அந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1948 ஜூலை யில் தோழர் பெருமாள் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு சுதந்திரமடைந்து ஓராண்டு காலத்தில் - 1948இல் கம்யூனிஸ்ட் இயக்கம் மீது கொடும் அடக்குமுறை ஏவப்பட்ட காலம் அது. அதற்கு முன்பிருந்தே 1944-45 காலக்கட்டத்தில் அன்றைய ஓமலூர் தாலுகாவின் மேற்குப் பகுதி யில் லக்கம்பட்டி விவசாயிகள் போராட்டம் பிரபலமாக நடந்தது. விவசாயி கள் இயக்கத்தின் மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ் அவர்களால் சின்ன தண்டாலக்கம்பட்டியில் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது. அதில் ஈர்க்கப்பட்ட அர்த்தநாரி வாத்தியார் உழவர்களை ஒன்றுபடுத்தியது மட்டு மல்ல, கட்சி தடை செய்யப்பட்ட போது தலைமறைவாக இருந்து சோரகை உள்ளிட்ட கிராமங்களில் செம்படையை உருவாக்கி பயிற்சி அளித்தார்.