articles

img

தமிழைக் கண்டு திணறுகிறது இந்தி - ராம் தங்கம்

தமிழைக் கண்டு திணறுகிறது இந்தி…

2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெற்றவர்  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராம் தங்கம். 2024 ஜனவரியில் விருது வழங்கும் விழாவில் தமிழில் பேசியது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.  இன் றைய சூழலுக்கு மிகுந்த முக்கியத்து வம் பெறும் அவரது பதிவில் கூறப் பட்டுள்ளதாவது: சாகித்ய அகாடமி யுவ புரஸ் கார் விருது பெறுவதற்காக கல்கத்தா விற்கு அழைக்கப்படுவதற்கு முன்பு எங்களுடைய ஏற்புரையை இந்தி யிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதி அனுப்ப சொல்லி இருந்தார் கள். நான் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பி இருந்தேன். விருது பெற்ற பிறகு இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்ட மொழிகளான 24 மொழிகளை சேர்ந்த எழுத்தாளர்களும் ஏற்புரை வழங்கினோம். அதில் மராத்தி, மலையாளம், பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, கொங்கணி என பெரும்பாலா னவர்கள் இந்தியில் பேசினார்கள்.

சிலர் ஆங்கிலத்தில் பேச, நான் தமிழிலேயே பேசினேன். விழாவிற்கு முன்பு ஒரு நண்பர் சொன்னார். நீங்கள் ஆங்கிலத்தில் எழுதி கொடுத்திருக்கிறீர்கள் அல் லவா, அதனால் ஆங்கிலத்தில் கூட பேசலாம் என்றார். நான் ‘இல்லை என்னுடைய தாய் மொழியான தமிழில் எழுதியதற்காக தான் விருது கிடைத்துள்ளது. அதனால் நான் தமிழில் பேசினால்தான் சரியாக இருக்கும். எல்லோருக்கும் புரிகிற தோ இல்லையோ நான் தமிழில் தான் பேசுவேன் என்று சொன் னேன். நான் என்ன பேசுகிறேன் என் பதை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத் திருக்கிறேனே அதை அவர்கள் படிக்கும் போது புரிந்து கொள்வார்கள். இந்த மேடை என் தமிழ் மொழி யை பிரதிநிதித்துவப்படுத்துவதற் கான மேடை. என்னுடைய புத்தகத் துக்கான விருது என்பதை விட தமிழ் பிரிவில் தான் விருது பெற்றிருக்கி றேன்.

அப்படி இருக்கும்போது என் னுடைய ஏற்புரையில் என்னுடைய மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக நான் தமிழில் பேசினால் தான் சரியாக இருக்கும் என்றேன். தமிழிலேயே பேசினேன். யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. அந்த விழா முடிந்ததும் பெங்காலி ஒருவர் வந்து என்னிடம் எல்லோரும் தாய்மொழியில் பேசாத போது நீங்கள் தாய்மொழியில் பேசியது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இலக்கிய வளமும் செழு மையும் பெரும் பாரம்பரியமும் கொண்ட பெங்காலி மொழியை மெல்ல மெல்ல இந்தி விழுங்கி வரு வதை சொல்லி வருந்தினார். நம் முடைய தனித்துவமே நம்முடைய மொழி தான். அதை எப்போதும் விட்டு விடாதீர்கள் என்றார். எத்தனையோ மொழிகளை தின்னு செரித்து ஏப்பம் விட்ட இந்தி மொழி இன்னும் தமிழைக் கண்டு திணறுகிறது என்றால் அதற்குக் கார ணம் நம்முடைய உறுதி தான். அதில் மேலும் மேலும் உறுதியாக இருப்போம். எம்மொழிக்கும் எதிரி அல்ல. விரும் புபவர்கள் கற்றுக் கொள்ளட்டும். நம் மைப் பொறுத்தவரை தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!