வீரத்தின் வரலாற்றுச் சுவடுகளில் புதிய அத்தியாயம்! மாமதுரை மனதார இருகரம் கூப்பி வரவேற்கிறது - இரா.விஜயராஜன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரை மாவட்டத்தின் மையப் பகுதியான மாநகரில் வருகின்ற ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை வர லாற்றுப் பெருமை மிக்க தமுக்கம் கலையரங்கில் நடைபெறுகிறது.
பழமையும் புகழும் கொண்ட மாநகரம்!
மதுரை என்றாலே பெருமைமிகு வரலாற்றுக்கு சொந்தமான ஊராகும். 2,500 ஆண்டுகால வரலாற்று பெருமை மதுரைக்கு உண்டு. பாண்டியர் கால பெருமையும், நாயக்கர் கால வரலாறும் அதன் பின்னர் பிரிட்டிஷார் ஆட்சியும் நடைபெற்றுள்ளது. இந்த காலங்களில் வாழ்ந்த உழைப்பாளி மக்க ளின் வரலாறும் போற்றப்பட வேண்டியதே.
விடுதலைப் போராட்டத்தின் நெருப்புச் சுவடுகள்!
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மதுரை மாவட்டத்தில் ஏராளமான எழுச்சிமிகு போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. மதுரைக்கு வந்த மகாத்மா காந்தி இங்குள்ள விவசாயிகளின் நிலைமையைப் பார்த்து தான் அரை ஆடைக்கு மாறினார் என்பது வரலாறு. அதோடு இன்று காந்தி மியூசியம் அதன் பெருமை யைப் பறைசாற்றுகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைக் கண்டித்தும், மகாத்மா காந்தி கைது செய்யப்பட்ட தைக் கண்டித்தும் தீரமிக்க போராட்டங்கள் மதுரை யில் நடந்தன. ஐ.மாயாண்டி பாரதி, என்.எம்.ஆர்.சுப்புராமன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, கே.பி.ஜானகி யம்மாள், என்.சங்கரய்யா, கே.டி.கே.தங்கமணி போன்ற மகத்தான தலைவர்கள் அரசியல் களம் கண்ட ஊர் மதுரை.
நெஞ்சில் நிறைந்த நினைவுகள்!
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை மதுரைக்கு அழைத்து வந்து கொடியேற்று விழா மற்றும் பொ துக்கூட்ட நிகழ்வுகளை நடத்திய பெருமையும் மதுரை க்கு உண்டு. 1953ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய மாநாட்டில் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹரிபால்டி வந்து கலந்து கொண்டது வரலாற்றுச் சாதனையாகும். இப்படி எண்ணற்ற பெருமைகள் மதுரைக்கு உண்டு.
தியாகத்தின் சுவடுகள்!
சுதந்திரப் போராட்டக் காலத்தில் வெள்ளையனை எதிர்த்த போராட்டத்தில் பெருங்காமநல்லூர் தியாகி களின் வீர வரலாறு இன்றும் நினைவு கூரத் தக்கது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரும் மதுரை வந்து வரலாறு பதித்த நாயகர்களாவர். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாகிகள் தூக்கு மேடை பாலு, மாரி - மணவாளன், தில்லைவனம், பொதும்பு பொன்னையா, பூந்தோட்டம் சுப்பையா, ரயில்வே ராமசாமி, குட்டி ஜெயப்பிரகாஷ், தியாகி லீலாவதி, மாடக்குளம் கருப்பு, சுமைப்பணி தொழி லாளி பாலமுருகன் போன்ற தியாகிகள் மதுரைக்கு தியாகத்தின் மூலம் பெருமை சேர்த்தவர்களாவர்.
தொழிலாளர் வாழ்வின் கனவுத் தளம்!
பிரிட்டிஷ் ஆட்சியில் மதுரைக்கு வந்த பஞ்சாலை தொழில் மாவட்டம் முழுக்க பரவி வியாபித்தது. 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், கைத்தறி நெசவு தொழிலாளர்களும் நிறைந்த ஊராக மதுரை இருந்தது. இத்தொழில்கள் காலப்போக்கில் அரசின் கொள்கைகள் காரணமாக காணாமல் போன நிலை யில் இன்று மதுரையில் சிறு, குறுந்தொழில்களே மதுரை மக்களைக் காப்பாற்றி வருகிறது. ஏராளமான முறைசாரா தொழிலாளர்கள், கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாக மதுரை மாவட்டம் உள்ளது.
மகத்தான மாநாடுகளின் வரலாற்றுத் தடம்!
1953ஆம் ஆண்டில் 3ஆவது அகில இந்திய மாநாட்டையும், 1972இல் - 9ஆவது அகில இந்திய மாநாட்டையும் நடத்திய பெருமை மதுரைக்கு உண்டு. இந்த ஆண்டுகளில் மதுரைக்கு தோழர் ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, சுர்ஜித், பி.டி.ரணதிவே, தோழர்கள் சுந்தரய்யா, பசவ புன்னையா, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற மகத்தான தலைவர்கள் மதுரைக்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களோடு, தோழர்கள் பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, கே.பி.ஜானகியம்மாள், ஏ.பி.பழனிச் சாமி, வி.கார்மேகம், எம்.முனியாண்டி, கே.பால கிருஷ்ணன், வாழவந்தான், கே.அய்யாவு, ஜே.எஸ்.கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டு இன்னும் ஏராளமான தோழர்கள் இருந்துள்ளனர். கே.பி.ஜானகியம்மாள் அவர்கள் கிராமப்புற மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்து நில வினியோகம் செய்வதில் முன்னின்றார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெயரை தெரியாதவர்கள் கூட கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஜானகியம்மாள் கட்சி என்றே அழைத்தனர்.
புதிய சகாப்தத்தின் துவக்கம்!
இன்றைய மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட ஒன்றிய குழுக்கள், கமிட்டிகள், அரங்க கமிட்டிகள், 600க்கும் மேற்பட்ட கிளைக ளோடு செயலாற்றி வருகிறது. வர்க்க - வெகுஜன அமைப்புக்களும் உழைப்பாளி மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்து ஏராளமான சட்டச் சலுகைகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றன. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே நாடாளுமன்ற, சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் வெற்றி பெற்று மதுரை மாவட்ட மக்களுக்காக பாடுபட்டு வந்துள்ளனர். அத்தகைய பெருமை இன்ற ளவும் நீடித்து வருகிறது.
மக்கள் நலனுக்காக முழங்கும் குரல்!
மதுரை மாவட்டத்தில் கனரக தொழிற்சாலைக ளைத் துவங்கிடக் கோரியும், விமான நிலைய விரி வாக்கக் கோரிக்கை வைத்தும், அதி நவீன மருத்துவ மனையான எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைந்து முடிக்கக் கோரியும், நெய்பர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை நிறுவிட வேண்டியும், மதுரை மல்லியைப் பயன்படுத்தி வாசனை திரவியம் தொழில்களை உருவாக்கக் கோரியும், மாவட்டத்தில் உள்ள கிராமம், மாநகரங்களில் வாழும் மக்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான உத்தர வாதத்தை வலியுறுத்தியும் மதுரை மாவட்டத்தின் இரண்டு மாவட்டக் குழுக்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கைக ளையும், தமிழக மக்களின் மொழி உரிமையைப் பாதுகாக்க, மழை, வெள்ளம் மற்றும் கல்விக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுப்பதைக் கண்டி த்தும், மத நல்லிணக்கத்தை வற்புறுத்தியும் நாடாளு மன்றத்தில் மதுரையின் குரலாக தோழர் சு.வெங்க டேசன் குரல் எழுப்பி வருகிறார். மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்திட முகாம்கள் நடத்தப்படுகின்றன. மக்கள் குறைதீர்க்கும் முகாம்களும் இக்காலங்களில் நடத்தப்பட்டுள்ளன.
புதிய பாதையில் புரட்சியின் அடியெடுப்பு!
இப்படிப்பட்ட வரலாற்று பெருமை மிக்க மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாடு பல்வேறு அரசியல் முடிவுகளை விவாதத்தின் அடிப்படையில் எடுக்க இருக்கிறது. சுயேச்சையான கட்சி வளர்ச்சிக்குத் திட்டங்கள் தீட்டப்பட உள்ளன. பாஜகவை வீழ்த்த விரிவான அணியை உரு வாக்கத் திட்டங்கள் தீட்டிடவுள்ளது. கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தோழர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், பினராயி விஜயன், மாணிக் சர்க்கார் உள்ளிட்ட மக்கள் போற்றும் மாபெரும் தலைவர்களும், மத்திய கமிட்டி உறுப்பி னர்களும், இந்திய அரசியலின் திசை வழியைத் தீர்மானிக்கக்கூடிய பிரதிநிதிகளும் நாடு முழுவதும் இருந்து மதுரைக்கு வருகை தர உள்ளனர்.
வீரங்கொண்ட வரலாற்று மாநாடு!
ஏப்ரல் 2 அன்று கொடியேற்று நிகழ்வுடன் மாநாடு கம்பீரமாகத் துவங்குகிறது. மதியம் வரை பொது மாநாடாக நடைபெறவுள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி யன்று மாலையில் கேரளா, தமிழக முதல்வர்கள் பங்கேற்கும் மாபெரும் கருத்தரங்க நிகழ்வு தமுக் கத்தில் நடைபெறுகிறது. கண்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் 5 நாட்களும் தமுக்கத்தில் காட்சிப்படுத் தப்படுகிறது. ஏப்ரல் 6ஆம் தேதியன்று மாபெரும் செம்படை பேரணி மதுரையை அதிர வைக்க விருக்கிறது. அதேநாளன்று மாலை மஸ்தான்பட்டி அருகில் உள்ள மைதானத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். தென்மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தொண்டர்களும், தொழிலாளர்க ளும், பெண்களும், இளைஞர்களும், மாணவர்களும், குழந்தைகளும் பங்கேற்க உள்ளனர்.
மக்கள் புரட்சிக்கான முழக்கம்!
மதுரையில் நடைபெறும் 24ஆவது அகில இந்திய மாநாடு, மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிட, தொழி லாளி, விவசாயி வர்க்கத்தின் புரட்சிப் போர்ப்படை யைத் திரட்டி மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்திக் காட்டுவதற்குக் கூடிடும் மாநாடு. இது மார்க்சின் மிகப்பொருத்தமான வாசகமான “மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற வரலாற்றைப் படைக்கும்.