கொடிய அநீதியைத் தொடர்ந்து நிலவும் கவலைக்குரிய மௌனம்
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அதே வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட மற்ற இரண்டு பேரான உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இது வெறும் இரண்டு தனிநபர்களைப் பாதிக்கிற ஒரு நீதித்துறை உத்தரவு மட்டுமல்ல; இந்தியாவில் அரசியல் சாசன ஜனநாயகத்திற்கு மிகவும் கவலையளிக்கும் ஒரு தருணத்தை இது குறிக்கிறது. அநீதியான மற்றும் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த உத்தரவை ஆளும் கட்சியும், அதன் நச்சுத்தன்மை வாய்ந்த இணைய கும்பலும், பெருமளவில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊடக அமைப்பும் கொண்டாடுகின்றன. அதே நேரத்தில், இடதுசாரிக் கட்சிகளைத் தவிர்த்து
இதர பிரதான எதிர்க்கட்சிகளின் அரசியல் மௌனம் கவனிக்கத் தக்கதாக உள்ளது. இது கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். உபா சட்டமும் ‘தர ரீதியான வேறுபாடும்’ அசாதாரண சட்டங்கள் - குறிப்பாக சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (உபா) – “தேசிய பாதுகாப்பை” உறுதி செய்யும் நோக்கத்திற்காக உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், அறிவிக்கப்பட்ட இத்தகைய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுவதை விட, மாற்றுக் கருத்து கொண்டவர்களை நீண்ட காலம் சிறையில் அடைப்பதற்கான கருவிகளாக இச்சட்டங்கள் இயல்பானவையாக மாற்றப்படும் போக்கை இந்த உத்தரவு வலுப்படுத்துகிறது. நீதிபதிகள் அரவிந்த் குமார், என்.வி. ஆஞ்சாரியா ஆகியோரடங்கிய அமர்வு, இவ்வழக்கின் வாதித் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டது. இவர்களது தீர்ப்பு, காலித், இமாம் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்க ளிடமிருந்து “தர ரீதியாக வேறுபட்ட நிலையில்” இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. வன்முறை நடைபெற்ற காலகட்டத்தில் அவர்கள் இருவருமே தில்லியில் இருக்கவில்லை என்பது மட்டுமே வெளிப்படையான வேறுபாடாகும். தில்லி வன்முறைக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே – அதாவது 2020 ஜனவரி மாதத்தில் உணர்ச்சி
யைத் தூண்டக்கூடிய வகையில் பேசிய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இமாம் ஏற்கெனவே நீதிமன்ற காவலில் இருந்தார். நடத்தப் பட்டதாகச் சொல்லப்படும் சதித்திட்டத்தில் இவர்க ளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கான ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய இந்த உண்மை கள், தலைகீழாக மாற்றப்பட்டு, வன்முறை நடைபெற்ற இடத்தில் இவர்கள் இல்லாதது வன்முறையைத் திட்டமிட்டு அரங்கேற்றியதற்கான ஆதாரமாகத் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகள் மீதான அச்சுறுத்தல் உபா சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவது குறித்து மிகுந்த சமநிலைப் பார்வையோடு அளிக்கப்பட்ட முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின் தர்க்கத்தை தற்போதைய தனது உத்தரவில் நீதிமன்றம் மாற்றியமைத்துள்ளது. ஏற்கெனவே கொடூரமான தன்மையைக் கொண்ட இந்தச் சட்டத்திற்கு புதிய மற்றும் ஆபத்தான பரிமாணங்களை இந்த உத்தரவு சேர்க்கிறது. இந்த விளக்கத்தின்படி, எந்தவொரு வன்முறைச் செயலிலும் ஒருவர் ஈடுபட்டிருக்க வேண்டியதில்லை, அல்லது நேரடியாக வன்முறை யைத் தூண்டியிருக்க வேண்டியதில்லை. சாலை மறிய லில் பங்கேற்பது, பொது இடங்களில் இடையூறு விளை விப்பது அல்லது “பொருளாதார ஸ்திரத்தன்மையை”
பாதிக்கக்கூடியவையாகக் கருதப்படும் செயல்களில் ஈடுபடுவது ஆகியனவும் கூட இனி பயங்கரவாத நட வடிக்கையாகக் கருதப்படலாம். இத்தகையதொரு விரிவான விளக்கத்தின் கீழ், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்களது நிலங்களில் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பணிகளை எதிர்த்து சாலை மறியல் செய்யும் பழங்குடியின மக்கள், அல்லது சட்டவிரோதமாக தங்கள் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்க்கும் குடிசைப்பகுதிவாசிகள் என அனைவரும் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படலாம். அப்படியானால், அரசி யல் சாசனத்தின் ‘பொன்னான முக்கோணம்’ எனப் படும் பிரிவு 14 (சமத்துவத்திற்கான உரிமை), பிரிவு 19 (கருத்துச் சுதந்திரம்) மற்றும் பிரிவு 21 (வாழ்வு மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை) ஆகியவற்றின் நிலை என்னவாகும்? ஒரு சர்வாதிகார அரசாங்கம் தனது கொள்கைகளை ஏற்க மறுப்பதைத் தேசத்துரோ கத்துடன் சமன்படுத்தி, அச்சுறுத்தல் மற்றும் சிறை வாசம் மூலம் எந்தவொரு எதிர்ப்பையும் திட்டமிட்டு ஒடுக்க இந்த விளக்கமானது வழிவகுக்கிறது. தில்லி வன்முறையும் பின்னணியும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக எழுந்த பரவலான எதிர்ப்புதான் வன் முறைக்கான பின்னணியாகும். இந்த எதிர்ப்பா னது, பெரும்பாலும் அமைதியானதாகவும் மதச்சார் பற்றதாகவும் இருந்தது. இப்போராட்டத்தை கொடூர மானதாக சித்தரிப்பது என்பது 2020 பிப்ரவரி தில்லி சட்டமன்றத் தேர்தல்களில்
பாஜகவின் பிரச்சாரத் தின் முக்கிய அம்சமாக மாறியது. “பொத்தானை மிகவும் பலமாக அழுத்துங்கள், அதன் அதிர்வு ஷாஹீன் பாக் பகுதியில் உணரக்கூடிய வகையில் இருக்க வேண்டும்” என்ற உள்துறை அமைச்சரின் ஆத்திரமூட்டக்கூடிய வார்த்தைகளை யாரால் மறந்திட இயலும்? தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. ஆளும் கட்சியின் கண்ணோட்டத்தில், குடி யுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தை உடைக்கவும், மதரீதியாகப் பிளவுபடுத்தவும் வேண்டிய அவசியத்தை இத்தோல்வி மேலும் வலுப்படுத்தியது. அந்தக் காலகட்டத்தில் காலித், இமாம் ஆகியோர் ஆற்றிய உரைகளையும், அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா மற்றும் கபில் மிஷ்ரா போன்ற பாஜக தலை வர்கள் ஆற்றிய உரைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் யாருடைய வார்த்தைகள் வன்முறையைத் தூண்டின என்பது தெளிவாகும். இந்த பாஜக தலைவர்களுக்கு எதிராக இக்கட்டுரையாளர் புகார்களைப் பதிவு செய்தும், ஒரு முதல் தகவல் அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை. மாறாக,
வெறுப்புப் பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்த நீதிபதி எஸ். முரளிதர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதிகாரத்தின் மௌனமும் பொறுப்பும் 2020 பிப்ரவரி 23-இல் வன்முறை துவங்கியபோது, காவல்துறையினரில் சிலர் கலவரக்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததற்கான ஆதாரங்கள் வெளி வந்தன. தேசிய தலைநகரில் சட்டம் - ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் உள்துறை அமைச்சகத்திற்கு பாதுகாப்புப் படைக ளின் பற்றாக்குறையை அப்போதைய முதல மைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சுட்டிக்காட்டினார். குறைவான அளவில் காவல்துறையின் படைகளைப் பயன்படுத்தியதற்கு யார் பொறுப்பு? ராணுவத்தினர் ஏன் உரிய நேரத்தில் களமிறக்கப்படவில்லை? அதி காரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கொல்லப்பட்ட 53 பேரில் 41 பேர் இஸ்லாமியர்கள். இருந்தபோதும், 18 நபர்களைக் கொண்ட குழுவால் இந்த வன்முறை அரங்கேற்றப்பட்டது என்பதை நம்மை நம்பச் சொல்கிறார்கள். உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில்,
16 பேர் இஸ்லா மியர்கள் ஆவர். தில்லி காவல்துறையை அதன் தரமற்ற விசாரணைக்காகக் கீழமை நீதிமன்றங்கள் பலமுறை கண்டித்துள்ளன. இப்பிரச்சனைகள் மீது எதிர்க்கட்சிகள் – குறிப்பாக காங்கிரஸ் கட்சி – தெளி வாகவும், தொடர்ச்சியாகவும் குரல் கொடுப்பது அவசியமாகும். மௌனம் என்பது அநீதியை ஒரு வழக்கமான ஆட்சி முறையாக மாற்றிவிடுகிறது. உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் போன்றவர்களின் வழக்குகளில் ஜனநாயக எதிர்க்கட்சிகளால் தெளி வான நிலைப்பாடு எடுக்கப்படாமல் இருப்பது, அரசி யல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான போராட் டத்தை பலவீனப்படுத்துகிறது. நன்றி – தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஜனவரி 9, 2026) தமிழில் : ராகினி
