articles

img

வரலாற்றை கதையாகச் சொல்லும் கலை அமுதன் தேவேந்திரன்

வரலாற்றை கதையாகச் சொல்லும் கலை 

கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?” என்ற நூல், வெறும் வர லாற்று ஆவணம் அல்ல - மனசாட்சி யை உலுக்கும் அரசியல் விழிப்புணர்வு கருவி. எழுத்தாளர் சிந்தன், கதை சொல்வதுபோல் வரலாற்றை விவரிக் கிறார். “இப்படி நடந்துவிட்டால் என்னா கும்?” என்ற கிரைம் கதை போன்ற தொடக்கத்துடன் வாசகர்களை உள்ளி ழுத்து, கொலம்பஸின் வருகையி லிருந்து பிடல் காஸ்ட்ரோவின் புரட்சி வரை ஒவ்வொரு பக்கமும் நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.  

ஏகாதிபத்தியத்தின் கொடூரமான முகம்  

அமெரிக்காவின் 65 ஆண்டுகால பொருளாதார முற்றுகையை எதிர் கொண்டு நிற்கும் கியூபாவின் வீரம், நம் கண்களில் நீரை வரவைக்கிறது. 200க்கும் மேற்பட்ட சட்டங்களால் சுற்றி வளைக்கப்பட்ட சிறிய தீவு நாடு, பெரிய வல்லரசின் கொடுமையை எதிர்த்து நிற்கும் உறுதி உலக வரலாற்றிலேயே அரிதானது. இந்தியாவின் பண மதிப்பிழப்பை விட ஆயிரம் மடங்கு கொடூரமான நிலையை கியூபா தின மும் சந்திக்கிறது என்ற எழுத்தாளரின் ஒப்பீடு நம் நெஞ்சில் குத்துகிறது.

காலனியாதிக்கத்தின் வேர்கள்

ஸ்பெயின் காலனியாதிக்கத்தி லிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியம் வரையிலான கியூபாவின் அனுபவம், உலகின் எல்லா ஒடுக்கப்பட்ட நாடு களின் கதையாகவும் ஒலிக்கிறது. “வெள்ளைத் தங்கம்” என்று அழைக்கப் பட்ட சர்க்கரைக்காக பூர்வகுடி மக்க ளை அழித்த வரலாறு, இன்றைய கார்ப்பரேட் சுரண்டலின் முன்னோடி யாக நிற்கிறது.  

மாற்று வழியின் பிரதிநிதி  

இலவச கல்வி, மருத்துவம், வீடு, முழுவேலைவாய்ப்பு - கியூபா உல குக்குக் காட்டிய மாற்று வழி, ஏகாதி பத்தியத்தின் கண்ணில் முள்ளாக இருப்பது தான் இன்றைய முற்று கைக்கு காரணம். சோவியத் ஒன்றி யத்தின் அழுத்தத்தால் உலக நாடுகள் ஓய்வூதியம், சமூக நலத்திட்டங்களை அறிமுகப் படுத்தியது போல், கியூபாவும் மற்றொரு மாதிரியாக விளங்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் நோக்கம்.

 புரட்சியாளர்களின் வீர கதை

 “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்ற பிடலின் சிங்க கர்ஜ னையும், “அநீதி எங்கெல்லாம் நடக் கிறதோ அங்கே எல்லாம் என் கால்கள் பயணிக்கும்” என்ற சேகுவேராவின் அர்ப்பணிப்பும் இன்றும் நம்மை ஊக்குவிக்கின்றன. ஜூலை 26 இயக்கம் முதல்  மன்கடா தாக்குதல் வரையிலான போராட்ட வரலாறு நம்  இதயத்தை வேகமாக துடிக்க வைக்கிறது.  ஒவ்வொரு இடதுசாரியும் வாசிக்க வேண்டிய நூல். கியூபப் புரட்சியின் பக்கம் நின்று குரல் கொடுக்க வைக்கும் ஆற்றல் இந்த நூலுக்கு உண்டு. நியாயம் எங்கே இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. “கியூபப் புரட்சி ஓங்குக” என்று முழங்குவதே இன்றைய கட்டாயம்.