மாற்று அரசியலின் அடிப்படை மக்கள் நலனே
73 புத்தகங்களையும் 400க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ள பேராசிரியர் க.பழனித்துரையின் “கட்சி அரசியலிலிருந்து மக்கள் அரசியல்” என்ற நூல், இன்றைய அரசியலில் சூழ்ந்துள்ள துர்நாற்றத்திலிருந்து வெளிவர ஒரு மாற்று வழியை முன்வைக்கிறது. 19 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெற்றுத் தந்த இவரது வழிகாட்டுதல், புதிய பஞ்சாயத்து அரசாங்கம் உருவான பிறகு தமிழ்நாடு முழுவதும் பயிற்சி அளித்த அனுபவம், இந்த நூலுக்கு ஆழமான அடித்தளம் அமைக்கிறது.
மக்களாட்சியின் புதிய பரிமாணம்
தற்போது 60 சதவீத மக்களை முன்னேற்றத்திலிருந்தும் ஆளுகை யிலிருந்தும் ஒதுக்கி வைத்து, அவர்களுக்குப் பிச்சை போட்டு சுய மரியாதையைக் குலைத்து வாழ வைக்கும் சூழலை உருவாக்கி விட்டோம் என்ற ஆசிரியரின் கண்டு பிடிப்பு நம் நெஞ்சில் குத்துகிறது. மக்க ளை நுகர்வோராகவும், வாக்காள ராகவும், பயனாளிகளாகவும் மட்டுமே பார்க்கும் அணுகுமுறையிலிருந்து மாறி, ஆளுகைக்கும் முன்னேற்ற த்திற்கும் மக்களைத் தயார்செய்ய வேண்டும் என்ற அவரது கருத்து புரட்சிகரமானது.
உள்ளாட்சியின் வலிமை
புதிய உள்ளாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள வாய்ப்பு களை பயன்படுத்தி, புறக்கணிக்கப் பட்டவர்கள், விளிம்பு நிலை மக்கள், ஏழைகள், பெண்கள் அனைவரும் ஏற்றம் பெறலாம் என்ற நம்பிக்கை யூட்டும் செய்தி இந்த நூலின் மைய நாடி. ஒன்றிய மாநில அரசுகளின் உள்ளாட்சி குழுக்களில் உறுப்பின ராக இருந்த அனுபவத்தின் அடிப்படை யில் எழுதப்பட்ட இந்த நூல், நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்வைக்கிறது.
மக்கள் சார்ந்த பரிந்துரைகள்
அமைப்பு சார்ந்த மற்றும் தொழில்நுட்ப சார்ந்த பரிந்துரை களுக்கு மாறாக, மக்கள் சார்ந்த பரிந்துரைகளை முன்வைப்பது இந்த நூலின் தனித்துவம். மகாத்மா காந்தி மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்க சுதந்திரம் வேண்டும் என்றாரே தவிர, பிற்கால அரசியல் மக்களை ஆளுகைக்குத் தயார்செய்ய வில்லை என்ற ஆசிரியரின் விமர்ச னம் கூர்மையானது. தேர்தலுக்கு மேல் வியாபிக்க முடியாமல் மக்களாட்சி தேங்கி நிற்கும் இன்றைய சூழலில், இந்த நூல் புதிய திசையை முன்வைக்கிறது. கட்சி அரசியலைக் கடந்து பொது விவா தத்தின் வழியாக மக்கள் அரசி யலுக்குச் செல்ல வேண்டும் என்ற இவரது வாதம் காலத்தின் தேவை.