articles

img

மதச்சார்பின்மையே இந்தியாவின் மாண்பு - பேரா.அபூர்வானந்த்

மதச்சார்பின்மையே இந்தியாவின் மாண்பு - பேரா.அபூர்வானந்த்

“இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. அதன் ராணுவம் என்பது இந்தியாவின் அர சியல் சாசன மாண்புகளின் மிக அழகான தொரு பிரதிபலிப்பு என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” - இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரான கர்னல் சோபியா குரேஷியின் இந்த வார்த்தைகள், போர் முரசுகளின் சத்தம் ஓய்ந்த பிறகும் உரக்க ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது நம் மீது பொழிந்த எண்ணற்ற வார்த்தைகளில் இவை மிக முக்கியமானவையாகும்.   தங்களது ஆக்ரோஷமான, வன்முறையான, வகுப்புவாத கொக்கரிப்பில் இந்த வார்த்தைகளை மூழ்கடித்திட பாஜக தலைவர்கள் விரைவில் முயல் வார்கள். ஆனால், அத்தகைய உணர்ச்சியற்ற நிலைக் குள் நாம் அவர்களை செல்ல விடக்கூடாது.  

யாருக்கு வெற்றி -  யாருக்கு தோல்வி?

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற கூற்றை  முன்வைப்பதன் மூலம் மட்டுமே தனது எதிரியான பாகிஸ்தானைவிட தனது மேன்மையை இந்தியாவால் நிலைநாட்ட முடியும் என்பதை சோபியா குரேஷி போன்றவர்களின் வார்த்தைகள் நிரூபிக்கின்றன. தற்போது இரு தரப்பினரும் பின்வாங்கி, போர் தவிர்க் கப்பட்டதால், யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்ற கேள்வியே நீடிக்கிறது.  தாங்களே வெற்றி பெற்றதாக இரு நாட்டுத் தலை வர்களும் தங்களது மக்களிடம் சொல்ல முயற்சி செய்து வருகிறார்கள். இரு நாட்டு மக்களும் தங்களது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்ததால், தங்கள் தலைவர்களின் கூற்றுக்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கி றார்கள். எனினும், உண்மைகள் அவர்களை சங்க டத்தில் ஆழ்த்துகின்றன.  

எது தர்மம்? எது அதர்மம்?

இந்தக் கவலையை தள்ளி வைத்து விட்டு பார்த்தோ மேயானால், பாஜகவும், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பும் தத்துவார்த்த ரீதியாக ஒரு தீர்க்கமான தோல்வியைச் சந்தித்துள்ளன என்பதை நாம் புறக்கணிக்க முடியாது.  தேசியம் குறித்த அவர்க ளது கருத்து தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை விட இந்தியா மேம்பட்டதாக இருப்பது, நடைமுறை யில் அது ஒரு இந்து ராஷ்டிரமாக மாறிவிட்டதால் அல்ல;  மாறாக, இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்கிற அரசியல் சாசனத்தின் கருத்தாக்கத்தால் தான் அது சாத்தியமாகி உள்ளது.  ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்படும் ஒரு போர் இருக்கிறது. வார்த்தைகளை – கருத்துக்களின் வெளிப்பாடான வார்த்தைகள் – கொண்டு நடத்தப் படும் மற்றொரு போர் இருக்கிறது. இரண்டு நாடுகள் ஒன்றோடொன்று சண்டையிடும்போது, அதை கருத் துக்கள் அல்லது இலட்சியங்களுக்கான போராக மாற்றவும் அவர்கள் விரும்புகிறார்கள்.   போரிடும் நாடுகள், மற்ற நாட்டின் கருத்தை விட மேம்பட்ட கருத்தை தாங்களே கொண்டிருப்பதாக சொல்லிக் கொள்கின்றன. தங்களது கருத்து வெற்றி பெறுவதன் மூலமே ஒட்டுமொத்த உலகமும் பயன டையும் எனக் கூறி, போரில் ஈடுபடாத இதர நாடுகளின் ஆதரவை போரிடும் இரு நாடுகளும் கோருகின்றன.   போரிடும் இரு நாடுகளில் எந்த நாடு தர்மத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, எந்த நாடு அதர் மத்திற்கு சேவை செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. ஆக, இன்றைய நவீன காலகட்டத்தில், தர்மம் என்றால் என்ன? அதர்மம் என்றால் என்ன?  

கவனத்தில் கொள்ளப்பட  வேண்டிய பதில்

கடந்த பத்து நாட்களாக, வார்த்தைகள் மற்றும் கருத்துக்களின் போரும் நடைபெற்றுக் கொண்டி ருந்தது. இந்த காலகட்டத்தில், இந்திய ராணுவம் தன் சார்பில்  பேசி வந்தது.  அதன் அரசு அமைப்பு மௌன மாக இருப்பதை தேர்வு செய்தது.  ஆனால், வெளியுற வுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், ராணுவ செய்தித்  தொடர்பாளர்கள் குரேஷி மற்றும் வியோமிகா சிங் ஆகியோரும் பயன்படுத்திய வார்த்தைகள், வெளிப் படுத்திய கருத்துக்கள், ஏப்ரல் 22ஆம் தேதிக்கு முன்பும், பின்பும் இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருப்ப வர்கள் பயன்படுத்திய வார்த்தைகள், வெளிப்படுத் திய கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தாகவும், நேர்மாறானதாகவும் இருந்தன.  மோதலின் மூன்றாவது நாளன்று செய்தியா ளர்களிடம் பேசிய குரேஷி, தாக்குதலின்போது மசூதி களை இந்தியப் படைகள் குறி வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, ‘இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’ என்று குறிப்பிட்டார். மசூதிகளை இந்தியா குறிவைத்த தாக எழுந்த குற்றச்சாட்டுக்கான பதிலை அது அளித் தது. இந்தியா எந்தவொரு மத சின்னத்தையும் குறி வைக்க முடியாது. எந்த மதத்தையும் அவமதிக்க முடி யாது என்பதையே குரேஷி கூற முற்பட்டார்.   இது பாகிஸ்தானுக்கு மட்டும் சொல்லப்பட்ட பதி லல்ல. பிரதமரும், அவரது கட்சியின் இதர தலைவர்க ளும் கூட இதைக் கேட்க வேண்டும். அவர்கள் மட்டும் ஏன்? அவர்களைத் தேர்ந்தெடுத்த அவர்களது ஆதர வாளர்கள் அனைவரும் கூட இதை கவனிக்க வேண்டும்.  ஏனெனில், இவர்களைத் தேர்ந்தெடுத்தால் இவர்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை மாற்றி, இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக மாற்று வார்கள் என்ற நம்பிக்கையோடு இவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.  

அடிப்படைக் கட்டமைப்பின்  முக்கிய அங்கத்தின் மீதான தாக்குதல்

2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்ற பின் பாஜக தொண்டர்களிடம் உரையாற்றிய நரேந்திர மோடி, 2014க்குப் பிறகு மதச்சார்பின்மை என்ற சொல் நீக்கப்பட்டு விட்டதாக பெருமையாகக் கூறினார்.  2019 தேர்தல்களில் மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்துகொண்டு எந்த அரசியல் கட்சியாலும் மக்களை தவறாக வழிநடத்த முடியவில்லை என்று தன்னைத் தானே அவர் பாராட்டிக் கொண்டார்.  மோடிக்கு அடுத்து இரண்டாவது மிகவும் பிரபல மான பாஜக  தலைவரான யோகி ஆதித்யநாத், ‘மதச் சார்பற்ற’ என்ற சொல் ஒரு மிகப் பெரிய பொய் என 2017இல் கூறினார்.  2023இல் நாடாளுமன்றத்தில் அரசால் விநியோ கிக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் நகல்களில் இருந்து சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டன.  அரசியல் சாசனத்திலி ருந்து இவற்றை நீக்குவதற்கான முயற்சிகள் நீதிமன் றங்களில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப் பின் கொள்கை என்பது புனிதமானதல்ல என்றும் அதை மாற்ற இயலும் என்றும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பலமுறை கூறியுள்ளார்.  நாடாளு மன்றம் இயற்றும் எந்தச் சட்டமும் இந்த அடிப்ப டைக் கட்டமைப்பை மீற முடியாது என்று உச்ச நீதி மன்றம் பலமுறை கூறியுள்ளது.  மதச்சார்பின்மை இந்த அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான அங்கமாகும். தன்கர் இதை நீக்க விரும்புகிறார்.  மதச்சார்பின்மை என்பது பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அனைத்து குழுக்களாலும் மிகவும் வெறுக்கப்படும் கருத்தாகும். இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக மாற்றியதற்கு காரண கர்த்தாவாக நேரு கருதப்படுவதால், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அவரை மிகவும் வெறுக்கின்றன.

 கொல்லப்படும் ஆன்மாவும், கருத்தும்

பாஜகவுடனான உறவைத் துண்டித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியோடு இணைவது என்ற முடிவை உத்தவ் தாக்கரே எடுத்தபோது, மதச்சார்பற்றவராக அவர் மாறி விட்டார் என்று சொல்லி பாஜக தலை வர்கள் அவரை கேலி செய்தது உங்களுக்கு நினைவி ருக்கும்.  தாக்கரே மதச்சார்பற்றவராக மாற விரும்புகி றார் என அப்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநரும் எள்ளி நகையாடினார். மதச்சார்பற்ற என்ற வார்த்தை யை பாஜக ஆதரவாளர்கள் ஒரு தவறான சொல்லா கப் பயன்படுத்தி வருகிறார்கள்.   2014க்குப் பிறகு, மதச்சார்பற்ற என்ற வார்த்தை யை பாஜக ஆதரவாளர்கள் சிதைக்கத் துவங்கினர். அதில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் ‘சிக்குலர்’ என்று அழைத்தனர்.  மதச்சார்பற்றவர்களாக இருப்ப வர்கள் அனைவரும் நோயாளிகள் அல்லது இந்தக் கருத்தே ஒரு நோய்  என்று மறைமுகமாகக் குறிப் பிட்டனர். மதச்சார்பற்ற என்ற வார்த்தை களங்கப்படுத் தப்படாத காலத்தில், தாங்கள்தான் ‘உண்மையான’ மதச்சார்பற்றவர்கள் என்று பாஜகவினர் கூறிக் கொண்டிருந்தனர்.  சிறுபான்மையினரின் உரிமை களுக்காக வாதிடுபவர்களைத் தாக்கிட ‘போலி மதச்சார்பற்றவர்’ என்ற வார்த்தையை எல்.கே.அத் வானி உருவாக்கினார்.  மதச்சார்பின்மை என்ற வார்த்தையும், கருத்தும் மீண்டும் மீண்டும் தாக்கப்படுகின்றன அல்லது அவற்றை சிதைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.  தனது அரசின் திட்டங்கள் அனை த்து மக்களுக்கும் பயனளிப்பதால், தான் மதச்சார் பற்றவர் என மோடி கூறினார்.   மோடி இப்படி கூறுவது இந்த வார்த்தையின் ஆன்மாவையும், அதன் கருத்தை யும் கொல்வதாகும்.  அரசியல் உரிமைகளில் சமத்துவம் உண்மையில் மதச்சார்பின்மை என்பது அரசி யல் உரிமைகளில் சமத்துவத்துடன் தொடர்புடையதா கும்.  ஒவ்வொரு மதம் மற்றும் பிரிவைச் சார்ந்த மக்க ளுக்கும், அவர்களது எண்ணிக்கை எத்தனையாக இருந்தாலும் அவர்களுக்கு சமமான உரிமைகள் உள்ளன.  ஒவ்வொரு மதத்தைச் சார்ந்த அனைத்து மக்களும் சமமான நிலையில் அரசியலில் பங்கேற்க இயலும் என்பதே மதச்சார்பின்மை என்பதன் ஒரு பொருளாகும்.   அரசியல் பங்கேற்பு என்பது அனைத்து சமூகத்தி னருக்கும் வாக்களிப்பதற்கான உரிமையை மட்டும் குறிக்காது;  ஒவ்வொரு மதம் அல்லது சமூகத்தைச் சார்ந்த மக்களும் நாட்டின் பிரதிநிதிகளாக இருக்க இயலும் என்ற நம்பிக்கையை உணரும்போதுதான் அது அர்த்தமுள்ளதாகிறது.  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அரசியல் உரிமைகள் இல்லாத இந்தியாவையே பாஜகவின் சித்தாந்தவாதியான தீனதயாள் உபாத்யாயாவும், எம்.எஸ்.கோல்வால்க ரும் காண விரும்பினர்.  

 மதத்தை குறிப்பிட்டு  தனிநபர்கள் மீது தாக்குதல்

குஜராத்தில் மோடி பிரச்சாரம் செய்கிறபோது, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அகமது பட்டேல் முதலமைச்சராகி விடுவார் என்று சொல்லி இந்துக் களை அச்சுறுத்த முயன்றார். குஜராத்தின் முதல மைச்சராக ஆகும் உரிமை ஏன் பட்டேலுக்கு இருக்கக் கூடாது என்று யாருமே - காங்கிரஸ் கட்சியே கூட - கேட்கவில்லை.    அதேபோல், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், பத்ருதீன் அஜ்மல் முதல மைச்சராகி விடுவார் என்று சொல்லி அசாமில் உள்ள இந்துக்களை அச்சுறுத்த முயற்சி மேற்கொள் ளப்பட்டது.  இஸ்லாமியராக உள்ள அவருக்கு அசாம் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான உரிமை கிடையாதா? முலாயம் சிங் யாதவை “மௌலானா முலாயம்” என்று அழைத்து கேலி செய்ததைப் போல, ராகுல்  காந்தியை “ஷாஜாதா” என்றழைத்து மோடி தொடர்ந்து அவரை கேலி செய்கிறார்.  இதன் அர்த்தம் என்ன என்று நமக்குத் தெரியும்.   2002ஆம் ஆண்டில் குஜராத்தில் வகுப்புவாத வன்முறை நடைபெற்றதையடுத்து அங்கு தேர்தல் தேதிகளை மாற்றுவதற்கான முடிவை தலைமை தேர் தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ எடுத்தார்.   அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, தேர்தல் ஆணையர் கிறிஸ்துவர் என்பதை முன்னிலைப்படுத்த அவரது முழுப்பெயரைப் பயன் படுத்தி அவரை ‘ஜேம்ஸ் மைக்கேல் லிங்டோ’ என்ற ழைத்து, அவர் கிறிஸ்துவராக இருப்பதாலேயே தேர்தலை தள்ளிப்போடும் முடிவை எடுத்தார் என்ற தோற்றத்தை உருவாக்க மோடி முயன்றார்.   கிறிஸ்தவராக இருப்பதால் சோனியா காந்தியும் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். அரசியலில் சமமாகப் பங்கேற்பதோடு, கலாச் சார ரீதியாக தேசத்தை வரையறை செய்வதில் ஒவ்வொ ருவருக்கும் பங்கேற்பதற்கான உரிமை என்பது இல்லா மல் மதச்சார்பின்மை என்ற வார்த்தைக்கு எந்த அர்த்த மும் இல்லை.  இவ்விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்து வதற்கான எந்தவொரு வாய்ப்பையும் ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் நழுவவிடவில்லை.  கடந்த 11 ஆண்டுகளாக, பள்ளிப் புத்தகங்கள் மற்றும் பாடத் திட்டங்களிலிருந்து இஸ்லாமிய அடையாளத்துடன் உள்ள எல்லாவற்றையும் நீக்கிட அல்லது அழிக்க தொடர் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நகரங்கள், பேரூர்கள் மற்றும் சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, இந்துமய மாக்கப்பட்டு வருகின்றன.   மதச்சார்பின்மை என்பது ஓர் அந்நியக் கருத்து என்று சொல்லி அதைக் கைவிடுவதற்கானதொரு தத்து வார்த்தப் பிரச்சாரம் பல பத்தாண்டுகளாக மேற்கொள் ளப்பட்டு வருகிறது.   ஆனால் இன்றைக்கு, அதே மதச் சார்பின்மை என்பது இந்தியாவிற்கானதொரு சித்தாந்த கேடயமாக மாறியுள்ளது.  மோடியின் கருத் துக்களை சிறந்தது எனக் கருதுபவர்கள், தனது இழி வான, அருவருப்பான பெரும்பான்மை முகத்தை மறைத்து, உலக நாடுகளின் முன் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள ‘மதச்சார்பின்மை’ என்ற ‘முக மூடியை’ இன்றைய இந்திய அரசு அணிந்திருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிடலாம்.