articles

img

‘நவீனமயமாதல்’ என்பது வறுமை ஒழிப்பல்ல! - பேரா. பிரபாத் பட்நாயக்

‘நவீனமயமாதல்’ என்பது  வறுமை ஒழிப்பல்ல!

முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது இடைவிடாத உற்பத்தி மாற்றங்களையும், நுகர்வுப் பொருட்களின் தொடர் அறி முகங்களையும் கொண்டது. இங்கு மக்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்கள் காலப்போக்கில் மாறிக் கொண்டே இருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் சந்தைக்கு வரும்போது, பழைய பொருட்கள் மெல்லத் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பொதுவாக, நடுத்தர வர்க்க நுகர்வோரைக் குறிவைத்தே இப்புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு கட்டத்தில், பழைய பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் முடக் கப்பட்டு, மக்கள் அனைவரும் வேறு வழியின்றி புதிய பொ ருட்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி றார்கள்.

பொருளாதார வல்லுநர்கள் இதை விளக்கும் போது, “மக்களுக்குப் பழைய மற்றும் புதிய பொருட்க ளுக்கு இடையே தேர்வு செய்யும் உரிமை (Choice) இருக்கிறது; அவர்கள் நவீனமான புதிய பொருட்களையே விரும்புகிறார்கள்” என்று ஒரு பாவ னையை உருவாக்குகிறார்கள். ஆனால் எதார்த்தம் இதுவல்ல. ஒரு கணிசமான நடுத்தர வர்க்கம் புதிய பொருட்களை நுகரத் தொடங்கியதும், பழைய பொ ருட்களின் உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. இதனால் எஞ்சியிருக்கும் உழைக்கும் மக்கள் எவ்விதத் தெரிவுமின்றி புதிய பொருட்களை வாங்க நிர்ப்பந்திக் கப்படுகிறார்கள்.

நுகர்வு மாற்றமும்  வறுமையின் எதார்த்தமும்

புதிய பொருட்களின் வருகையை மட்டும் வைத்து வறுமை குறைந்துவிட்டது என்று வாதிடுவது எந்த வகை யிலும் நியாயமற்றது. ஒரு நுகர்வுப் பொருள் நவீன மாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே அதை ஒருவர் பயன்படுத்துகிறார் என்பது அவரது வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டதைக் குறிக்காது. மாறாக, அத்தகைய நவீனப் பொருட்களை வாங்குவதற்காக, அந்தச் சாதாரண உழைக்கும் வர்க்கக் குடும்பம் தனது சொற்ப வருமானத்தில் எவற்றைத் தியாகம் செய்கி றது என்பதே கேள்வி. நவீனப் பொருட்களை வாங்குவ தற்காக அடிப்படைத் தேவையான உணவு அல்லது பிற அத்தியாவசியத் தேவைகளில் அவர்கள் கைவைக்க வேண்டியிருந்தால், அது வறுமையின் அடையாளமே அன்றி வளர்ச்சியின் அடையாளம் அல்ல.

அறிவியல் மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் மனித வாழ்க்கையை மேம்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. உதாரணமாக, எட்டாம் ஹென்றி மன்னன் இன்று வாழ்ந்திருந்தால் ஒரு சிறிய புண்ணுக்காக இறந்தி ருக்க மாட்டார்; ஆன்டிபயாடிக் மருந்துகள் அவரைக் காப்பாற்றியிருக்கும். ஆனால், இன்று ஒரு வீட்டு வேலை செய்யும் தொழிலாளிக்கு ஆன்டிபயாடிக் மருந்து கிடைக்கிறது என்பதற்காக, அவர் ஹென்றி மன்னனை விட வசதியானவர் என்றோ அல்லது வறுமை அற்றவர் என்றோ கூறிவிட முடியுமா?

எனவே, வறுமை ஒழிப்பு என்பது புதிய பொருட்க ளை நுகர்வதைச் சார்ந்தது அல்ல. ஒரு குடும்பம் தனது வருமானத்தை நவீனத் தேவைகளுக்குச் செலவிடும் போது, வேறு ஏதேனும் அடிப்படை வசதிகளை இழக்கி றதா (Skimping) என்பதே வறுமையை அளவிடுவ தற்கான உண்மையான அளவுகோலாக இருக்க வேண்டும்.

பல பரிமாண வறுமைக் குறியீடும் (MPI) அதன் குறைபாடுகளும்

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP)  மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம் பாட்டு முயற்சி (OPHI) இணைந்து உருவாக்கியுள்ள ‘பல பரிமாண வறுமைக் குறியீடு’ (MPI), வறுமையை அளவிட கல்வி, குழந்தை இறப்பு, மின்சாரம், குடிநீர், கான்கிரீட் கூரை, எரிபொருள், உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பத்து காரணிக ளைப் பயன்படுத்துகிறது. ஆனால், இது வருமானம் அல்லது உண்மையான நுகர்வு அளவை கணக்கில் கொள்வதில்லை. இதில் இரண்டு முக்கிய சிக்கல்கள் உள்ளன: டமl வெற்றுப் புள்ளிவிவரங்கள்: ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது என்பது அவர் ஏழை அல்ல என்பதைக் குறிக்காது. கணக்கில் பணம் இல்லாமல் வெறும் கணக்கு மட்டும் இருப்பதால் என்ன பயன்? அதேபோல், குடிசைக்கு பதில் தகரக் கூரை போட்ட வீட்டில் வசிப்பதையும், முறையான ஆசிரி யர்கள் இல்லாத பள்ளியில் சில ஆண்டுகள் பயின்ற தையும் வறுமை ஒழிப்பாகக் கருதுவது அபத்த மானது. l நவீனமயமே வளர்ச்சி என்ற மாயை: இக்குறியீடு ‘நவீனமயமாதலை’ வறுமை ஒழிப்பாகக் கருதுகிறது. ஒரு நபர் தனக்குக் கான்கிரீட் கூரை வேண்டும் என்ப தற்காகவோ அல்லது பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவோ தனது உணவைக் குறைத்துக் கொள்கிறார் என்றால், அவர் வறுமையில் இருக்கிறார் என்பதே பொருள். ஊட்டச் சத்து என்பது ஒரு முக்கியமான ‘லிட்மஸ் சோதனை’  போன்றது. ஆனால், பல பரிமாண வறுமைக்குறியீடு (MPI) ஊட்டச்சத்தை நேரடியாகக் கணக்கில் கொள் ளாமல், ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தாலும் எட்டக்கூடிய உடல் நிறைக் குறியீட்டு எண் (BMI) அளவை மட்டும் கணக்கில் கொள்கிறது. இந்தியத் திட்டக்குழு முன்பு பயன்படுத்திய ‘கலோரி’ அளவுகோல் (நகர்ப்புறத்தில் 2100, கிராமப்புறத்தில் 2200 கலோரிகள்) இன்றும் மிகவும் பொருத்தமானதாக இருப்பதற்கு இதுவே காரணம். ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச ஆற்றலைப் பெறுகிறாரா  என்பதே வறுமையைத் தீர்மானிக்க வேண்டும்.

உலக வங்கியின் தவறான அணுகுமுறையும் இந்தியத் தரவுகளும்

மறுபுறம், உலக வங்கி செலவினங்களை மட்டுமே அடிப்படையாகக் கொள்கிறது. ஆனால், அது பயன் படுத்தும் ‘விலைவாசி குறியீடு’ (Price Index) முற்றிலும்தவறானது. கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியச் சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பெரும் செலவு உயர்வை இக்குறியீடு கணக்கில் கொள் வதில்லை. அரசு மருத்துவமனைகள் சிதைக்கப்பட்டு மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படும்போது, அவர்களின் வாழ்க்கைச் செலவு பலமடங்கு உயர்கிறது. இதை மறைப்பதன் மூலம் வறுமையின் அளவு செயற்கையாகக் குறைத்துக் காட்டப்படுகிறது. இதன் விளைவாகவே, இந்தியாவில் வறுமை வெறும் 2 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக ஒரு விசித்திரமான வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதே இந்தியா உலகப் பட்டினிக் குறியீட்டில் (Global Hunger Index) 115 நாடுகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலேயே தொ டர்ந்து நீடிக்கிறது. மாதம் 5 கிலோ இலவச ரேஷன் தானியத்திற்காகப் பல கோடி மக்கள் காத்திருக்கும் எதார்த்தத்திற்கும், இந்த 2 சதவீதப் புள்ளிவிவ ரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

விநியோக முறையும்  வாழ்வாதார உரிமையும்

வறுமை ஒழிப்பு என்பது வெறும் புள்ளிவிவரக் கணக்கல்ல, அது மக்களின் வாங்கும் சக்தியைப் பொறுத்தது. சோவியத் யூனியனில் வறுமை முழுமை யாக ஒழிக்கப்பட்டிருந்த காலத்தில், அரசாங்கம் வழங்கிய உணவு தானியங்கள் மக்களின் தேவைக்கும் அதிகமாகவே இருந்தன. ஆனால், இன்றைய இந்தியச் சூழலில், இலவச தானியம் என்பது பல கோடி ஏழை  மக்களுக்கு வெறும் சலுகையல்ல, அது அவர்களின் உயிர்நாடி. ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசின் இலவச உணவை மட்டுமே நம்பி வாழ்வதே, அங்கு வறுமை இன்னும் வேரூன்றி இருப்பதற்கான மிகப்பெரிய சாட்சியம். இந்த எதார்த்தத்தை மறைத்துவிட்டு, நவீனக் கட்டடங்களையும் மின்னணுப் பொருட்களையும் காட்டி வறுமை ஒழிந்துவிட்டதாகக் கூறுவது ஏழை மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தைக் கேலி செய்வதாகும்.

வறுமையின் புதிய வடிவங்கள்

இந்தியத் திட்டக்குழுவின் கலோரி அளவுகோ லின்படி பார்த்தால், 1993-94 முதல் 2017-18 வரையி லான ‘நவதாராளவாத’ பொருளாதாரக் கொள்கையின் காலத்தில் வறுமை கணிசமாக அதிகரித்துள்ளது. 2017-18 தேசிய மாதிரி ஆய்வு (NSS) தரவுகள் இந்த கசப்பான உண்மையை வெளிப்படுத்தியதால், ஒன்றிய பாஜக அரசு அந்தத் தரவுகளைப் பொதுவெளியில் விடாமல் தடுத்தது. மேலும், தரவு சேகரிப்பு முறை யையே மாற்றியமைத்து முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட முடியாதவாறு செய்துவிட்டது. சர்வதேச நிதியமே (IMF) ஒப்புக்கொள்வது போல, ஒருகாலத்தில் மிகச்சிறந்த புள்ளி விவரக் கட்டமைப்பைக் கொண்டிருந்த இந்தியா, இன்று நம்பகத்தன்மையற்ற தரவுகளைக் கொடுக்கும் நாடாக மாறியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், கண்ணைக் கவரும் ‘நவீன நுகர்வுப் பொருட்கள்’ நம் வீடுகளுக்குள் நுழைந்தி ருப்பது வறுமை ஒழிப்பல்ல; மாறாக, அடிப்படைத் தேவை களைச் சுருக்கிக் கொண்டு நாம் வாங்கும் அந்த நவீனப் பொருட்கள் வறுமையின் புதிய வடிவங்களே ஆகும்.