articles

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற மறியல்

மாற்றுத் திறனாளிகள்  உதவித்தொகையை  உயர்த்தி  வழங்கக் கோரி  பிப்ரவரி 10 முதல் காலவரையற்ற மறியல்

காஞ்சிபுரம், ஜன. 28 - அண்டை மாநிலங்களுக்கு இணை யாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற தொடர் மறியல் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) முடிவு செய்துள்ளது.  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் இதற்கான விரிவான போராட்டத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.  மாநிலத்தலைவர் தோ. வில்சன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், என்பி ஆர்டி அகில இந்திய செயல் தலைவர் எஸ். நம்புராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் பா. ஜான்சிராணி, பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அண்டை மாநிலங்களுடன் ஒப்பீடு இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:  மாற்றுத் திறனாளிகளின் கண்ணிய மான வாழ்விற்கு நிதி ஆதாரமே மிக முக்கி யத் தேவையாக உள்ளது. இன்றைய கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதாரச் சூழலில், தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை மிகவும் சொற்பமாகவே உள்ளது. அண்டை மாநி லங்களான ஆந்திராவில் ரூ. 6,000 முதல் ரூ. 15,000 வரையிலும், புதுச்சேரி யில் ரூ. 4,000 முதல் ரூ. 5,700 வரை யிலும் உதவித்தொகை வழங்கப்படு கிறது. அதேபோல் தெலுங்கானாவில் ரூ. 4,016, திரிபுராவில் ரூ. 5,000 மற்றும் ஹரியானாவில் ரூ. 3,500 என கௌரவ மான தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் வெறும் ரூ. 1,500 மற்றும் ரூ. 2,000 என மிகக் குறைந்த தொகையே வழங்கப்படுகிறது. இது மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடப் போதுமானதாக இல்லை. தொடர் போராட்டம் உதவித்தொகையை ஆந்திர மாநிலத்திற்கு இணையாகக் குறைந்த பட்சம் ரூ. 6,000-ஆக உயர்த்தி வழங்கக் கோரி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆறு கட்டப் போராட்டங்களைச் சங்கம் நடத்தியுள்ளது. எனினும், தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டின் அறைகூவலுக்கிணங்க, வரும் பிப்ரவரி 10 முதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழகம் தழுவிய அளவில் காலவரையற்ற மறியல் போராட்டத்தை முன்னெடுக்க மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் ப.சு. பாரதி அண்ணா, வி. ராதாகிருஷ்ணன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.