articles

img

லெனினின் படைப்பாக்கக் கோட்பாடுகள் - அ.அன்வர் உசேன்

லெனினின் படைப்பாக்கக் கோட்பாடுகள் 

தோழர் லெனின் தனது வாழ்நாளில் ஏராளமான புரட்சிகரமான படைப்பாக்கக் கோட்பாடுகளை உருவாக்கினார். இவை அனைத்தும் வெறும் ஏட்டளவிலான தத்துவங்களாக இல்லாமல், நடைமுறைப் பணி களுக்காகவே உருவாயின. மார்க்சியம் என்பது “வறட்டுச் சூத்திரம் அல்ல; அது செயல்முறைக்கு வழிகாட்டி” என்பதையும், “துல்லியமான நிலை மை குறித்த துல்லியமான ஆய்வு” அவசியம் என்பதையும் லெனின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். “உண்மை என்பது அந்தரத்தில் தொங்கும் (Abstract) ஒன்றல்ல; அது மிகக் குறிப்பானது (Concrete)” என்பதே லெனினின் பார்வையாக இருந்தது. லெனினின் நினைவு தின மான ஜனவரி 21 (இன்று), அவரது படைப்பாக்கக் கோட்பாடுகளில் சிலவற்றை ஆழமாகப் பரிசீலிப்பது இன்றைய காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

 கட்சி அமைப்பு பற்றிய கோட்பாடு  லெனினுக்கு முன்பாக கம்யூனிஸ்ட் கட்சி  உருவாக்கத்திற்கு எந்த முன்மாதிரியும் இருக்க வில்லை. புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை எனச் சொன்ன லெனின், அந்தச் சித்தாந்தம் வெல்ல வேண்டு மானால் அதனை அமலாக்கத் தகுதியான புரட்சி கரமான கட்சி இருக்க வேண்டும் என வாதிட்டார். கட்சி உறுப்பினராகத் தகுதி படைத்தவர் யார் என்பது குறித்து லெனின் நடத்திய போராட்டம் மகத்தானது.

தன்னை கம்யூனிஸ்ட் என அறி வித்துக் கொள்ளும் எவரும் உறுப்பினராகலாம் என்ற மென்ஷ்விக்குகளின் தாராளவாத போக்கை லெனின் நிராகரித்தார். ஒரு கட்சி உறுப்பினர் என்பவர் கட்சித் திட்டத்தை ஏற்பதுடன், நிதி உதவி செய்வது மட்டுமல்லாமல், கட்சியின் ஏதேனும் ஒரு அமைப்பில் இணைந்து அதன் முடி வுகளை அமலாக்க வேண்டும்; கட்சியின் கட்டுப்பாட்டுக்குத் தன்னை உட்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என்று லெனின் நிபந்தனை விதித்தார்.  இந்த லெனினிய அடிப்படையில், கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது  முக்கிய அமைப்புப் பணியாக முன்வைத்துள் ளது. மார்க்சிஸ்ட் கட்சியின்  அமைப்புச் சட்டம் விவரிக்கும் 10 கடமைகளில், மிக முக்கியமான 5 கடமைகளை நிறைவேற்றுவதை உறுப்பினர் பதிவு புதுப்பித்தலுக்குக் கட்டாயம் என மதுரை யில் நடந்த 24-ஆவது மாநாடு வலியுறுத்தியுள்ளது.  மையப்படுத்தப்பட்ட அரசு இயந்திரத்தை எதிர்க்க “ஜனநாயக மத்தியத்துவக் கொள்கை” அவசியம் என்றார் லெனின். விவாதங்களில் ஜன நாயகம், அமலாக்கத்தின் பொழுது மத்தியத்து வம், அமலாக்கத்தைப் பரிசீலிக்கும்போது மீண்டும் ஜனநாயகம் என இயங்கும் இந்த  முறைதான் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான கட்டமைப்பிற்கு அடித்தளமாகும்.  ஏகாதிபத்தியம் மற்றும் காலனிய நாடுகள்  ஏகாதிபத்தியத்தை “முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டம்” மற்றும் “நிதி மூலதனத்தின் சகாப்தம்” என லெனின் வரையறுத்தார்.

இதன் முக்கியக் குணாதிசயங்களாக ஏகபோகங்கள் உருவாவது, அது ஒட்டுண்ணி மற்றும் சிதையும் தன்மையுடையது, அது மரணத்தின் வாயிலில் உள்ள முதலாளித்துவம் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டினார். உலகின் வளங்களைப் பங்கிடுவதில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஏற்படும் போட்டியில் போர் தவிர்க்க முடியாதது என்ற லெனினின் மதிப்பீடு இரண்டு உலகப்போர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.  இன்றைக்கும் உக்ரைன் போர், பாலஸ்தீன இனப்படுகொலை, வெனிசூலா மீதான தாக்கு தல், ஈரான் மீதான மிரட்டல், கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயற்சி ஆகியவற்றின் பின்னணி யில் அமெரிக்க ஏகாதிபத்தியமே உள்ளது. இன்றைய ஏகாதிபத்தியம் பொருளாதார மிரட்டல், தொழில்நுட்ப மிரட்டல், ராணுவ மூர்க்கத்தனம் மற்றும் தனது பண்பாட்டைத் திணித்தல் எனப் பல்முனைச் சூழ்ச்சிகளைக் கையாள்கிறது

.  காலனிய நாடுகளில் நிலவும் தேசிய விடு தலைப் போராட்டங்களையும் லெனின் உற்றுக் கவனித்தார். ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே உண்மையான சர்வதேச ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற கோட்பாட்டை அவர் உலகிற்கு வழங்கினார்.  பின்தங்கிய தேசத்தில் சோசலிசம் சோசலிசப் புரட்சி என்பது வளர்ந்த முதலாளித் துவத் தேசங்களில் மட்டுமே சாத்தியம் என்றி ருந்த பழைய மதிப்பீட்டை லெனின் மாற்றியமை த்தார். ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் சமச்சீரற்ற வளர்ச்சி நிலவுவதால், ஒரு தனிப்பட்ட தேசத்தில் அதுவும் பின்தங்கிய தேசத்தில் புரட்சி சாத்தியமே என்பதை லெனின் விளக்கினார்.

தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வும் வலுவான கட்சி அமைப்பும் (அகநிலைச் சாதகம்) இருக்கு மானால் பின்தங்கிய சூழலிலும் புரட்சியை வெல்ல முடியும் என்பதை ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. லெனினுக்குப் பின் தோழர் ஸ்டாலின் சோசலிச நிர்மானம் மூலம் இதனை உறுதிப்படுத்தினார்.  சோசலிசத்தைப் பாதுகாத்தல் புரட்சி வெல்வதைவிட அதனைப் பாது காப்பது கடினமானது எனக் குறிப்பிட்ட லெனின், இளம் சோசலிசச் சமூகத்தைப் பாதுகாக்க நெகிழ்வான அணுகுமுறைகளை உருவாக்கி னார்.

இதற்காக அவர் கடும் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். சோசலிச ரஷ்யாவைப் பாது காக்க ஜெர்மனியுடன் உடன்படிக்கை செய்த போது, அதனை ஏற்காத இடது சீர்குலைவு வாதிகள்,  லெனினைச் சுட்டனர். தோள்பட்டை யில் குண்டு பாய்ந்த நிலையிலும் லெனின் தள ராது பணியாற்றி, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை யும் மக்களையும் ஓரணியில் திரட்டினார். அரசு பற்றிய கோட்பாடு, மூன்றாவது அகிலம்,  கம்யூனிச இயக்கத்தில் உருவாகும் திரிபுகள் குறித்த எச்சரிக்கை என லெனின் வழங்கிய பங்களிப்புகள் எண்ணற்றவை. லெனினின் கோட் பாடுகளும் சாதனைகளும் உலக முதலாளித்து வத்திற்கு இன்றும் பீதியை உண்டாக்குகின்றன. அதனால்தான் மார்க்சியத்துடன் லெனினி யமும் கம்யூனிஸ்டுகளின் பிரிக்க முடியாத வழிகாட்டியாகத் திகழ்கிறது.