articles

img

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்

டாக்கா,டிச.30- வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.  முற்றிய கல்லீரல் சுருக்க நோய், மூட்டு வலி, நீரிழிவு நோய், மார்பு மற்றும் இதயப் பிரச்ச னைகள் என நீண்டகால உடல் நலப் பிரச்சனை களுக்கு மருத்துவமனையில்  தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி அளவில் காலமானார். ஜியாவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறும் என்றும், அவரது கணவரும், மறைந்த குடியரசுத் தலைவரும், பிஎன்பி கட்சி யின் நிறுவனருமான ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் முழு அரசு மரியாதை யுடன் அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்றும் இடைக்கால அரசாங்கம் தெரி வித்துள்ளது. மூன்று முறை வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஜியா கடந்த 2018-ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு நடந்த இளைஞர்களின் பெரும் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.  இதன் பிறகு அமைந்த இடைக்கால அரசு வங்கதேச தேசியவாதக்  கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர்கள் மீதான வழக்குக ளை ரத்து செய்தது. அதன்படி கலிதா ஜியா விடு தலையானார். தலைவர்கள் அஞ்சலி  வங்கதேச முன்னாள் பிரதமர்  ஷேக் ஹசீனா, தற்போதைய இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், பிஎன்பி கட்சியின் மூத்த தலைவர்கள், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்  ஷெரிப், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என உலக நாடுகளின் தலைவர்கள் கலிதா ஜியாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.   கலிதாவின் மறைவுச் செய்தி கேட்டு  தான் ஆழ்ந்த துயரமடைந்துள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும் வங்கதேச மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்க தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும்  என  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.