சாதிவெறி ஆணவக் கொலைகளைத் தடுத்திட கிளர்ந்தெழுவோம்! - கே.பாலகிருஷ்ணன்
சாதிய கொடுமைகள், ஆணவப்படு கொலைகள் மற்றும் மனித உரிமை கள் பறிப்பு போன்ற பிரச்சனைகளில் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில், அண்ணா மலை நகர் காவல் நிலையத்தில் நந்தகோபால் என்ற விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப் பட்டு, அவரது மனைவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக் கப்பட்ட வழக்கு; ஜெய்பீம் திரைப்படத்தின் கருப்பொரு ளான ராஜாக்கண்ணு என்ற ஆதிவாசியை கம்மாபுரம் காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்து அவருடைய உடலை மறைத்துவிட்ட வழக்கு - உள்ளிட்ட பல வழக்குகளில் வலுமிக்க மக்கள் போ ராட்டத்தையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி, குற்றமிழைத்த காவலர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதேபோல ஆதிவாசி மக்கள் மீது கொடூரங்கள் பல இழைத்த வாச்சாத்தி வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு பெற்றது; எண்ணற்ற ஆணவக் கொலை களில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வரலாறு தமிழகம் அறிந்ததே!
விருத்தாசலத்தில் ஆணவப் படுகொலை
இதனுடைய தொடர்ச்சியாக, விருத்தாசலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை என்ற கிராமத்தில் நடந்த சாதிய ஆணவப்படுகொலையினை எதிர்த்து நடத்தப்பட்ட நீண்ட நெடிய மக்கள் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தின் விளைவாக இரண்டு தினங்க ளுக்கு முன்னால் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மீண்டும் தமிழகத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
காதல் தம்பதியினர் கொடூர கொலை
விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும்போது ஒருவரையொருவர் விரும்பினார்கள். முரு கேசன் பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த சூழ்நிலை யில் இருவரும் கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பட்டியலினத்தைச் சார்ந்த முருகேசன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கண்ணகி ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதை உறவினர்கள் - குறிப்பாக கண்ண கியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற அச்சத்தில், இருவரும் திருமணம் செய்து கொண்ட விபரம் கசிய ஆரம்பித்தபோது தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய அவர்கள் 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இரண்டு நாட்கள் தன்னுடைய மகளைக் காண வில்லை என்று தேடிய கண்ணகியின் தந்தை, ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி, பல இடங்க ளில் தேடி, கடைசியில் கண்ணகிக்கும் முருகேச னுக்கும் இருக்கும் காதல் தொடர்பை அறிந்து, முருகே சனை அழைத்து வந்து ஒப்படைக்க வேண்டுமென முருகேசனின் பெற்றோரை மிரட்டியதன் விளைவாக, முருகேசனின் உறவினர்கள் அவரைத் தேடிக் கண்டுபிடித்து துரைசாமியிடம் ஒப்படைத்தனர். முருகேசனை அழைத்து வந்தவுடன், அவரை மிகக் கொடூரமாக துரைசாமியும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும், சாதிவெறி கொண்டு, மனிதாபிமா னமற்ற முறையில் சித்ரவதை செய்தனர். கைகளை யும் கால்களையும் கட்டி, அரை நிர்வாணமாக மரத்தில் கட்டித் தொங்கவிட்டனர்; கிணற்றுக்குள் தலை கீழாகத் தொங்கவிட்டு “கண்ணகியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்? உண்மையைச் சொல்” என்று கொடூரமான சித்ரவதைகளைச் செய்தனர். இந்த கொடுமையை கண்டு முருகேசனின் உறவினர்கள் பதறிப்போய், “முருகேசன் ஏதோ பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகத் தானே அழைத்து வரச் சொன்னீர்கள்; இப்போது இப்படி சித்ரவதை செய்கி றீர்களே” என்று கேட்டபோது, அவர்களையும் மிரட்டி யுள்ளனர். அந்த சித்ரவதை தாங்க முடியாமல் கண்ணகி யின் இருப்பிடத்தை முருகேசன் சொன்ன பிறகு, உட னடியாக அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று கண்ணகியை அழைத்து வந்தனர். மறுநாள் காலையில் இருவரையும் கட்டி வைத்து அடித்து, கண்ணகியின் முகத்தில் காறித் துப்பி, இருவரையும் கொலை செய்வதற்காக விஷத்தைக் கலந்து முருகே சன் மற்றும் கண்ணகியின் காதுகளில் ஊற்றி, இரு வரையும் துடிதுடிக்க படுகொலை செய்தனர். இந்த கொடுமை நடக்கும்போது அந்த ஊரே திரண்டு அதை வேடிக்கை பார்த்துள்ளது. சாதிவெறி தலைக் கேறி மனித உயிர்களை மாய்க்கும்போது கூட யாரும் தட்டிக் கேட்க முன்வரவில்லை. இருவரும் இறந்த பிறகு, கண்ணகியை பிற்படுத் தப்பட்ட மக்களின் சுடுகாட்டில் எரித்தனர். முரு கேசனை அவருக்குரிய சாதியின் சுடுகாட்டில் எரித்து, சாம்பலை வாரி வீசிவிட்டனர்.
காவல்துறையின் அலட்சியம்
இந்த கொடூரமான நிகழ்வு நடந்தபோது, இது வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் படிப்படியாக வெளியே தெரிய ஆரம்பித்தது. பலரும் அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். இந்த செய்தியை கேள்விப்பட்டதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த கிராமத்துக்குச் சென்று விசாரித்தபோது, அங்குள்ள மக்கள் வாய் திறக்கவில்லை. பட்டியலின மக்களும் பயந்து, யாரும் பேசுவதற்கு முன்வரவில்லை. இருப்பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அந்த மாவட்டம் முழுவதும் கண்டன இயக்கம் நடத்தப் பட்டது. விருத்தாசலத்தில் ஒரு பெரிய சாலை மறியல் போராட்டத்தை நடத்தி, வழக்குப் பதிவு செய்யவும் குற்ற வாளிகளைக் கைது செய்யவும் கோரிக்கை விடுத்தோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகளும் இப்போராட்டத்தில் இணைந்தன. சம்பவம் நடந்த இடத்திற்கும் காவல் நிலை யத்திற்கும் இடையே 2 கிலோமீட்டர் தூரம்தான் இருந்தது. ஆனால் ஒரு வாரம் வரை இந்த சம்ப வத்தைப் பற்றி விசாரணையோ, முதல் தகவல் அறிக் கையோ பதிவு செய்ய விருத்தாசலம் காவலர்கள் முன்வரவில்லை. கொலை நடந்த அன்றே காவல் துறை ஆய்வாளர் அந்த இடத்திற்குச் சென்று பார்வை யிட்டிருப்பதாக தகவல்கள் உள்ளன. சம்பவம் நடக்கும்போது, முருகேசனின் தாயார் சின்னப்பிள்ளை காவல் நிலையத்திற்கு ஓடிச்சென்று “என் மகனைக் கொலை செய்யப் பார்க்கிறார்கள்” என்று வாய்மொழியாகப் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரை சாதியைச் சொல்லி மிகக் கேவலமா கத் திட்டி விரட்டி அனுப்பிவிட்டனர். மறுநாள் கொலை நடந்த பிறகும், சின்னப்பிள்ளையும் மற்றவர்களும் புகார் கொடுக்கச் சென்றபோது, காவல் நிலை யத்தில் இருந்தவர்கள் அவர்களை மீண்டும் திட்டி புகாரை வாங்க மறுத்து அனுப்பிவிட்டனர். ஆனால், அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்ச னையை எழுப்பத் தொடங்கிய பிறகு, இதை எப்படியா வது ஒரு வழக்குப் பதிவு செய்து முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்ட அடிப்படை யில் ஒரு போலியான வழக்கைப் பதிவு செய்தனர்.
திட்டமிட்ட மோசடி வழக்கு
சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு பிறகு கண்ணகி யின் தந்தை துரைசாமி ஒரு சுய புகார் கொடுத்ததாக கிராம நிர்வாக அதிகாரியிடம் போலியாக ஒரு ஆவ ணத்தை எழுதி வாங்கி அதை முதல் தகவல் அறிக்கை யாக பதிவு செய்தனர். அதில், “என் மகள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரை காதலித்ததால் எனக்கு அவ மானம் ஏற்பட்டது. அந்த வெட்கத்தால், நானும் என் மகன் மருதுபாண்டியனும் சேர்ந்து அவர்களைக் கொன்றோம். அதேபோல முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு முருகேசனின் காதில் விஷத்தை ஊற்றி னார். கண்ணகியும் முருகேசனும் மரணமடைந்த பிறகு இருவரது உடலையும் எரித்து சாம்பலாக்கிவிட்டோம். இப்போது மனசாட்சி உறுத்துவதால் இந்த ஒப்புதல் வாக்குமூலம் தருகிறேன்” என்று ஒரு போலியான ஒப்புதல் வாக்குமூலத்தை வடிவமைத்து அதை பதிவு செய்தனர். அதில் 8 குற்றவாளிகளாக முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது உறவினர்கள் இளைய பெருமாள், ஐயாசாமி, குணசேகரன் ஆகிய நான்கு பேரும், கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்க்கப்பட்டார்கள். இந்த எட்டு பேரையும் கைது செய்து, மறுநாளே சிறையில் அடைத்தனர். முழுவதும் உண்மைக்கு மாறாக; மகனை இழந்து பாதிப்புக்கு உள்ளான முருகேசனின் தந்தையை யும் உறவினர்களையும் கொலை வழக்கில் குற்றவா ளிகளாக சேர்த்து கைது செய்தது அக்கிரமத்தின் உச்சமாகும். மேலும், அதிர்ச்சியூட்டும் விதமாக, 23 நாட்களுக் குள், இந்த இரட்டைக் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மாவட்ட நீதி அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அரசு தரப்பு வழக்கறிஞர், “விசாரணை பெரும்பாலும் முடிந்துவிட்டது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும், எனவே ஜாமீன் வழங்க ஆட்சேபனை பதிவு செய்யாத நிலையில் நீதி மன்றம் இவர்களுக்கு பிணை வழங்கி உத்தர விட்டது” என்றார். ஒரு வாரம் முதல் தகவல் அறிக்கை பதியாமல் தாமதப்படுத்திய காவல்துறை, வெறும் 23 நாட்களில் “விசாரணை முடிந்துவிட்டது” என்று கூறியது மிகப்பெரிய கொடுமை.
நீதிக்கான போராட்டமும் சிபிஐ விசாரணையும்
இந்நிலையில், முருகேசனின் தந்தை சாமிக் கண்ணு, அவரது சகோதரர் அய்யாசாமி உள்ளிட்ட நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்க றிஞர் ரத்தினத்தின் மூலம் ஒரு மனுத் தாக்கல் செய்த னர். அதில், “இது முற்றிலும் உண்மைக்கு மாறான வழக்கு. இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முருகேசன் - கண்ணகி ஆகிய இருவரையும் அடித்து, சித்ரவதை செய்து, அரை நிர்வாணப்படுத்தி, ஊர் மக்கள் முன் காதில் விஷம் ஊற்றிக் கொன்றவர்கள் துரைசாமியும் அவரது குடும்பத்தினரும்தான். எங்கள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர். எனவே இதை சி.பி.ஐ. விசார ணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரினர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை விசாரித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், சி.பி.ஐ. விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையை துவங்குவதற்கு முன்னால், விருத்தாசலம் காவல்துறையினர் பதிவு செய்த மோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்து அதை நீதிமன்றத்தில் காவல்துறையினர் சமர்ப்பித்துவிட்டனர். இதன் பின்னர் சிபிஐ விரி வான விசாரணை நடத்தி 51 சாட்சிகளை விசாரித்து, அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சாமிக்கண்ணு, அய்யாசாமி உள்ளிட்ட நான்கு பேரையும் வழக்கிலிருந்து சிபிஐ விடுவித்தது. கண்ணகியினுடைய தந்தை துரைசாமி, அவருடைய மகன் மருதுபாண்டியன் உள்ளிட்ட 9 பேர் மீதும் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கோடு பொய் வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் தமிழ் மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகியோரை யும் குற்றவாளிகளாக சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடந்தது 2003. ஆனால் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை துவங்கியது 2020. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் குற்றவாளிகள் மாற்றி மாற்றி நீதிமன்றங்களில் மனுக்களை போட்டு வழக்கை இழுத்தடித்து காலதாமதப்படுத்தினர். இவை களையெல்லாம் கடந்து கடலூர் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து அமர்வு நீதிபதி உத்தண்டராஜன் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் குற்றவாளிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டு பெரும்பகுதி மாவட்ட விசார ணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின ருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கொடூரமான ஆணவப் படுகொலை வழக்கில் இரட்டை கொலை புரிந்த துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தகுந்தது. மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு இரட்டை கொலையை மறைக்கவும் சாதிவெறிக்கு துணைபோன - தற்போது காவல்துறை கண்கா ணிப்பாளராக உள்ள செல்லமுத்துவுக்கு ஆயுள் தண்ட னையும், அவரது உத்தரவிற்கிணங்க வழக்குப் பதிவு செய்த தமிழ்மாறனுக்கு நான்காண்டு தண்டனையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரி கள் கொலையாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு கொலையை மறைக்க முயற்சிப்பது, சாதிவெறிக்கு துணைபோவது கொலைக்குற்றத்திற்கு சமமானது என்ற வகையில் காவல்துறையினருக்கும் தண்டனை வழங்கியிருப்பது பாராட்டத்தகுந்த முன்னுதார ணமாகும். இதன் பிறகாவது காவல்துறையினர் இதிலிருந்து உரிய படிப்பினைகளை பெற வேண்டும். பெறு வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டி யுள்ளது.
வாழ்விழந்த தளிர்கள்
சாதி வெறியால் வாழ வேண்டிய இளம் தளிர்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இருவரும் நல்ல பட்டதாரிகள். முருகேசன் பெங்களூரில் வேலையில் இருந்தார். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ்ந்திருக்க வேண்டிய அத்தம்பதிகள் சாதிவெறி தீயில் வெந்து மடிந்தது வேதனை மிக்கதாகும். சாதிவெறியால் இந்த படுகொலைகளை புரிந்தவர்களும் ஆயுள் தண்டனை பெற்று வாழ்விழந்துள்ளனர். இத்தகைய சாதிவெறி பல குடும்பங்களின் அழிவுக்கும் நாசத்திற்கும் தான் வித்திட்டது என்பதை படிப்பினையாக அனைவரும் கொள்ள வேண்டும். இத்தகைய சாதிவெறியை எதிர்த்து சமூகத்தை முன்னோக்கி பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து சாதியைச் சார்ந்த இளைஞர்களும் உறுதி கொள்ள வேண்டும். பட்டியலின மக்களை நவீன காலத்திலும் அவமானப்படுத்துவது, தீண்டாமைக் கொடுமை கடைப்பிடிப்பது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். சாதிய ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்தை அமைக்கும் உன்னதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். சாதி ஆணவப் படுகொலை வழக்கில் நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ரத்தினம் மற்றும் அவரோடு பணியாற்றிய வழக்கறிஞர்கள் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சாதிய கொடுமையால் தனது மகனை இழந்த போதும் அதற்கு உரிய நீதி கேட்டு நெடிய பயணத்தை