articles

img

கோடையில் ஒருநாள் புயல் வரலாம் ...-இரா.எட்வின்

“சகலமும் மாறிவிட்டன என் கவிதைகளும்
தான்”  - என்பான் பாப்லோ நெருடா. 

சகலமும் மாறும்போது புயலும் மாறத்தான் செய்யும் என்று பத்துப் பதினைந்து நாட்களாக நமக்கு பாடம் நடத்திவிட்டு நகர்ந்து போயிருக்கிறது “பெஞ்சால்” புயல்.  உருவான புள்ளியில் இருந்தே அனைவரையும் தூங்கவிடாமல் போக்குக் காட்டிக்கொண்டே இருந்தது பெஞ்சால்.  

ஒவ்வொரு முறை புயல் தோன்றும்போதும் ஒரு நாடு அந்தப் புயலுக்கு பெயர் வைக்கும். அந்த வகையில் இந்த முறை அந்த வாய்ப்பு சவூதி அரே பியாவிற்கு கிடைத்தது. அந்த வாய்ப்பில் இந்தப் புய லுக்கு ”பெஞ்சால்” என்று பெயர் வைத்தது சவூதி.   

பெஞ்சால், 

Fகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று நம்ப வைத்தது 
Fமேற்கு வடமேற்காக நகரத் தொடங்கியது
Fபுயலாக வலுப்பெற்று கரையைக் கடக்கும் என்று நம்ப வைத்தது
Fதென் மேற்காக நகர்ந்தது
Fகடலுக்குள் உள்ளே போகத் தொடங்கியது
Fபுயலாக மாட்டேன், புதுவைக்கும் சென்னைக்கும் இடையே காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாகவே கடப்பேன் என்றது
Fபிறகு புயலானது
Fகரையைத் தொட்டு சில நொடிகள் கழித்துதான் ரேடார் கண்ணில் பட்டது
Fகரையைக் கடந்தும் புயலாகவே ஆறேழு மணிநேரம் நகராமல் நின்றது

இப்படியாக உலகத்தில் உள்ள அனைத்து வானிலை ஆய்வு மையங்களையும் ஆய்வா ளர்களையும் முடிந்தவரை குழப்பியது பெஞ்சால். ஒருகட்டத்தில் எங்கே, தான் வைத்த பெயர் பொரு ளற்றுப் போய்விடுமோ என்று சவூதியே கலங்கி நின்றிருக்கும். 

ஒரு பக்கம் இணையதளத்தில் பிள்ளைகள் ஆய்வாளர்களை, ஆய்வு மையங்களை, தொலைக் காட்சி வானிலை செய்தியாளர்களை என்று அனை வரையும் சகட்டுமேனிக்கு பகடி செய்து தீர்த்தார் கள். இன்னும் சிலர் மேற்சொன்ன அனைவரையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார்கள். 

ஆனால் இவர்கள் யாரும் பொய் சொல்ல வில்லை. தங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப அறிவையும் தங்களிடம் இருக்கும் தொழில்நுட்ப சாதனங்களையும் பயன்படுத்தி உறங்காமல் உண்ணாமல் உழைத்து உண்மையைத்தான் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கணித்தது அந்தந்த நேரத்து உண்மை யாக இருந்தது. அடுத்த மணியில் அது மாறிக் கொண்டே இருந்தது. 

உங்கள் கருவிகளைக் கொண்டு உங்களது அறிவைக் கொண்டு என்னைக் கணித்துவிட முடி யாது என்று இயற்கை அனைவருக்கும் பாடம் நடத்திக் கொண்டிருந்தது.  

புயல் குறித்து கணிக்க நம்மிடம் 

F    அமெரிக்கன் ஆய்வுமுறை
F    ஐரோப்பிய ஆய்வுமுறை

என்று இரண்டுவகை ஆய்வு நடைமுறைகள் உள்ளன. இவற்றில் ஒன்றையோ அல்லது இரண் டையும் ஒப்பிட்டோதான் உலக நாடுகள் புயலைக் கணிக்கின்றன. எல்லா கடல்களும் ஒன்றல்ல. ஆஸ்திரேலியாவில் உள்ள கடலின் வெப்பமும் இந்தியாவில் உள்ள கடலின் வெப்பமும் ஒன் றல்ல. அமெரிக்காவில் உள்ள கடலின் வெப்பமும் இந்தியாவில் உள்ள கடலின் வெப்பமும் ஒன்றல்ல. உண்மை இப்படி இருக்க எல்லா கடலுக்கும் ஒரே ஆய்வுமுறை எப்படி சரியாக இருக்கும் என்ற கேள் வியை “பெஞ்சால்” உலகின்முன் வைத்திருக்கிறது. 

கடலின் வெப்பநிலை மட்டுமல்ல காற்றின் வெப்பநிலையும் இடத்திற்கு இடம் மாறுபட்டே இருக் கிறது. கடலின் வெப்பநிலையும் காற்றின் வெப்ப நிலையும் எந்தவொரு இடத்திலும் எப்போதும் நிலையான ஒரு அளவில் இருப்பதில்லை. இதுவும் மாற்றத்திற்கு உட்பட்டதுதான். 

“பூவுலகின் நண்பர்கள்” அமைப்பின் சுந்தர்ராஜன் சொல்லும் கீழ்க்காணும் மூன்று விஷயங்கள் மிக மிக முக்கியமானவை, 

Fஉலகிலேயே அதிக வெப்பமான கடல் இந்தியப் பெருங்கடல்
Fஅரபிக்கடலில் வெப்பநிலை வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது
Fவருங்காலங்களில் அரபிக்கடலில் இருந்தும் அதிக அளவிலான புயல்கள் கிளம்பக் கூடும்

சுருக்கமாகவும் பாமரத்தனமான புரிதலோடும் அணுகினாலே மூன்று விஷயங்களை நாம் புயல் விஷயத்தில் கணக்கிலெடுக்க வேண்டும் என்பது புரியும் 

1)    புயல் குறித்த ஆய்வினை ஆழப்படுத்த வேண்டும்
2)    புயலின் சகலநிலைகளும் வெப்பத்தோடு சம்பந்தப்பட்டது என்ற உண்மையை உணர வேண்டும்
3)    வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது என்பதை நமது செயல்திட்டத்திற்குள் கொண்டுவர வேண்டும் 

இதை இன்னும் விரிவுபடுத்திப் பார்ப்பதற்கு முன் “பேரிடர் மேலாண்மை” என்பது பேரிடர் ஏற் பட்ட பிறகு அதை எதிர்கொள்ளும் நடைமுறை என்று பதிந்து போயிருக்கும் பொதுப்புத்தியில் இருந்து நாம் வெளிவர வேண்டும். வரப்போகும் பேரிடர் குறித்து முன்னமே கணிப்பது என்பதே பேரி டர் மேலாண்மையின் முதற்கூறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

பேரிடருக்குப் பிறகு அதை சரி செய்வதற்கும் நிவாரணத்திற்குமாக நாம் செலவு செய்வதைவிட பேரிடர் குறித்து கணிப்பதற்கான ஆய்விற்கு நாம் அதிகமாக செலவு செய்யவேண்டும். கணிப்பதற் காக நாம் செய்யும் செலவு சேதங்களை சரி செய்வ தற்கும் நிவாரணத்திற்கும் செய்யவேண்டிய செலவை பெருமளவு குறைக்கும் என்பதோடு உயிர்ச் சேதத்தையும் கணிசமாகக் குறைக்கும். 

ஒன்றிய அரசு ஆய்விற்கான நிதியை அவசியம் ஒதுக்க வேண்டும். உரிய நிவாரண நிதியையே வழங்க மறுக்கும் அவர்களா ஆய்விற்கான நிதியை ஒதுக்குவார்கள் என்ற அய்யம் எழுவது இயல்பு தான். உரிய முறையில் அணுகினால் ஆய்விற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கும் என்றேபடுகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்குத் தான் அவர்கள் நிதியை மறுக்கிறார்கள். குஜராத் ஆந்திரா உள்ளிட்ட  மாநிலங்களுக்கு கேட்காமலே அவர்கள் அள்ளித் தருகிறவர்கள்தான்.  

நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஆய்வு என்பது பாஜக மற்றும் அவர்களது கூட்டாளிகள் ஆளும் மாநிலங்களுக்கும் சேர்த்துதான் என் பதை புரிய வைத்துவிட வேண்டும். 

புயல் குறித்த ஆய்வானது இந்தியாவின் தட்ப வெப்பத்திற்கேற்றதாக அமைய வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவே ஒரு துணைக்கண்டம் என்ற வகையில் இந்தியாவிற் குள்ளேயே பல்வேறு தட்பவெப்ப மண்டலங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் கருத்தில் கொண்டு பன்முகப்பட்ட ஆய்வினை ஒன்றிய அரசு ஒருங்கி ணைக்க வேண்டும். 

உலகமே பேரதிகமாக வெப்பப்பட்டுக்கொண்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதல் குறித்து அனை த்து நாடுகளும் கவலை கொள்ளவே செய்கின் றன. புவி வெப்பமயமாதலைத் தடுக்க அந்தந்த நாடு களும் முயற்சி செய்ய வேண்டும். அனைத்து நாடுக ளும் ஒன்று சேர்ந்தும் களப்பணியாற்றவேண்டும். 

வதற்கே ஒவ்வொரு நாடும் தயாராக இல்லை. இதில் ஒன்றுசேர்ந்தும் செலவை செய்ய வேண்டும் என்றால் சிக்கல்தான். ஆனால் உலக மக்கள் ஓங்கிக் குரலெடுத்து அந்தந்த நாடுகளுக்குள்ளும் வெளியிலும் அழுத்தத்தைத் தரவேண்டும்.

 காற்றின் வெப்பநிலை அதிகரித்தலே குறைந்த நேரத்தில் பேரதிக மழையைக் கொடுக்கிறது.  காற்று வெப்பமானால் பூமியும் கடலும் சேர்த்தே வெப்பமாகும். பூமி வெப்பமானாலும் காற்றும் கடலும் சேர்த்தேதான் வெப்பமாகும். இதுவரைக் கும் இவ்வளவுதான்.

ஆனால் கடல் வெப்பமானால் கடல் மட்டம் உயரும்.  கடல் மட்டம் உயருமானால் சென்னை உள்ளிட்ட பல ஊர்கள் மூழ்கிப்போகும்.  “கோடையில் ஒருநாள் மழை வரலாம்” என்றார் கண்ணதாசன். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் “கோடையில் விரைவில் புயல் வரலாம்” என்கிற நிலை உருவாகும்.

 காலநிலை மாற்றம் எப்படி மாறினாலும், பேரி டர் எந்த வகையில் வந்தாலும் கடலோடு சம்பந்தப் பட்ட மீனவர் மற்றும் துப்புரவு தொழிலாளர் வாழ்க்கை விடியாமலே கிடக்கிறது.  

மீனவர் சரி, துப்புரவு தொழிலாளர்கள் எந்த வகையில் கடலோடு சம்பந்தப்படுகிறார்கள் என்று கேட்கலாம்.   கடல் உருவான புயல் அழித்த நமது வாழ்க்கை யை இதுவரை நமக்காக செப்பனிட்டுத் தந்தவர்க ளும் தரப்போகிறவர்களும் அவர்கள்தான்.