“உச்ச நீதிமன்றத்தின் மீது கை வைக்காதே!”
பாஜக தலைவர்களும் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும் உச்ச நீதிமன்றத்தின் மீது மிகவும் மோசமான முறையில் தாக்கு தல்களைத் தொடுத்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளை நிறுத்தி வைப்பதில் அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான ஆளுநரின் பங்கு குறித்து உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பையும், அதைத் தொடர்ந்து வக்பு திருத்தச் சட்டம் மீது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்த தையும் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
தன்கர், துபேயின் தாக்குதல்
‘நாட்டிலுள்ள சட்டங்கள் தங்களு க்குப் பொருந்தாது’ என்று நீதிபதிகள் கருது வதால், அவர்கள் தங்களை ஒரு “நாடாளு மன்றத்திற்கும் மேலானவர்களாக” (“super parliament”-ஆக) கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர், நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரத்தை வழங்கிடும் அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவை “ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை” என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, “நாட்டில் நடக்கும் அனைத்து உள்நாட்டுப் போர்களுக்கும்” இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாதான் காரணம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், பின் நாடாளுமன்றத்தை இழுத்து மூடவேண்டி யதுதான் என்றும் அவர் திருவாய் மலர்ந்திருக்கிறார். நீதிமன்றங்களின் அதிகாரம் உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தி ற்குக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே தன்கர் குழுவினரின் விருப்பமாகும். இது அரசமைப்புச் சட்டத் திற்கு எதிரானதாகும். நாடாளுமன்றம்/ சட்டமன்றங்களால் இயற்றப்படும் எந்த வொரு சட்டமும், அரசமைப்புச்சட்டத் திற்கு இசைவானதா என்பதைப் பார்த் திட உச்சநீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் உண்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச மைப்புச்சட்டத் திருத்தங்கள் கூட அரச மைப்புச்சட்டத்தின் “அடிப்படைக் கட்ட மைப்பிற்குள்” உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் பரிசீலித்திடலாம். பாஜக மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் போன்ற அதன் ஆதரவாளர்க ளின் கோபத்தைத் தூண்டியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வாயத்தின் சமீபத்திய தீர்ப்பாகும். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட பத்து சட்டமுன்வடிவுகளுக்கு முத லில் ஒப்புதல் அளிக்காமல் தடுத்து, அவை மாநில சட்டமன்றத்தால் மீண்டும் நிறை வேற்றப்பட்டபோது, அரசமைப்புச்சட்டத் தின் விதிகளின்கீழ் அவற்றுக்கு ஒப்புதல் வழங்குவதற்குப் பதிலாக, அவற்றை அவர் குடியரசுத் தலைவருக்குப் பரிந்து ரைத்தார். இவ்வாறான ஆர்.என்.ரவியின் நடவடிக்கையானது சட்டத்தின்படி தவறானது என்றும், சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அரசமைப்புச்சட்டத்தின் 142 ஆவது பிரிவைப் பயன்படுத்தி இந்தப் பத்து சட்டமுன்வடிவுகளும் சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இவ் வாறு உச்சநீதிமன்றம் சரியானமுறை யில் தலையிட்டு, ஆளுநரின் அரச மைப்புச்சட்டத்திற்கு முரணான நடவ டிக்கையை மிகச் சரியானவகையில் சரி செய்திருக்கிறது.
சர்வாதிகார அணுகுமுறையை சரி செய்திருக்கிறது
பாஜக அல்லாத மாநில அரசாங்கங் கள் மற்றும் சட்டமன்றங்களின் செயல் பாட்டில் தலையிடவும் தடுக்கவும் ஆளு நர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் பாஜக இத்தகைய நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் தலையிட்டு, நிர்வாகத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் மேலாக செயல் பட்டு, சரி செய்திருக்கிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் பின்பற்றிவந்த சர்வாதிகார அணுகுமுறை யைத்தான், உச்ச நீதிமன்றம் ஒரு சவா லாக எடுத்துக்கொண்டு இப்போது வெற்றி கரமாகச் சரி செய்திருக்கிறது. வக்பு சட்டமும் 3 கேள்விகளும் வக்பு திருத்தச் சட்டமுன்வடிவு தொடர் பான வழக்கில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதி கள் கொண்ட அமர்வாயம், தொடக்கத்தி லேயே, ஒரு மதக் குழு அல்லது சிறு பான்மையினருக்கு அரசமைப்புச்சட்டத் தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் சட்டத்தின் சில அம்சங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. “பயன்பாட் டின் மூலம் வக்ஃப்” என்ற கருத்தை நீக்கும் மிக மோசமான விதியை நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இந்தச் சட்டம் நடை முறைக்கு வந்தால், ஒரே அடியில், பல்லா யிரக்கணக்கான வக்ஃப் சொத்துக்களுக்கு எந்த உரிமையும் இருக்காது என்று நீதி மன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. இரண் டாவதாக, வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களை எவ்வாறு நியமிக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. மேலும் கோயில் அறக்கட்டளை கள் மற்றும் வாரியங்களில் முஸ்லிம்கள் நியமிக்கப்படுவார்களா என்றும் கேள்வி கேட்டிருக்கிறது. மூன்றாவதாக, அச்சுறுத்தலும் மிரட்டலும் வக்பு சொத்துக்கள் குறித்து எழுப்பப் படும் தகராறுகளைத் தீர்ப்பதில் மாவட்ட ஆட்சியரின் பங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இந்த ஷரத்துக்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுவதைத் தடுக்க, அடுத்த விசாரணையில், நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை வக்ஃப்-பயன்பாட்டு சொத்துக்களின் தன்மையை அரசாங்கம் எந்த வகையிலும் மாற்றாது என்று சொலி சிட்டர் ஜெனரல் பதிவு செய்தார். வக்பு வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யப்படாது என்றும் அவர் கூறினார். இந்த இரண்டு அறிக்கைகளும் உச்ச நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவில் பதிவு செய் யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் அடுத்த விசாரணை மே 5 அன்று நடைபெறும். வக்பு திருத்தச் சட்டம் குறித்த உச்ச நீதி மன்றத்தின் இந்த நிலைப்பாடுதான் நிஷிகாந்த் துபே போன்ற மதவெறி பிடித்த பாஜக தலைவர்களை கோபப்படுத்தி யுள்ளது. அவர்களின் கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தின் மீதான அச்சுறுத்தல்க ளாகவும் மிரட்டலாகவும் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் துபேயின் இந்தக் கருத்துக்களைக் கண்டித்து, தலைமை நீதிபதியை அவம திப்பதாக கூறியுள்ளது. துபே மீது அவ மதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவ தற்கு அட்டர்னி ஜெனரலிடம் ஒப்புதல் அளிக்குமாறும் கோரியுள்ளது. அனைத்து அரசமைப்புச் சட்ட நிறுவனங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரு வதற்கான அதன் சர்வாதிகார இயக்கத் தில், மோடி அரசாங்கம் உச்ச நீதிமன்றத் தையும் விட்டுவைக்கவில்லை. இருப்பி னும், அனைத்து முயற்சிகளும் மேற்கொள் ளப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றம் அதற்கு முழுமையாகப் பணிந்திடவில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய நீதித்துறையின் சுதந்திரம் சமீபத்திய காலத்தில், ஒன்றிய அரசால் குறிவைக்கப்பட்ட தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதில் ஜாமீன் வழங்குவதும் அடங்கும். மாநில சட்டமன்றங்களின் உரிமைகளைப் பாது காக்கும் தீர்ப்பு மற்றும் ஆளுநர்களின் அதி காரங்களை தவறாகப் பயன்படுத்துவ தைத் தடுக்கும் தீர்ப்பு ஆகியவற்றுடன் வக்பு சொத்துக்கள் தொடர்பான முஸ் லிம்களின் உரிமைகளை நசுக்குவதை நீதிமன்றம் ஆதரிக்காது என்பதற்கான அறிகுறிகளும் ஆட்சியாளர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மற்றொரு தாக்குத லுக்கு ஒரு சந்தர்ப்பமாக மாறியுள்ளன. அனைத்து ஜனநாயகப் பிரிவுகளும் ஒன்றி ணைந்து நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், “உச்ச நீதிமன்றத்தின் மீது கை வைக்காதே!” என்று கோரவும் வேண்டிய நேரம் இது. ஏப்ரல் 23, 2025, தமிழில் : ச.வீரமணி