கறிக்கோழி விவசாயிகளை பாதுகாத்திட பெருந்திரள் போராட்டம்
உலக அளவில் கறிக்கோழி உற்பத்தியில் இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள் ளது. இந்திய அளவில் கறிக்கோழி உற்பத்தி யில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பிடித் துள்ளது. இந்தியாவின் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோழி வளர்ப்பு 5 சதவீதம் பங்களிக்கிறது. தமிழ்நாட்டில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கோழி பண்ணை கள் உள்ளன. குறிப்பாக திருப்பூர், கோயம் புத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்டு 20க்கும் அதிகமான மாவட்டங்களில் பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணைகள் உள்ளன. இதில் 4 லட்சத்திற்கும் அதிகமா னோர் வேலை செய்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோழிப்பண்ணைகளு க்கு பெயர் பெற்றது. இங்கு மட்டும் 4207 குஞ்சு பொரிப்பகங்கள் உள்ளன. 52 பிராய்லர் கம்பெனிகள் உள்ளன. சுகுணா, பயனியர் போன்ற பிராய்லர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பிராய்லர் ஒருங்கிணைக்குழுவின் (¡õCC) தலைமை அலுவலகம் பல்லடத்தில் செயல் பட்டு வருகிறது. பல்லடத்தில் 25 ஆயிரத் திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது 4 ஆயிரம் கோடி மதிப்புடையது. பல்லடத்திலி ருந்து ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பல்லடத்தில் மட்டும் பிராய்லர் கோழி வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபடும் புள்ளி விபரம். இதே போல் தமிழ்நாட்டில் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் விவசாயிகள் பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒப்பந்தம் பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் அதற்கான கொட்டகைகள் அமைத்து ஏதாவது ஒரு கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து வருகிறார்கள். குஞ்சுகள் கொடுப்பதுடன் அதற்கான தீவனம் மற்றும் மருந்துகளை கம்பெனிகள் வழங்கு கின்றன. அதே போல் குஞ்சுகளை பராமரிப்பது மற்றும் அதற்கு தேவையான வசதிகளை செய்வது, குஞ்சுகளை கவ னிப்பது விவசாயிகளின் பணியாகும். 42 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் 2 கிலோ வீதம் கோழி வளர்த்த பின் கம்பெனிகள் கோழிகளை எடைபோட்டு எடுத்து செல் கின்றன. இந்த காலத்தில் கோழிக் குஞ்சை பெரிய, கோழியாக வளர்ப்பதற்கான கூலி யாக ஒரு கிலோவிற்கு கம்பெனிகள் இப்போது கொடுப்பது கூலி ரூ.6.50 மட்டுமே. கோழி குஞ்சை பாதுகாப்பதற்கு தென்னை நார் மற்றும் அடுப்புப்கரி பயன் படுத்தப்படுகிறது. கொட்டகை அமைக்கும் செலவு, தண்ணீர், மின்சாரம், வேலை ஆட்க ளுக்கான கூலி வெளியிலிருந்து டாக்டரை அழைத்து வருவதற்கான செலவு உள் ளிட்டவை அனைத்தும் விவசாயிகளின் செலவு. இதனை மொத்தமாக கணக்கிட் டால் கம்பெனிகள் தரும் கூலி ஒரு கிலோ விற்கு ரூ.6.50 என்பது விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. விவசாயிகளின் செலவு மட்டுமே 10 ரூபாய்க்கும் அதிகமாக ஆகிவிடுகிறது. மேலும் பண்ணையில் வேலை செய்பவர்களுக்கும் கூலியும் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் கோழிக் குஞ்சுகள் வளரும் போது இறப்பு ஏற்பட்டால் அதற்கான பணத்தை கூலியில் கழித்து தான் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. இந்த பணமும் உடனடியாகவோ அல்லது சுமார் ஏழு நாட்க ளுக்கு உள்ளாகவோ வழங்குவது கிடை யாது. கம்பெனிகள் பணம் வழங்க மாதக் கணக்கில் காலம் தாழ்த்துகிறார்கள். இதில் விவசாயிகள் கம்பெனிகளிடம் கறாரா கக் கேட்டால் அடுத்த முறை குஞ்சு தருவது கிடையாது. விவசாயிகளை அலையவிடும் போக்கு கம்பெனிகளிடம் உள்ளது. வேறு கம்பெனிகளுக்கு விவசாயிகள் மாறினாலும் அங்கும் குஞ்சு தருவது கிடையாது. ஏனெ னில் அவர்களுக்குள் (கம்பெனிகளுக்குள்) ஒருங்கிணைப்பு உள்ளது. எனவே, நீ அந்த கம்பெனியில் சண்டை போட்டவன் உனக்கு குஞ்சு தர முடியாது என்று புதிய கம்பெனிகளும் குஞ்சு தர மறுக்கின்றன. இதனால் விவசாயிகள் கறிக்கோழி கம்பெ னிகளுக்கு அடிமைகளாக உள்ளனர். கூலி உயர்வு ஆண்டு தோறும் முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் பேசி தீர்வு காண வேண்டும் என்ற ஒப்பந்தத்தை இன்று வரை அமலாக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுக ளுக்கு முன்பு போட்ட ஒப்பந்தப்படியான கூலியை இப்போது வழங்கி வருகிறார்கள். விலைவாசி மிகப்பெரிய அளவில் உயர்ந்து விட்ட சூழலில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை ரூபாய் 20 ஆக உயர்த்தினால் தான் இந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாக்க முடியும். கோரிக்கைகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் விவ சாயிகளின் கோரிக்கைகள் வருமாறு: G கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக ஒரு கிலோ வுக்கு ரூ.20 கம்பெனிகள் தர வேண்டும். G ஆண்டுக்கு 6 முதல் 7 பேட்ஜ் குஞ்சுகள் வழங்க வேண்டும். G தரமான 50 கிராம் எடையுள்ள குஞ்சுகள் கம்பெனிகள் தர வேண்டும். G கடந்த காலத்தை போல் தமிழக அரசே குஞ்சுகள் வழங்கிட வேண்டும் G கோழிகள் இறந்தால் அதனை வீடியோ எடுத்து கம்பெனிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற லைவ் நிகழ்வுகளை கம்பெனிகள் கைவிட வேண்டும். G கொட்டகைகள் அமைக்க மானியத்துடன் கூடிய கடன் தமிழக அரசு வழங்கிட வேண்டும். மானியக்கடன், இலவச மின்சாரம், நலவாரியம் G கோழிப் பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிடவேண்டும். G கோழி வளர்ப்பு விவசாயிகளிடமிருந்து எழுத்தப்படாத செக் லீப்களை கம்பெனி கள் வாங்கக் கூடாது. G கோழிப்பண்ணை விவசாயிகளுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு நலவாரி யம் ஏற்படுத்திட வேண்டும். G கோழி மற்றும் கொட்டகைகளுக்கு இன்சூ ரன்ஸ் வசதி குறைந்த பிரிமியத்தில் ஏற் gடுத்த வேண்டும். G பண்ணைகளிலிருந்து கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை காவல் துறை மறித்து அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். G கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கம்பெ னிகள், அரசுதரப்பு அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடத்தி கூலி உயர்வு குறித்து மற்றும் இதர விசயங்கள் பேச வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசும், கம்பெனிகளும் செயல்படுத்தி னால் மட்டுமே தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் விவசாயி களை பாதுகாக்க முடியும். இல்லையேல் ஆண்டுதோறும் விவசாயிகள் இத்தொழி லில் ஈடுபட முடியாமல் கடன் வலையில் சிக்கி தற்கொலை போன்ற செயல்களுக்கு செல்லும் நிலை ஏற்படும். எனவே, இக்கோ ரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 28ஆம் தேதி சென்னையில் கறிக்கோழியுடன் கறிக் கோழி வளர்ப்பு பண்ணை விவசாயிகள் பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ள னர். அதன் பின் அரசு அதிகாரிகளுக்கு மனு அளிக்கவும் உள்ளனர். எனவே, கறிக் கோழி வளர்ப்பு விவசாயிகள் இப்போராட்டத் தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.