மீனு கொக்கை முழுங்குமா? - அமர்த்தியா
மீன்குஞ்சுகள் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. சின்னச் சின்ன புழுக்களை விழுங்கிக் கொண்டே அம்மா மீன் எங்கேயென்பதிலும் கவனமாக இருந்தன. அவ்வப்போது ஒன்றின் மீது ஒன்று தவழ்ந்தும் கொண்டன. அம்மா. அங்க போலாமா? - ஒரு மீன் குஞ்சு கேட்டது. இந்தக் குளம் முழுக்க உன்னோடது தான். ஆனா, அங்க பாரு. ஒரு கால் தெரி யுதா. ஆமா. அதென்ன? கொக்கோட காலு. நமக்காகக் காத்துக்கிட்டு இருக்கு. நமக்காக எவ்வ ளவு நேரம்னாலும் ஒத்தைக்கால்ல நிக்கு மாம். அம்மா. நீ பயப்படாதம்மா. நான் பெரிய மீனானவுடன பாத்துக்குறேன். இல்லப்பா. அது நம்மளப் புடிச்சு தின்னுடும். அம்மா. நான் பெரிசா ஆயிட்டா அதப்புடுச்சு முழுங்கிருவேன். உன் வயசுல நானும் அப்புடித்தான் அடம் பிடிச்சேன். எங்க அம்மாதான் காப் பாத்துனாங்க. ஆனா தம்பிய கொக்கு தின்னுடுச்சு. அப்போது தலைக்கு மேலே ஒரு புழு தொங்கியது. பாயப் போன குட்டியை அம்மா தடுத்தது. அது என்னையும், உன்னையும் பிடிக்குற ஏற்பாடு. கரைல ஒரு மனுஷன் உக்காந்துகிட்டு கொக்கி போட்டுருக்காரு. நீ நிறையப் பாத்துருப்ப. அதான் உனக்குத் தெரியுதுமா. ஆனா, நிறையப் பயந்து போயிருக்க. ஆமா, இப்ப நாம பேசுறது இந்தக் கொக்குக்கு, இந்த மனு ஷனுக்குலாம் கேக்குமா? கேக்கலைனு நெனக்குறேன். ஒவ்வொ ருத்தருக்கும் கேக்குற திறன் மாறும் போல ருக்கு. இப்போ எனக்கு கேக்குற எல்லாம் உனக்கு கேக்குறதில்லையே. இன்னும் வயசாச்சுன்னா, உனக்கும் கொஞ்சம் கூடு தலாக் கேக்கும். அம்மா. மத்தவங்கள்லாம் எங்க போனாங்க? அங்க தள்ளிப்பாரு. சில பேரு மிதந்துகிட்டே தூங்குறாங்க. சில பேரு சின்னப்பாறை மாதிரி இருக்குல்ல. அங்க போயிருவாங்க. அது நல்லா வழு வழுன்னு இருக்கும். ஆனா ஏதாவது ஆபத்து வந்தா நாமல்லாம் உடனே முழிச்சுக்குவோம். ஆனா இந்தக் கொக்கோட ஆபத்தை யெல்லாம் சமாளிக்க முடியாமத்தான இருக்கோம். நம்மளவிட அதுக்கு பலம் அதிகம். தலைக்கு மேலே தொங்கிய புழுவைப் பிடிக்க வேறொரு மீன் குஞ்சு பாயப் போனது. வேகமாகப் போய்த் தடுத்து போகாதே என்று சொல்லிவிட்டு அம்மா வைப் பெருமையோடு மீன்குஞ்சு பார்த்தது. அடுத்த தலைமுறை நம்மை விட நன்றாக இருக்கும் போலிருக்கிறது. நமக்குத் தெரிந்ததையெல்லாம் கடத்தி விட வேண்டும். அவர்கள் மேலும் கற்றுக் கொள்வார்கள் என்று தாய் மீனுக்குள் எண்ணவோட்டம் இருந்தது. இந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்திய தால் சில மீன்கள் கொக்கு இருந்த திசை யில் நகர்ந்ததை அம்மா மீன் கவனிக்க வில்லை. அதில் ஒரு மீனை கொக்கின் அலகு கொத்தியதைப் பார்த்து மீன்குஞ்சுக் கூட்டம் அலறித் தெறித்தது. அம்மா.. என்று அழைத்த மீன்குஞ்சைத் தடுப்பதற்குள் அது பாய்ந்து போய் கொக்கின் கால்களைக் கவ்வியது. என்னவோ ஏதோ என்று பதறிப்போன கொக்கு, காலை உதறியது. அதையறியா மல் அலகும் விலகியது. அதில் சிக்கி யிருந்த மீன் மீண்டும் தண்ணீருக்குள் விழுந்தது. மீன் குஞ்சுக் கூட்டத்தின் கொண் டாட்டம் தொடங்கியது.
மனதில் ஊக்கம் வேண்டும்!
தம்பி பாப்பா கேளு! - சோம்பல்
தானும் வாழ்வைக் கெடுக்கும் !
தும்பி பாரு பறக்கும் ! - தேனைத்
தோண்டித் தோண்டி எடுக்கும்!
சோம்பி இருந்தால் தம்பி -தேனைச்
சுவைக்கு மாமோ தும்பி?
சோம்பல் இல்லா வாழ்வில் - வெற்றித்
தோன்றும் அடிவை நம்பி!
முடியாச் செயலே இல்லை! - சோம்பல்
முறிந்தால் தடைகள் உடையும்!
நெடி தாய் உழைக்கப் பழகு! -சோம்பல்
நிலையாய்ப் பெறுமே விடையும்
உலகில் உயர்ந்தோர் எல்லாம் -உழைத்த
உழைப்பில் சோம்பல் இல்லை!
நிலவும் உனது வாழ்வில் -முயற்சி
நிலைத்தால் தோல்வி இல்லை!
விடியும் கதிரைப் போலே -இருளை
விரட்டு நீயே விளக்கு!
முடிவில் ஊக்கம் வேண்டும் -சோம்பல்
மூழ்கும் கப்பல் எதற்கு?
கனவில் கூட சோம்பல் -கண்டால்
கடிது வருமே துன்பம்!
மனதில் ஊக்கம் வேண்டும்! -அதனால்
மண்ணில் பிறக்கும் இன்பம்!
ஓவியக்கலையில் சாதனை!
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில்அரசு பாடத்திட்டப்படி மாணவர்கள் பயின்ற ஓவியங்கள் தவிர, ஓவிய ஆசிரியரின்வழிகாட்டுதலில் கற்பனையில் வரைதல், வண்ணம் தீட்டுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுஓவியங்கள், போட்டிகளுக்கான படங்கள், போன்றவைகள் மாணவர்கள் தன்னார்வமுடன்வரைந்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் கருப்பசாமி 7-ஆம் வகுப்பு மாணவன் 321ஓவியங்கள் வரைந்து முதலிடமும், இஸ்மாயில் 150 ஓவியங்கள் வரைந்து இரண்டாமிடமும்,சபின் அகமது 121 ஓவியங்கள் வரைந்து மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் ஷேக் நபி, உதவி தலைமை ஆசிரியர்கள் ஜாகிர் உசேன் மற்றும்ரஹ்மத்துல்லா, ஓவிய ஆசிரியர் சண்முகசுந்தரம், தமிழ் ஆர்வலர் ஆதித்தா மற்றும் ஆசிரியர்கள்அல்ஹாஜ் முகமது, அபுதாஹிர், சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.