articles

img

ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்து: மக்கள் தீர்ப்பை மதித்திடுக

ஜம்மு - காஷ்மீரில் நான்கு சுயேச்சைகளின் ஆதரவுடன் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு, காங்கிரஸ், சிபிஎம் கூட்டணி 90-ல் 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்.16 (நாளை) முதல்வராக உமர் அப்துல்லா பதவி யேற்கிறார் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர்க ளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடினமான பணியில் இறங்கும் பொழுது தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல்வராக பொறுப்பேற்கும் உமர் அப்துல்லாவுக்கு இது ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும்.

சீர்குலைக்கப்பட்ட அரசியல் அமைப்புகள் மற்றும் பல்வேறு போட்டியாளர்கள் போன்ற முரண்பாடு களை இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் எதிர் கொண்டது.  எல்லை நிர்ணய பணிகள் என்ற போர்வையில் ஜம்முவில் பாஜக தனது தளத்தை பலப்படுத்தி பெரும்பான்மை ஆதரவை உருவாக்க முனைந்தது. முன்னதாக மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து நீர்த்துப்போகச் செய்யப்பட்டது. ஆனால் வாக்காளர்கள் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தடை செய்யப்பட்ட ஜமாதி இஸ்லாமிய அமைப்பால் களமிறக்கப்பட்ட சுயேட்சை போட்டியாளர்களை நிராகரித்து இந்தியா கூட்ட ணியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

காஷ்மீர் சுயாட்சி மற்றும் குடிமக்கள் உரிமை குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் உறுதியான நிதா னம், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் காங்கிர ஸின் நல்லெண்ணம், மேலும் ஜம்மு- காஷ்மீரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால சட்டமன்ற உறுப்பினரான முகமது யூசுப் தாரிகாமி யின் மக்கள் செல்வாக்கு ஆகியவை வாக்குகள் பெற உதவின. பிராந்தியம் முழுவதும், குறிப்பாக ஜம்முவில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்க ளில் வெற்றி பெறவும் முடிந்தது.

நேர்மையற்ற ஒன்றிய அரசு

தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் அறிக்கையின்படி ஆட்சியை நடத்த வேண்டும். ஆனால் அது எளிதான பணி அல்ல. இந்தியாவில் மோதல்கள் நிறைந்த எல்லை மாகாணத்தில் பாஜக நிலைமையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. உச்ச நீதிமன்றம் தலை யிட்ட பிறகு தான் தேர்தல் நடந்துள்ளது.உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில அந்தஸ்தை மீட்டெடுப்ப தாக அடிக்கடி உறுதி அளிக்கிறார். ஆனாலும் அடிப் படை நடவடிக்கைகளை எடுப்பதில் தாமதப்படுத்து வது  தெளிவாகிறது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒன்றிய அரசு முதலில் அதற்கு மதிப்பளிக்க வேண்டும். புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசு உதவ வேண்டும். 

கடந்த சில ஆண்டுகளின் எதேச்சதிகார நடவ டிக்கைகள், 1990 காலங்களின் இருண்ட தீவிரவாதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டுவரவில்லை என்றா லும் கூட, மக்களிடம் வெளிப்படையான விரக்தியும் ஏமாற்றமும் தெரிகிறது. ஒன்றிய அரசின் பிடியிலி ருந்து வெளியேறி  சட்டமன்றத்தில் துடிப்பான அரசி யல் நடவடிக்கைகள் மூலம் மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டுவரும் சூழலுக்கு உதவ வேண்டும். ஜனநாயகத்தின் அரசியல் நிர்வாகம் மற்றும் குடி யுரிமை அம்சங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு இது மிகவும் அவசியமாகும்.

தி இந்து தலையங்கம்,11/10/24  தமிழில் : கடலூர் சுகுமாரன்

படிப்படியாக தானியங்கி முறைக்கு நகரும் உற்பத்தி செயல்முறை

உலகம் முழுவதும் வேலையின்மை மேலும் தீவிரம்

உலகெங்கிலும் தொழி லாளர்கள் மீதான சுரண்டல் அதிகரித்துள் ளது. கடந்த இருபது ஆண்டுகளாக தொழிலாளர் வருமானப் பங்கின் வீழ்ச்சியில் (ஒரு பொருளாதாரத்தில் தொழிலாளர்கள் ஈட்டும் மொத்த வரு மானத்தின் விகிதத்தை இது பிரதி நிதித்துவப்படுத்துகிறது) இது வெளிப் படுகிறது.  2024ஆம் ஆண்டில் வரு டாந்திர சரிவு என்பது, 2004 முதல் நிலை யான பங்குடன் ஈட்டியிருக்கக் கூடியதை ஒப்பிடும்போது, நிலைத்த வாங்கும் சக்திக்கான சமநிலையில் 2.4 டிரில்லி யன் டாலர்களுக்கு சமமானதாக உள்ளது. இவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ள 2.4 டிரில்லியன் டாலர் ஊதிய இழப்பு என்பது வருமானம் மற்றும் செல்வ வளத்தை ஆளும் வர்க்கங்களுக்குக் கைமாற்றுவ தற்கு சமமாகும் என்பதோடு, உலகெங் கிலும் அதிகரித்துவரும் சமத்துவ மின்மையையும் அது பிரதிபலிக்கிறது.   

உற்பத்திச் செயல்முறையானது படிப்படியாக தானியங்கி முறைக்கும், உழைக்கும் சக்தியின் வருடாந்திர அதிகரிப்பை நோக்கியும் நகர்வதால், உலகம் முழுவதும் வேலையின்மை விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகில் சுமார் 28.2 சதவீத இளம் பெண்களும், 13.1 சதவீத இளை ஞர்களும் வேலையின்றி உள்ளனர். 

பணம் சார்ந்த கொள்கைகள் மூலம் இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வ தற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், பணவீக்கம் மற்றும் அதிகரித்துக் கொண்டே போகும் வாழ்க்கைச் செல வுகள் போன்றவை சாதாரண மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றன. 

பொருளாதார ரீதியான நெருக்கடி கள், சமூக ரீதியான அசமத்துவம், அரசியல் ரீதியான ஊழல் போன்ற வற்றை அரசாங்கங்கள் கையாளும் விதம் குறித்த தங்கள் பரவலான அதி ருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழி லாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். தொழிலாளி வர்க்கத்தால் வழிநடத் தப்பட்ட  இந்தப் போராட்டங்கள் நியாய மான ஊதியம், மேம்பட்ட வேலை நிலைமைகள், அதிக அளவிலான பொருளாதார நீதி ஆகியவற்றைக் கோருவதாக இருந்தன.  

இங்கிலாந்தில் ராயல் மெயில் (அரசு அஞ்சல் பணி) தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், தென் ஆப்பிரிக்கா வில் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், அமெரிக்காவில் ஹோட்டல் தொழி லாளர்களின் வேலைநிறுத்தம், பிரான்சில் போக்குவரத்து தொழிலா ளர்களின் போராட்டங்கள், இத்தாலியில் சுகாதாரத் தொழிலாளர்களின் போராட் டங்கள், கிரீஸில் துறைமுகத் தொழி லாளர்களின் இயக்கம் போன்றவை சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வீழ்ச்சி யடைந்து வரும் வேலையிட நிலைமை கள் ஆகியவற்றுக்கு, தொழிலாளர் இயக்கங்கள் எவ்வாறு எதிர்வினை யாற்றுகின்றன என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.  அதைப் போலவே, நைஜீரியா, லெபனான், இலங்கை, அர்ஜெண்டினா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் எழுந்துள்ள பொரு ளாதார ரீதியான துயரங்கள், அரசாங் கத்தின் ஊழல், வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் பொரு ளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு எதிராக சமூகத்தின் பல பிரிவினராலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 

2024 செப்டம்பர் 29 - 30 தேதிகளில் நடைபெற்ற சிபிஐ(எம்) மத்தியக்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட அறிக்கையிலிருந்து...