ஆபத்தான பணிகளில் பெண்கள் - சலுகை அல்ல; சமூகம் மீதான தாக்குதல்!
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தொழிற்சாலை விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, ஆபத்தான மற்றும் தடை செய்யப்பட்ட 20 தொழில்களில் பெண் தொழிலாளர்களை அனுமதிப்பதற்கும், இரவு நேரப் பணிகளில் அவர்களை ஈடு படுத்துவதற்கும் எடுத்திருக்கும் முயற்சி, ஒரு சலுகை அல்ல; மாறாக, இது பெண்கள் மீதும், அவர்களின் சமூக ஆரோக்கியம் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகும். ஆபத்தான தொழில்களில் பெண்களை அமர்த்துவது என்பது, அவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்காத பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த அபா யகரமான பணிகளால் பாலியல் துன்புறுத்தல், மகப்பேறுப் பிரச்சனை கள், புற்றுநோய் போன்ற கடுமையான சுகாதாரச் சிக்கல்களுக்கு ஆளாக நேரி டும். பல போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் பெற்ற கல்வி மற்றும் வேலை பார்க்கும் உரிமையானது, வறுமையின் காரணமாகக் கட்டாயப்படுத்தப்பட்டு, இந்த ஆபத்தான பணிகளுக்குத் தள்ளப்படுவதன் மூலம் பறிபோகும் அபாயம் உள்ளது. வறுமை நிலையில் உள்ள பெண்கள் ‘விருப்பம்’ தெரிவித்தாலும், இது போன்ற அபாயகரமான பணிகளில் அவர்களை ஈடுபடுத்தாமல் இருப்பது அரசின் தார்மீகக் கடமையாகும். அர சின் இந்தப் புதிய அறிவிப்பு, ஏற்கெனவே சமத்துவமற்ற சமூகத்தில் இருக்கும் பெண்களின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும். எனவே, இந்த ஆபத்தான அறி விப்பை உடனடியாக ரத்து செய்யக் கோரி, உழைக்கும் பெண்கள் ஒருங்கி ணைப்புக் குழு (சிஐடியு) வற்புறுத்து கிறது. இந்தக் கொள்கையை எதிர்த்து, அக்டோபர் 30, 2025 அன்று தமிழ்நாடு முழு வதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங் கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில அமைப்பாளர் எம். தனலட்சுமி விடுத்துள்ள அறிக்கையிலிருந்து.