ஷ்ரம் ஷக்தி நீதி - 2025 பாசிசப் பாதையில் புதிய கொள்கை - கே என் உமேஷ்
ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் 2025, அக்டோபர் 8 அன்று புதிய தேசிய தொழிலாளர் கொள்கைக் கான (ஷ்ரம் ஷக்தி நீதி, 2025) நகலை வெளி யிட்டுள்ளது. கொள்கைக்கான நோக்கம், அரசியல் சட்ட மாண்புகளான சமத்துவம், நீதி மற்றும் கண்ணி யம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும், தொழிலாளருக்கான புதுப்பிக்கப்பட்ட நேர்மையான சூழலை உருவாக்குவது என்றும் அரசு கூறுகிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தின் மாண்பு களுக்கு முரணாக உள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை அமலாக்கும் முயற்சியும், மிக மோச மான மனுஸ்மிருதி போன்ற வேதங்கள் கூறும் ஷ்ரம தர்மத்தால் ஆகர்ஷிக்கப்படுவதே - அதாவது உழைப்பு என்பது தர்மத்துக்கு ஒப்பானது, அதுவே சிறந்தது - என்ற கருத்தே இக்கொள்கையின் உண்மையான சாராம்சம். இதனால், நகல் கொள்கை கொண்டு வருவதற்கான அரசு கூறும் நோக்கங்கள் அடிபட்டுப் போகின்றன. 1969-இல் நீதிபதி கஜேந்திர கட்கர் தலைமையில் அமைக்கப்பட்ட முதலாவது தேசிய தொழிலாளர் கமிஷன், அரசியல் சட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை அமலாக்கு வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு பரிந்துரைத்தது. ஆனால், அரசின் தேசிய தொழிலாளர் கொள்கை இதற்கு நேர்மாறானது, முழு மையும் மோசடியானது.
தொழிலாளர் சட்டங்களின் பலன்களைப் பறித்தல்
அரசின் கொள்கை அனைத்துத் தொழிலாளர்க ளையும் உள்ளடக்கியது எனக் கூறினாலும், சட்டத்தொகுப்பு குறிப்பிடும் தொழிலாளர் எண்ணிக் கை வரம்புகள், பெரும்பகுதித் தொழிலாளர்களைச் சட்டப் பலன்களைப் பெற முடியாமல் வெளியேற்று கிறது. ஃபேக்டரி சட்டம், காண்ட்ராக்ட் தொழிலாளர் சட்டம், தொழில் தாவா சட்டம் ஆகியவற்றின் பொருத் தப்பாடு வரம்புகளைச் சட்டத்தொகுப்புகள் உயர்த்தி யுள்ளன. இதனால் பல கோடித் தொழிலாளர்கள் சட்ட வரம்புகளில் இருந்து அகற்றப்படுகின்றனர். சமூகப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஒரு நிறு வனத்தில் 20 அல்லது அதற்கு மேல் தொழிலாளர் இருந்தால்தான் பிஎஃப் சட்டம் பொருந்தும்; ஆனால் 10 அல்லது அதற்கு மேல் தொழிலாளர் இருந் தாலே இஎஸ்ஐ சட்டம் பொருந்தும். பிஎஃப் சந்தாதாரர் எண்ணிக்கை, இஎஸ்ஐ உறுப்பினர்களின் எண்ணிக் கையை விட அதிகம். இது, சமூகப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் அமலாக்கப்படும் லட்சணத்தை அம்பலப் படுத்துகிறது.
ஆய்வுகள் நீக்கப்பட்டு சுய சான்றிதழ்
சட்டப்பூர்வமான ஆய்வுகள் மூலம், தொழிலாளர் சட்டங்கள் அமலாவதை ஒழுங்குபடுத்தும் சட்டப்பூர்வ மான பங்கும் ஏற்பாடும் கைவிடப்பட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் என்பது வெறு மனே வேலை வாய்ப்புகளுக்கு வசதிகள் செய்து தரும் ஒரு சிறிய முக்கியத்துவமற்ற பங்கு பாத்திரத்தை மட்டுமே மேற்கொள்ள இந்தக் கொள்கை வழிவகை செய்கிறது. மோடி அரசின் 4 தொழிலாளர் சட்டத்தொகுப்பு களுக்கு இசைவான வகையில் அமைந்துள்ள இக்கொள்கை, சட்டங்களை அமலாக்கும் பொறுப்பை, ஆய்வுகள் மேற்கொள்ளும் அதி காரத்தை நீக்குகிறது. முதலாளிகள் சட்டங்களை அமலாக்குவதாக, சுய சான்றிதழ் வழங்கினால் போதுமானதாம்! ஜன் விஸ்வாஸ் சட்டம் மற்றும் ஷ்ரம் சுவிதா சமாதான் இணையங்கள் மூலம், சட்ட மீறல்கள் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்பட்டவை, தற்போது குற்றங்கள் இல்லை என மாற்றப்படுகிறது. ஆய்வுகள் அரிதாகின்றன. தொழிலாளர் தளத்தில் சட்டங்களை அமலாக்கு தல், ஆய்வு மேற்கொள்ளல், சமரசப் பேச்சுவார்த்தை, நீதிமன்றப் பரிசீலனை ஆகிய அனைத்தையும் தொழி லாளர் அமைச்சகம் கைவிடும்! தொழிலாளர் உரிமை களை நீர்த்துப்போகச் செய்யும் சட்டத் தொகுப்பு களைக்கூட அமலாக்காமல், முதலாளிகள் இஷ்டம் போல் தொழிலாளர் சட்டங்களை மீறுவதற்கு இந்தக் கொள்கை வழிவகுக்கிறது.
வேலையின்மையும் முதலாளித்துவ லாபமும்
வேலை வாய்ப்புகளுக்கு வசதி செய்து தருவது என்றாலும், வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமே? 2024-25 பொருளாதார ஆய்வின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரி யாக 85 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட வேண்டும். ஆனால், அரசின் கொள்கைகள் எதிர்பார்த்த வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிய வில்லை. வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத் திட்டம், முறை சார்ந்த தொழிலாளர்களைக்கூட, படிப் படியாக முறைசாரா தொழிலாளர்களாக (அப்ப ரண்டீஸ், இன்டெர்ன், பயிற்சியாளர்) மாற்றி விடு கிறது. 1981-82-இல் சரக்குகளின் நிகர மதிப்பு கூட்ட லில் தொழிலாளர் ஊதியத்தின் பங்கு 30.27% ஆக இருந்தது. இது 2023-24-ல் 15.9% ஆகக் குறைந்தது. அதே காலகட்டத்தில் முதலாளிகளின் லாபப் பங்கு 23.39%-லிருந்து 51.01% ஆக உயர்ந்தது. இது உள் நாட்டுச் சந்தை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது. ரூ. 10 லட்சம் கோடி உபரி முதலீடு இருந்தும், கிராக்கி இல்லா ததால் முதலாளிகள் முதலீடு செய்யத் தயங்குகின்ற னர். அரசின் புதிய கொள்கையானது, அனைத்து அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பையும் தொழிலாளர்களிடமிருந்து பறிக்கவும், முதலாளி வர்க் கத்திற்குச் சாதகமான பணி நிலைமைகளை ஏற் படுத்தவும் வழிவகுக்கிறது.
தொழிலாளர்களின் அவலநிலை அரசின் அதிகாரப்பூர்வ விவரங்களின்படி:
H2014-இல் சட்டப்படி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது 45,920; இது 2022-இல் 35,125 ஆகக் குறைந்தது. H 2022-இல் குறைந்தபட்ச ஊதியம் மீறப்பட்டது 58% ஆய்வுகளில் நிரூபணமானது. 4.5 கோடி தொழி லாளர் பாதிக்கப்பட்டனர். H2018-22-இல் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த 1,250 முறை அனுமதி மறுக்கப்பட்டது. 350 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். H5,250 கம்பெனிகள் மேற்கொண்ட ஆட்குறைப் பினால், 15 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர் வேலை இழந்தனர். Hஉணவு விநியோகத் தொழிலாளரில் 85% பேருக்குக் குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லை. H70% பெண்களுக்குச் சம ஊதியம் மறுக்கப்படு கிறது. 40% பெண் தொழிலாளருக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன. H பிஎஃப் சட்ட மீறல்கள் 2023-இல் 35,000-க்கும் அதிகம். நிலுவைத் தொகை ரூ. 2,500 கோடி. Hபணியிட விபத்துகளில் 35% மட்டுமே அதிகா ரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபேக்டரிகளில் ஏற்பட்ட விபத்துகளில், 4,500-க்கு மேல் தொழிலாளர் இறந்தனர். இதுதான் இன்றைக்கு இந்திய தொழிலாளர்களின் உண்மை நிலை. இதைப்பற்றி புதிய கொள்கை எதுவும் பேசவில்லை.
இந்துத்துவா கோட்பாட்டின் ஆபத்து
இந்திய அரசியல் சட்டத்தின் முன்னுரை, அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டும் நெறி முறைகள் ஆகியவற்றுக்கு முரணாக, வேதங்களில் கூறப்பட்ட ‘உழைப்பு தர்மக்’ கோட்பாடுகள் உள்ளன. மனுஸ்மிருதி கூறும் பெண் விடுதலையை மறுதலித்தல், சாதி அடிப்படையிலான வேலை/ தொழில், கட்டாய உழைப்பு போன்ற மனிதாபிமான மற்ற கோட்பாடுகளை ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் இந்துத்துவா அரசியல் திட்டத்திற்கு ஏற்பப் புகுத்து வது ஆபத்தானது. ஒட்டுமொத்தத்தில், ஷ்ரம் சக்தி நீதி எனும் புதிய தேசிய தொழிலாளர் கொள்கை பாசிச உள்ளடக்கம் கொண்டதாகும். ஒன்றிய அரசு, கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிப்பதைத் தவிர்த்து, அதிகாரங்களைத் தன்வசமே குவிக்கும் வண்ணம் செயல்படுகிறது. மேலும், மாநிலங்கள் தொழிலா ளர் சீர்திருத்தங்களை மேற்கொள்வதைப் பொறுத்து மானியம் வழங்குவதாகக் கூறுவது, நவீன தாராள மயக் கொள்கைகளுக்கு இசைவாகச் சட்டங்களை மாற்ற மாநிலங்களை வற்புறுத்தும் முயற்சி. நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் தொழிலாளர் விரோத ஷரத்துகளை நியாயப் படுத்தும் முயற்சியே அரசின் இந்தக் கொள்கை. அரசுத் தலையீடுகள் மிகக் குறைவாக அல்லது அறவே இல்லாமல் இருக்கும் புதிய தொழிலாளர் தளத்தை உருவாக்குவதே இதன் இலக்கு. எனவே, சிஐடியு, இக் கொள்கையை நிராக ரிக்கிறது. தொழிற்சங்கங்களின் கோரிக்கை சாசனம் குறித்து விவாதிக்க மோடி அரசு, இந்திய தொழி லாளர் மாநாட்டை உடனடியாகக் கூட்ட வேண்டும் என வற்புறுத்துகிறது. தமிழில் சுருக்கம் : ஆர்.சிங்காரவேலு
