articles

வலதுசாரி அரசாங்கங்கள் ஏன் வேலைக்கான உரிமையை எதிர்க்கின்றன? - சஞ்சய் ராய்

வலதுசாரி அரசாங்கங்கள் ஏன் வேலைக்கான உரிமையை எதிர்க்கின்றன?

உலகின் மிகப்பெரிய வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்ட மான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MNREGA) சிதைக்கப்படுவது என்பது, வெறும் ஒரு திட்டத்தின் மாற்றம் மட்டு மல்ல; அது உரிமைகளை அடிப்படையா கக் கொண்ட மக்கள் நலத் திட்டங்களிலி ருந்து, நிலப்பிரபுத்துவக் காலத்து ‘தர்மம்’ போன்ற வலதுசாரி நலத்திட்டங்களை நோக்கிய மாற்றமாகும். புதிய ‘விக்சித் பாரத் - கிராமின்’ (VB-G RAM G) சட்டம், வேலைக்கான உரிமையை ஒரு ஜன நாயக உரிமையாகப் பார்த்த நிலையை மாற்றி, ஏழை மக்களை மீண்டும் ‘ராம்-பாரோஸ்’ (தெய்வமே கதி) என்று பிறரின் தயவில் வாழும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது கிராமப்புற ஏழை களின் பொருளாதார வலிமையை மட்டு மல்ல, நிலவுடைமையாளர்களுக்கு எதிராக அவர்களுக்கு இருந்த பேரம் பேசும் திறனையும் பறிப்பதாகும்.

உழைப்புச் சுரண்டலுக்கான ஏகாதிபத்திய உத்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் மறைவு என்பது கிராமப்புறங்க ளில் ஒரு உழைப்பதற்கான இருப்புப் படையை (Reserve army of labour) உருவாக்கும். அதாவது, வேலைவாய்ப்பி ன்றித் தவிக்கும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஊதிய விகிதம் தானாகவே குறையும். இது கிரா மப்புற செல்வந்தர்களுக்கும், ஒப்பந்த தாரர்களுக்கும் குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்டுவதற்கான ‘சுரண்டல் சுதந்திரத்தை’ (Freedom of exploitation) வழங்குகிறது. ஆய்வுகளின்படி, தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கிராமப் புற ஏழைகளின் வருமானத்தை உயர்த்தி யது மட்டுமல்லாமல், ஒரு குறைந்தபட்ச ஊதிய வரம்பை (Floor wage) நிர்ணயம் செய்திருந்தது. இப்போது அந்தப் பாதுகாப்பு அரண் தகர்க்கப்படுகிறது. வலதுசாரி பாஜக அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டத்திற்கான நிதியைக் குறைத்து வந்தது. இறுதியில், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமுமின்றி இந்தத் திட்டத்தின் மீது இறுதித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் நிதி முறைகேடு போன்ற காரணங்களைக் கூறி இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பொதுமக்களிடையே குறைக்க அரசு முயன்றது.  பெரும் தொழிலதிபர்களின் கோடிக்க ணக்கான ரூபாய் ஊழல்களைக் கண்டு கொள்ளாத அரசு, ஏழைகளின் உரி மைகள் என்று வரும்போது மட்டும் ஊழலை ஒரு பூதாகரமான காரணமாகக் காட்டி, உரிமைகளையே பறிப்பது ஏகாதிபத்திய மனநிலையின் வெளிப்பாடே ஆகும். பன்முகத் தாக்குதலும் அரசியல் கட்டுப்பாடும் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் நீக்கம் என்பது கிராமப்புற ஏழை கள் மீது நடத்தப்படும் பன்முகத் தாக்கு தலாகும். இதனால் அவர்கள்: 1.    வேலைக்கான உரிமையை இழக்கின்றனர். 2.குறைந்த ஊதியத்தை ஏற்கக் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். 3.சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு மீண்டும் ஆளாகின்றனர். 4.நிலப்பிரபுத்துவ அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்திற்குக் கட்டுப் பட்டு வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகின்றனர். முன்பு இத்திட்டம் ‘தேவை’ (Demand-driven) அடிப்படையிலானது; அதாவது மக்கள் வேலை கேட்டால் அரசு வழங்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் புதிய சட்டம், அரசு எப்போது வேலை தருகிறதோ அப்போதுதான் வேலை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மேலும், எந்தெந்த பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை ஒன்றிய அரசே தீர்மானிக்கும் என்ற விதி, இத்திட்டத்தை ஒரு அரசியல் கட்டுப்பாட்டு கருவியாக மாற்றுகிறது. ஆளும் கட்சிக்கு ஆதரவான பகுதிகளுக்கு மட்டும் வேலைவாய்ப்புகளை வழங்குவ தன் மூலம், மக்களைத் தங்களுக்கு ஆதரவானவர்களாக மாற்றும் ‘புரவலர் - பெறுபவர்’ (Patron-client) உறவை அரசு நிலைநாட்ட முயல்கிறது. வர்க்க வலிமையைச் சிதைக்கும் வலதுசாரி தந்திரம் வலதுசாரி அரசாங்கங்கள் ‘உரிமை’ (Rights) சார்ந்த திட்டங்களை விட, ‘சலுகை’ (Discretion) சார்ந்த திட்டங்களை யே விரும்புகின்றன. தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தில் அதிகாரம் பரவலாக்கப்பட்டிருந்தது; ஆனால் புதிய சட்டம் அதிகாரத்தைக் குவிக்கிறது. தற் போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வலதுசாரி அரசுகள் ‘வேலையுடன் தொடர்பில்லாத’ பணப் பரிமாற்றத் திட்டங்க ளை (Cash Transfer) அறிமுகப்படுத்து கின்றன. இது ஒரு அபாயகரமான தந்திர மாகும். இதன் பின்னணியில் மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன Hநன்றி உணர்வு: பண உதவி என்பது ஒரு ‘சலுகையாகப்’ பார்க்கப்படுவதால், அது மக்களிடையே ஒரு நன்றிக் கடனை உருவாக்குகிறது. இது உரிமைகளைக் கேட்பதை விட, ஆளும் கட்சிக்கு அதிக அரசியல் லாபத்தைத் தருகிறது.

Hஎளிதான நீக்கம்: ஒரு உரிமை சட்ட ரீதியாகப் பறிக்கப்படும்போது ஏற்படும் எதிர்ப்பு, ஒரு சலுகை அல்லது பண உதவி நிறுத்தப்படும்போது ஏற்படுவ தில்லை. பயனாளிகள் தனித்தனியாகப் பிரிக்கப்படுவதால் அவர்களால் ஒன்றுபட்டுப் போராட முடிவதில்லை. Hசமூக அங்கீகாரம்: வேலைக்கான ஊதியத்தைக் கேட்பது உழைப்பிற்கான பங்கு என்பதால் அதற்குச் சமூக ஆதரவு கிடைக்கும். ஆனால், வெறுமனே தரும் பணத்தைக் கேட்பது “இலவசம்” என்ற முத்திரையோடு புறந்தள்ளப்படும். வேலைக்கான உரிமையை மறுப்பதன் மூலம், உழைக்கும் வர்க்கத்தின் அடையா ளத்தையும் அவர்கள் பணியிடங்களில் ஒன்றிணைவதையும் வலதுசாரி அரசு தடுக்கிறது. மக்களை ‘உழைப்பாளர்களாக’ அல்லாமல், அரசின் தயவில் வாழும் ‘ஆதர வற்ற குடிமக்களாக’ மாற்றுவதே இதன் நோக்கம். இது வெறும் பொருளாதார இழப்பு மட்டுமல்ல, உழைக்கும் மக்களின்  கண்ணியத்தின் மீது நடத்தப்படும் தாக்கு தல். ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளின் நலனுக்காக, ஏழைகளின் ‘விதியை’ மீண்டும் பணக்காரர்களின் கைக ளில் ஒப்படைக்கும் இந்தச் சதிக்கு எதிராக வர்க்க ரீதியான அணிதிரட்டல் அவசிய மாகிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி : ஜனவரி 11, 2026