articles

img

நாம் வெல்வோம் – நாமே வெல்லுவோம்! ஶ்ரீஜன் பட்டாச்சார்யா

நாம் வெல்வோம் – நாமே வெல்லுவோம்!

நான் உங்கள் மொழியைப் பேச மாட்டேன். நீங்கள் என் மொழியைப் பேசமாட்டீர்கள். ஆனால் நாம் இருவரும் பேசும் மொழி - புரட்சியின் மொழி, போராட்டத்தின் மொழி.  நாம் அதிர்ஷ்டசாலித் தலைமுறை. எல்லாத் தலைமுறைகளுக்கும் அநீதிக்கு எதிராக நிற்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நமக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு காலத்து சூழ்நிலை தோழர் என். சங்க ரய்யா, தோழர் நல்லகண்ணு, திருப்பூர் குமாரன் போன்ற வீரர்களை உருவாக்கியது. நாடு இப்போது நகரும் விதம், நாமும் அவர் களைப் போல மாறுவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.  

புதிய வகைப் பாசிசம்  

இது மோசமான காலம். அதே நேரத்தில் சிறந்த காலமும் கூட. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா பல அரசியல் சக்திகளைக் கண்டி ருக்கிறது, ஆனால் இவ்வளவு பெரும் பொய்யர் பிரதமராக இருந்ததில்லை. நாட்டை அதானி-அம்பானிகளுக்கு விற்கும் அரசாங்கமும் இருந்ததில்லை.  பாஜக-ஆர்எஸ்எஸ் ஏன் வித்தியாச மானது? நாம் வளர்ந்த இந்த நாட்டின் ஒவ்வொரு அடிப்படைச் சாரத்தையும் அவர்கள் அழிக்க விரும்புகிறார்கள். நமது அரசியலமைப்பை அழிக்க விரும்புகிறார்கள். இந்து தேசம் என்கிற ஆர்எஸ்எஸ்சின் கனவை பாஜக நனவாக்க விரும்புகிறது.  21ஆம் நூற்றாண்டின் பாசிசம் புத்தகங் களை எரிப்பதில்லை, ஆனால் புத்தகங் களைத் தடை செய்கிறது. சில நாட்களுக்கு முன்பு, காஷ்மீர் பற்றிய 25 புத்தகங்களை அவர்கள் தடை செய்தனர்.  

அரசியலமைப்பின் அழிவு  

பாஜகவின் தந்தை ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ்சின் தந்தை மனுஸ்மிருதி. மனுஸ்மிருதி, பெண்கள் தந்தை, கணவன் மற்றும் மகனைச் சார்ந்திருக்க வேண்டும் என்று  கூறுகிறது. பெண்கள் இருப்பதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்று கூறு கிறது.  நமது சுதந்திரப் போராட்டங்கள், சமூகப்  போராட்டங்களால் நாம் பெற்ற உரிமைகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்சால் அழிக்கப்படு கின்றன. சமூக நீதி, கூட்டாட்சித்துவம், சமூக சமத்துவம், ஜனநாயகத்தின் தூண்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

 காஷ்மீர் மற்றும்  வேற்றுமையில் ஒற்றுமை  

காஷ்மீர் பலவந்தமாக இணைக்கப்பட வில்லை. ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுடன் இணைந்தது. முஸ்லிம் தலைவர் ஷேக் அப்துல்லா மதச்சார்பற்ற நாட்டுடன்தான் இணைவோம் என்று கூறினார். ஆனால் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பின்பற்ற அனுமதிக்கும் 370ஆவது பிரிவு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.  இந்தியா மாநிலங்களின் ஒன்றியம். எனது உணவு வேறுபட்டது, திரைப்படம் வேறு பட்டது, கலாச்சாரம் வேறுபட்டது. இருப்பி னும் நாம் இந்தியர்கள். அதுவே வேற்றுமை யில் ஒற்றுமை. அதுதான் இந்தியா.

வெளியுறவுக் கொள்கையின் தோல்வி

 நாம் உலக அரங்கில் அணிசேரா நாடுகளின் தலைவராக இருந்தோம். ஆனால் மோடி  ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை யின் தோல்வியால் துயர்களை அனு பவிக்கிறோம். பகல்காமில் நடைபெற்ற தாக்கு தலுக்கு எதிராக எந்த நாடும் நமக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனம் நமக்கு ஆதரவாகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியது.  இந்திய வரலாற்றில் முதல் முறையாக, மோடி அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் சார்புநிலை எடுக்கிறது. நமது நாட்டின் இறை யாண்மையை ட்ரம்ப்பிடம் சரணாகதி ஆக்கிவிட்டது.

கல்வி மற்றும் பொருளாதாரக் கொள்கை

 2020ன் புதிய கல்விக் கொள்கை கல்வியை வணிகமயமாக்குவது, பள்ளிகள், கல்லூரி களை தனியார்மயமாக்குவதை அடிப்படை யாகக் கொண்டது. இதில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. நீட், கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை அழித்து வருகின்றனர்.  மோடி இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார். அதில் ஒரே ஒருவர் மட்டுமே பயனடைந்தார். அது அமித் ஷாவின் மகன்.  

நமது பொறுப்பு  

இந்திய மாணவர் சங்கத்திற்கு இருக்கும் கடமை பொதுக் கல்வியைக் காப்பாற்றப் போராடுவது. இந்தியாவின் அடிப்படைக் கோட்பாட்டைக் காப்பாற்றப் போராடுவது. பகுத்தறிவு, ஜனநாயகம், மனிதநேயம், இந்தியச் சூழலில் சோசலிசம் ஆகியவற்றிற்காகப் போராடுவதும் நமது குறிக்கோள்களாக இருக்க வேண்டும்.  நாம் தெருக்களில் இறங்கி பாசிச மோடி ஆர்எஸ்எஸ் ஆட்சியிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும். அதற்கான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.   அவர்கள் நம்மைச் சீனாவின் கைக்கூலிகள் என்றனர். தேசவிரோதிகள் என்று அழைத் தார்கள், ஆனால் இப்போது சீனாவை ஆத ரிக்கும் சூழ்நிலையில் அவர்களே உள்ளனர். இந்த முரண்பாடுகளையும் பொய்களையும் மக்கள் முன்னே அம்பலப்படுத்த வேண்டும்.