articles

img

ஸ்கேன் இந்தியா

பாதுகாப்பில்லை!  

பல்கலைக்கழக வளாகத்திற்குள் எங் களுக்குப் பாதுகாப்பில்லை என்று தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கொதிக்கிறார்கள். தில்லிப் பல்கலைக்கழக வளாகங்களில் இடதுசாரி மாணவர் அமைப்பு களுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இதை கருத்து ரீதியாக எதிர்கொள்ள இயலாத பாஜகவின் ஏபிவிபி, வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டிருக்கிறது. ஒரு சம்பவம் தொடர் பாக பல்கலைக்கழகக் குழு விசாரித்துக்  கொண்டிருந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே அந்த அறைக்குள் நுழைந்த ஏபிவிபியின் நிர்வாகி தீபிகா, பேரா சிரியர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார். அங்கிருந்த மற்ற பேராசிரியர்களை இழிவான  வார்த்தைகளால் திட்டினார். இது நடந்து பத்து நாட்களாகியும் தாக்குதல் நடத்திய தீபிகா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  அவரோ, பிற மாணவர் அமைப்புகளை மிரட்டிக்  கொண்டிருக்கிறார். கடுமையான நடவடிக்கை  தேவை என்று பல்கலை. ஆசிரியர் அமைப்பு கள் கோரியுள்ளன.

 சுதேசி..??  

கடந்த இரண்டு மாதங்களாக உள் நாட்டுப் பொருட்களை வாங்குங்கள் என்று பிரச்சாரம் நடந்து வருகிறது. மறு புறத்தில், இவர்கள் பிரச்சாரம் செய்வது மற்ற வர்களுக்குதான். இவர்கள் வாங்கமாட்டார் கள் என்று பொது மக்கள் மத்தியில் கருத்து இருந்தது. வர்த்தக ரீதியில் அமெரிக்காவிட மிருந்து கடுமையான அழுத்தம் வந்து கொண்டி ருக்கும் வேளையில்தான், முகேஷ் அம்பானி யின் மகன் ஆனந்த் அம்பானி, ரோல்ஸ் ராய்ஸ்  சொகுசுக்காரை 11 கோடி ரூபாய் கொடுத்து  வாங்கியிருக்கிறார். இதற்கு முந்தைய மாட லைக் கடந்த ஆண்டுதான் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். சில நாட்களுக்கு முன்பாக, ஊழலை விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள லோக்பால் அமைப்பின் நீதிபதி களுக்கு வெளிநாட்டு சொகுசுக் கார்கள் வாங்கு வதற்கு ஒப்பந்தப் புள்ளி கோரியது சர்ச்சைக்கு ள்ளானது. பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பவே, சுதேசி என்று ஆளுங்கட்சியினர் பேசுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் விழுகின்றன.  

மோசடி  

காலையில் சாலையைத் தூய்மை யாக்கிக் கொண்டிருந்த பணி யாளர், வந்தது யார் என்று தெரியவில்லை என்றா லும், விஐபி போலத் தெரிந்ததால் வணக்கம் வைத்தார். திடீரென்று வீடியோ எடுக்கத் தொடங்கியதால், சரி.. நம் வேலையப் பாப்போம்  என்று துடைப்பத்தை எடுத்துப் பணியைத் தொடர்ந்தார். வீடியோ பரவி, அவரைத் தேடிப் பலரும் வந்தபிறகுதான் ஏதோ தப்பு நடந்தி ருக்கிறது என்பதை உணர்ந்தார். அவரும், இன்னும் பலரும் வங்கதேசத்தில் இருந்து ஊடு ருவி வந்தவர்கள் என்று அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்கள். அசாமைச் சேர்ந்த பணியாளரோ, என்னுடைய வாழ்க்கை முழு வதையும் இங்கு பணி செய்தே கழித்திருக் கிறேன். அரசின் அத்தனை அடையாள அட்டை களும் வைத்துள்ளேன் என்று புலம்பியுள்ளார். அவருடைய துணைவி விமலாவும் தினக் கூலியாகப் பணியாற்றுகிறார். நாங்கள் எங்கும் ஓடிப் போகமாட்டோம் என்று உறுதியாகக் கூறு கிறார்கள். இந்த மோசடி வீடியோவை எடுத்து பரவவிட்டது பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் பிரிஜ்லால்.

 அடையாளம்  

மேற்குவங்கத்தின் வட மாவட்டங்கள் பெரு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அலட்சியங்கள் தொடர் கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க பல்வேறு கிராமங்களில் சமூக உணவகங்க ளுக்கு ஏற்பாடு செய்து இலவசமாக உணவை வழங்குகிறார்கள் மார்க்சிஸ்ட் கட்சி யினர். இந்நிலையில் சகோதரத்து வத்தைப் போற்றும் “பாய் ஃபோடா” என்ற  பண்டிகை வந்தது. சகோதரர்களின் நெற்றி யில் திலகம் வைத்து சகோதரிகள் வாழ்த்து வார்கள். சமூக உணவகங்கள் உள்ள அனை த்துக் கிராமங்களிலும் இந்தப் பண்டிகையைக் கொண்டாட கட்சி ஏற்பாடு செய்தது. மதம், சாதி  வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சகோ தரர்-சகோதரிகளாக இதில் பங்கேற்றனர். “இது வெறும் ரத்த உறவு தொடர்பானதல்ல- மனித உறவுகளின் அடையாளமாக இந்தப்  பண்டிகை மாறியுள்ளது” என்று கட்சியின் மாவட்டச்செயலாளர் பிஜூஷ் கூறியிருக்கிறார்.