articles

img

அதானி குழும நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசின் விசாரணை

அதானி குழும நிறுவனங்கள் மீது ஒன்றிய அரசின் விசாரணை

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கேள்வியால் வெளிப்பட்ட தகவல்

புதுதில்லி, ஏப். 1- அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறியதாக எழுந் துள்ள புகார்கள் குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்தி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல்  நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.சச்சிதா னந்தம் எழுப்பிய கேள்வி மூலம் உறுதியாகியுள்ளது. அதானி குழும மீறல்கள் குறித்த கேள்வி கடந்த ஐந்து ஆண்டுகளில் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவ னங்கள் மீது நிறுவனங்கள் சட்டம், கார்ப்பரேட் ஆளுமை விதிகள்  அல்லது நிதி வெளிப்படுத்தல் தேவை களை மீறியதாக ஏதேனும் புகார்கள் பெறப்பட்டதா? அதன் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று ஆர்.சச்சிதானந்தம் கேள்வி எழுப்பியிருந்தார். அரசின் விசாரணை  மற்றும் அபராதம் இக்கேள்விக்கு கார்ப்பரேட் விவ காரங்கள் துறை இணை அமைச்சர்  ஹர்ஷ் மல்ஹோத்ரா அளித்துள்ள பதிலில், அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனங்கள் மீதான விசா ரணை நிலவரங்களை ஒப்புக் கொண்டுள்ளார்: k அதானி போர்ட்ஸ் (Adani Port and Special Economic Zone Limited): இந்த நிறுவனம் மீது அரசு விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது. அந்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். k அதானி பவர் (Adani Power Limited): இந்த நிறுவனம் மீது ஏற்கெனவே விசாரணை நடத்தப் பட்டுள்ளது. அந்த விசாரணை யின் முடிவில், நிறுவனம் சட்ட  விதிகளை முறையாகப் பின்பற்றா தது கண்டறியப்பட்டது. k இதனைத் தொடர்ந்து, சம்பந் பப்பட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட பதிவாளர் மற்றும் மண்டல இயக்கு நர் மூலம் அந்த நிறுவனத்தின் மீது அபராதங்கள் விதிக்கப் பட்டுள்ளதாக அரசு அதிகா ரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. “குழும நிறுவனம்” என்ற வரையறை இல்லை என மழுப்பல் அதானி குழுமத்தின் மீதான விசாரணை விவரங்களை அளித்த அதே வேளையில், “குழும நிறுவ னம்” என்ற சொல் நிறுவனங் கள் சட்டம் 2013-இல் வரையறுக்கப்பட வில்லை என்று கூறி, ஒட்டுமொத்த அதானி குழுமத்தின் மீதான புகார் கள் குறித்த விரிவான பதிலை அளிக்கா மல் அரசு மழுப்பலாக தவிர் த்துள்ளது.  இருப்பினும், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி பவர் நிறுவ னங்கள் மீதான அரசின் நேரடி நட வடிக்கைகள் தற்போது அம்பலமாகி யுள்ளன. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கருத்து அரசின் இந்தப் பதில் குறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., தமது அறிக்கையில், “அதானி குழும நிறுவனங்கள் மீது தொடர்ந்து பல்வேறு மோசடிப் புகார்கள் எழுந்து வரும் நிலையில், அரசு தற்போது தான் விசாரணைகளைத் தொடங்கி யுள்ளது. அதானி பவர் நிறுவனம் விதிகளை மீறியதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், ‘குழும நிறுவனம்’ என்ற வரையறை இல்லை என்று கூறித் தப்பிப்பது, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களு க்குப் பாதுகாப்பு அளிக்கும் செயலே ஆகும். அதானி போர்ட்ஸ் மீதான விசார ணையை அரசு விரைந்து முடித்து உண்மைகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் சட்ட மீறல்களை மூடி மறைக்காமல், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பதை பாஜக அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.