நெல் ஈரப்பதத்தை மாநில அரசே நிர்ணயிக்க வேண்டும்!
சென்னை, அக். 28 - நெல் கொள்முதலுக்கான ஈரப்ப தத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே வழங்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை மற்றும் சம்பா அறுவடையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்படுகின்றன. ஒன்றிய அரசின் உணவுக் கழக முகமை என்கிற முறையிலேயே கொள்முதல் நடக்கிறது. இவ்வாறு, கொள்முதல் செய்வ தற்கான நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகித மாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பா அறுவடையின் போது இது பொருத்த மான தாக உள்ளது. ஆனால், குறுவை அறு வடையின் போது தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஈரப்பதம் அதிக மாக இருக்கும். எனவே, பல நேரங்களில் 22 சத விகிதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்மணி களைக் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த ஈரப்பதம் விகிதாச்சாரத்தை ஒன்றிய அரசு தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மாநில அரசு கோரும் போது, ஒன்றிய அரசு அதிகாரிகள் குழுக்களாக வந்து ஆய்வு செய்து, அதை ஒன்றிய அரசின் சோதனை மையங்களில் சோதித்த பிறகு ஈரப்பதம் தொடர்பான உத்தரவை வெளியிடு கின்றனர். ஆனால், இதனை செய்து முடிப்பதற்கு 15 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை அவகாசம் எடுக்கின்றனர். அதற்குள் ஒட்டுமொத்த அறுவடையும் முடிந்து, ஈரப்பதத்தை உயர்த்தி அறிவிப்பு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலையே ஏற்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியில் சாகுபடி செய்து, அறுவடை செய்யும் விவ சாயிகள் தேவையற்று அலைக்கழிக்கப் படுகின்றனர். நெல்மணிகளைக் கொள்முதல் செய்வது, குடோன்களுக்கு எடுத்துச் செல்வது, அரவைப் பணிகளை மேற் கொள்வது போன்ற அனைத்தையும் மேற் கொள்ளும் மாநில அரசுகள், ஈரப்ப தத்தை தீர்மானிப்பதற்காக ஒன்றிய அர சிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை மை வெட்கக் கேடாகும். இந்த விதி முறை பொருத்தமற்றது. எனவே, தமிழக அரசே ஈரப்ப தத்தை தீர்மானிக்கும் வகையில், இந்த அதிகாரத்தை மாநிலங்களுக்கே வழங்கிட ஒன்றிய அரசை வற்புறுத்திட வேண்டும். மேலும், தற்போது டெல்டா மாவட்டங்களில் குவிந்து கிடக்கும் நெல்மணிகளைக் கொள்முதல் செய்வ தற்கு போர்க்கால அடிப்படையில் நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
