articles

img

அம்புத் தலை திமிங்கலங்களின் நீண்ட ஆயுள் இரகசியம்

அம்புத் தலை திமிங்கலங்களின் நீண்ட ஆயுள் இரகசியம்

இருநூறு ஆண்டுகள் வாழும் அம்புத் தலை திமிங்கலங்கள் வேறெந்த பாலூட்டியைக் காட்டிலும் பூமியில் அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றன. ஆனால் எண்பது டன் எடையுள்ள இந்த ராட்சத விலங்குகளின் நீண்ட ஆயுளிற்கான காரணம் இதுவரை முழுமையாகக் கண்டறியப்படவில்லை. விஞ்ஞானிகள் இப்போது இதற்கான விடையைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் மனித ஆயுளை நீட்டிக்கமுடியுமா என்பது பற்றி ஆராயப்பட்டுவருகிறது.

புரத உற்பத்தியும்  குளிர்ச்சியான நீரும் இந்த கண்டுபிடிப்பின் மூலம் மனி தனின் முதுமையை ஆரோக்கியமான தாக மாற்றமுடியும். மேலும் இதன் மூலம்  அறுவைச்சிகிச்சைகள், உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைகளில் மனிதனின் திசுக்கள் மற்றும் உறுப்புகளைப் பாது காக்கலாம் என்று நம்பப்படுகிறது. “விதி விலக்காக அமைந்துள்ள இந்த உயிரி னங்களின் நீண்ட ஆயுள் பற்றி ஆராயப்  பட்டு வருகிறது. டிஎன்ஏவில் ஏற்படும் சேதங்களை இந்த உயிரினங்கள் மிகத் துல்லியமாகவும் திறமையாகவும் பழுது  பார்க்கும் செயல்முறை நீண்ட ஆயு ளிற்கான காரணமாக இருக்கலாம் என்று  கருதப்படுகிறது. எல்லா உயிரினங்களிலும் அவற்றின்  வாழ்நாள் காலத்தில் டிஎன்ஏ சேதம் ஏற்படுகிறது. அதை சரிசெய்ய செல்கள்  முயல்கின்றன. ஆனால் இது எப்போ தும் பயனுள்ள விதத்தில் நிகழ்வ தில்லை. இதனால் காலப்போக்கில் திடீர்  மாற்றங்கள் (mutations) ஏற்படுகின் றன. இது செல்கள் மற்றும் திசுக்கள் செயல்படும் விதத்தைப் பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் மற்றும் விரை வான முதுமை ஏற்படுகிறது” என்று நியூ யார்க் ராச்செஸ்ட்டர் (Rochester) பல்க லைக்கழக உயிரியலாளர் பேராசிரியர் வீர கோர்ப்பனோவா (Prof Vera Gorbunova) கூறுகிறார். பழுதைச் சரி செய்யும்போது பாதிக்கப்பட்ட டிஎன்ஏ அமைப்பில் இரண்டு சுருள்களில் உள்ள இழை களை திறனுடன் சரி செய்வதால் இவற்  றில் ஒரு சில திடீர்மாற்றங்கள் மட்டுமே  ஏற்படுகின்றன. இந்த பழுது பார்த்தல்  நீண்ட ஆயுளிற்கு மிக முக்கியமானது. இந்த உயிரினங்களில் செல்களில் நடத் தப்பட்ட பல்வேறு பரிசோதனைகளின் போது டிஎன்ஏ பழுது பார்த்தல் குளிர்ந்த  நீரால் தூண்டப்பட்டு, சி ஐ ஆர் ஃபி பி  (CIRBP) என்ற புரதத்தால் மேம்படுத்தப் படுகிறது என்று கண்டறியப்பட்டது. இந்த திமிங்கலங்கள் குளிர்ச்சியான ஆர்க்டிக் நீரில் வாழ்பவை. அதனால் இவை மனிதர்களை விட நூறு மடங்கு  அதிகமாக சிஐஆரஃபிபி புரதத்தை உற்பத்தி செய்கின்றன. இது செல் சேதத்தை சரி செய்வதில்லை. என்றாலும்  சரியான செல் பழுது பார்த்தலுக்கு உதவு கிறது. இதுவே இவற்றில் ஒரு சில திடீர்மாற்றங்கள் மட்டும் ஏற்பட, புற்று நோய் பாதிப்பு குறைவாக காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நேச்சர்  (Nature) என்ற இதழில் வெளிவந்துள் ளது. “மனித உடலில் இதே புரதத்தை  அதிகப்படுத்தும்போது நிகழ்வதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஈக்களில்  இந்தப் புரதத்தின் அளவு அதிகமா கும்போது அவற்றின் ஆயுள் அதிக ரிக்கிறது. அவை திடீர்மாற்றத்தால் ஏற்படும் புற்றுநோயை சமாளித்தன. மனி தர்களிலும் இந்த நன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சுண்டெலிகளில் ஆய்வு “டிஎன்ஏ பழுதுகளை மனித உடலால்  செய்யமுடியாது என்று சிலர் கருது கின்றனர். இதற்கான வாய்ப்புகள் குறை வாக இருந்தாலும் நம்மை விட இதை  திமிங்கலங்கள் நன்றாகச் செய்கின்றன” என்று கோர்பனோவ் கூறுகிறார். அம்புத்  தலை திமிங்கலங்களில் நீண்ட ஆயுளிற்கு டிஎன்ஏ பழுது பார்த்தல் எவ்வாறு உதவுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சுண்டெலிகளில் இந்த புரதத்தின் அளவை அதிகரித்து அவை எந்த அளவு  நீண்ட நாள் வாழ்கின்றன என்பது ஆரா யப்படுகிறது. குளிர்ந்த நீரில் நீந்து வதும் குளிப்பதும் புரத அளவை அதி கரிக்க உதவுவது பற்றியும் இதற்கான மருந்தியல்ரீதியான வழிகள் பற்றியும்  ஆராயப்படுகிறது. “மற்ற உயிரினங்க ளில் நடந்த ஆய்வுகள் மேம்படுத்தப் பட்ட டிஎன்ஏ பழுது பார்த்தல் நீண்ட ஆயுள், நோய் தடுப்பிற்கு உதவுகிறது என்ற கருத்தை உறுதி செய்துள்ளது. என்றாலும் மனித உடலில் இந்த முன்னேற்றம் எட்டப்பட நீண்ட நாள்  ஆகும்” என்று கேம்பிரிட்ஜ் பல்க லைக்கழக யுகேடிமென்சியா டிஎன்ஏ சேதம் மற்றும் பழுது பார்த்தல் பிரிவு ஆய்வாளர் பேராசிரியர் காஃப்ரியல் பாமர்ஸ் (Prof Gabriel Balmus) கூறு கிறார். மனிதனின் ஆரோகியமான ஆயுளை நீட்டிக்க நடந்துவரும் பல்வேறு  ஆய்வுகளில் இது ஒரு திருப்பு முனை யாக அமையும் என்று நம்பப்படுகிறது.