articles

img

ஆணவக்கொலை காதலின் விலை - * நவகவி

ஆணவக்கொலை காதலின் விலை - * நவகவி

ஆணவக்கொலையே- நிஜக் காதலின் விலையே. சாதி வர்க்கப் பாறை பிளந்து, தளிர்த்து வளர்ந்த காதல் கொழுந்து, காய்விடுமுன் பூவிடுமுன் கசங்கலாகுதே! தாய்தந்தையால் சொந்தங்களால் பொசுங்கலாகுதே!          (ஆணவ)  சாதி சாதி இன்னு என்னாத்த நீ சாதிச்ச? பாதி மிருகமாகி புள்ளையையே சாப்பிட்ட. மனுவுக்கு மனு போட்டு மறுபடியும் கூப்பிட்ட! மலத்தை கிளறி கூட சாதி பார்க்கப் புறப்பட்ட! பாட்டுக்குள்ளே காதல் வந்தால் ரசிப்பு. வீட்டுக்குள்ளே காதல் வந்தால் வெறுப்பு! பெத்தப் புள்ள சொத்தப் புள்ளையா, வெட்டுப்பட்டு செத்தப் புள்ளையா, ஆகுதையா... இந்த ஆணவக்கொலை  கவுரவக் கொலையா?          (ஆணவ)  பணம்தான் பெருசு இன்னா பணப்பெட்டி தான் உன் ஜோடி! பாளம் பாளம் ஆச்சு பாரதமாம் கண்ணாடி! சாதிக்கும் அறிஞர்களும் சாதிக்கு முன்னாடி  சாஷ்டாங்க தெண்டனிட்டார் எங்கே சொல்ல எம்மாடி! கொலையுண்ட தலைக்குத் தண்ட வாளம். குத்துக் கல்லு போலீஸ் வண்ட வாளம்! தேசமா இது சொல்லையா? மோசமா தெரியலையா? ஐயாசெல்லையா... இந்த ஆணவக்கொலை  கவுரவக் கொலையா?         (ஆணவ)  கத்திகொண்டு பெத்த புள்ளைய கழுத்தறுப்பது கவுரவமா? கெளரவன் துரியோதனன் செயலையும் இது மிஞ்சுமம்மா! பார்நாட்டில் மகாபாரதம் புதுவிதமா நடக்குதம்மா! தேர் ஓட்டும் கண்ணன் சேவைய சாதிக்கட்சி செய்யுதம்மா! சதி ஆட்சி இது சாதி ஆட்சி! தட்டிக் கேட்க நாதி இல்ல சீச்சீ! தலைகளே கற்கள் ஐயா- ஆட்சி அஞ்சாங் கல்லு ஆட்டம் ஐயா! ஆமாம் ஐயா.... இந்த ஆணவக்கொலை  கவுரவக் கொலையா?         (ஆணவ)