அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்
உயிரற்றுக் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தை யின் கன்னத்தைத் தடவிக்கொண்டிருந்தார் அந்தத் தாய். குழந்தையின் உதட்டை யும் தனது கன்னத்தையும் மாறி மாறித் தொட்டுக் கொண்டிருந்தார். அவரால் பேச முடியவில்லை; இல்லை, அவரால் பேச முடியாது. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. தனது மாமியார் குழந்தையுடன் நடிகர் விஜய்யைக் காண சென்றபோது அவர் ஏதும் செய்ய இயலவில்லை. இப்போது “ஐயோ, என் பேரன் சாவுக்கு நானே காரணமாகிவிட்டேனே” என்று அவரது மாமியார் கதறித் துடிக்கும்போது அவரால் ஏதும் செய்ய இயலவில்லை. 41 உயிர்கள், தன்னை அரசியல் கட்சியின் தலைவன் என நம்பும் ஒரு நடிகரின் அலட்சியத்தால் பலியாகியுள்ளன. யார் காரணம்? கரூரில் நடந்த கோரமான 41 உயிர்களின் ‘அர சியல் மரணங்கள்’ குறித்து நிறைய ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவரது ரசிகர்கள் அல்லது அந்தப் போர்வையில் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மனிதத்தன்மையற்ற விவாதங்களை முன்வைக்கின்றது
. “இந்தச் சம்ப வத்திற்கும் நடிகர் விஜய் அவர்களுக்கும் எந்தச் சம் பந்தமும் இல்லை” என்பன போன்ற விவாதங்களும், முழுக்க முழுக்க இது திமுக அரசின் அலட்சியப் போக்கு என ஒப்பாரி வைக்கின்றன. பகல் 12 மணிக்கு விஜய் பேசுவதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று காலை 9 மணி முதலே மக்கள் சம்பவ இடத்தில் குவியத் தொடங்கினர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்பாடு ஏதும் இல்லை. இரவு 7 மணிக்கு மேல் விஜய் வந்தார். வரும்போதே தன் பின்னால் ஆயிரக்கணக் கானோரை அழைத்து வந்தார்; இல்லை, இல்லை, இழுத்து வந்தார். ஆம், ஊரின் எல்லையில் அவர் வாகனத்தின் மீது ஏறித் தனது ரசிகர்களைச் சந்தித்தி ருந்தால் கூட்டம் இத்துணை முண்டியடித்து வந்திருக் காது. வாகனத்தில் உள்ளே விளக்குகளை அணைத்து இருட்டில் அமர்ந்து, கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனைவரையும் இழுத்து வந்த கேவ லம்தான் அடுத்த சம்பவங்களுக்குக் காரணம். ஒரே நேரத்தில் கூட்டம் அதிகமாகச் சேர்ந்து நெரிசல் ஏற்பட்டுச் சமாளிக்க முடியாமல் கூட்டத்தில் சிக்கித் தவித்த சோகத்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சொல்லும்போது அந்த வெப்பம் நம்மைத் தாக்குகிறது. விஜய் பேசத் தொடங்கும் முன்னே நூற்றுக்கணக்கானோர் மயக்க நிலைக்குச் சென்றனர்.
பலர் மரணத்தைத் தழுவினர். இறந்த வர்கள் உடலுடன் தொண்டர்கள் ஆம்புலன்ஸை நோக்கி ஓடும் காணொலிகள் நெஞ்சை அடைக்கச் செய் கின்றன. காலை முதல் இரவு வரை உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் நெடுநேரம் காத்திருந்ததே இக் கொடூரச் சம்பவத்திற்கு முக்கியமான காரணமாக, மரணத்தின் அருகில் சென்று பிழைத்தவர்கள் தெரி விக்கின்றனர். திட்டமிட்ட தாமதம் மரங்கள் உடைந்து, கூரைகள் பிய்ந்து, கடைகள் நொறுங்கி, சாலையோர வியாபாரிகளின் எளிய விற்பனைப் பொருட்கள் நொறுங்கி, வீட்டின் உரிமையா ளர்கள் கதறும் சம்பவங்கள் பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடந்துள்ளன. உண்மையில் விஜய்யின் பயணத் திட்டப்படி செப்டம்பர் 27 அன்று திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய இடங்கள்தான் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் எதற்காக அந்தத் தேதிகளில் நாமக்கல்லும் கரூரும் தேர்ந்தெடுக்கப் பட்டன? 25ஆம் தேதி எடப்பாடியின் பிரச்சாரம் முடிந்த சூழலில், முழுக்க முழுக்கத் தனது பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஈகோ மட்டுமே காரணம். கரூருக்கும் முன் நாமக்கல்லில் மரணங்கள் நிகழ அதிக வாய்ப்பிருந்ததைப் பல காணொலிகள் இப்போது வெளியாகி வருகின்றன.
தனது கட்சியினர் (அ) ரசிகர் கூட்டத்தினர் பலர் இதற்கு முன்னர் விபத்தில் மரணமடைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்காக அக்கட்சியின் கொடி இறங்கி யதே இல்லை. ஒரே நேரத்தில் 41 பேர் மரண மடைந்தும்கூட அந்தக் கொடி இறங்க மறுக்கிறது. அதைவிடக் கொடுமை, அவர்கள் தலைமை அலுவல கம் ஆயுத பூஜை கொண்டாடுவதுதான். அவர் இல்லை என்றாலும் அவரது கட்சிக் கொடிக் கம்பம்கூடப் பலி கேட்கும். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க பிரச்சா ரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரி ழந்த சம்பவத்திற்கு 38 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 19 அன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகில் உள்ள வன்னியம்பட்டியில் பட்டதாரி யான கே.காளீஸ்வரன் என்ற மாணவர் த.வெ.க கொடி கட்டும் முயற்சியில் மின்சாரம் தாக்கி அநியாய மாகத் துடிக்கத் துடிக்க உயிரிழந்தார். இந்த மரணம் குறித்த எந்த விதமான அசைவும் விஜய்யிடம் கிடையாது. வாய் பிளந்து நிற்கும் பாஜக அதிமுக, பாஜக இரண்டும் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடுமா என்ன? மணிப்பூர் கொடுமை நிகழ்ந்து 2 ஆண்டு கடந்தாலும் அப்பக்கம் முகத்தைத் திருப்பப் பாஜகவால் முடியாது. அங்கு நடந்த நூற்றுக் கணக்கான துயர மரணங்கள் குறித்து ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய இயலாது. ஆனால் சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் தில்லியிலிருந்து விசாரணைக் குழு கரூர் வந்து நாடகம் ஆடுகிறது. ‘பாசிச பாஜக’ எனப் பேசும் நடிகர் விஜய்க்குக் கடந்த மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, துப்பாக்கி ஏந்திய 8 முதல் 11 பேர் வரையிலான போலீசார் மற்றும் கமாண்டோக்கள் அவரது பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர்களி டம் விஜய் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என அறிக்கை கேட்டுள்ளது ஒன்றிய அரசு. ஏற்கெனவே அதிமுகவை விழுங்கியுள்ள பாஜக, இந்த மரணங்களை முன்வைத்து விஜய்யை விழுங்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் ஒற்றில் அல்லது முன் அனுமா னத்தில் அல்லது அரசின் பாதுகாப்பில் இருக்கும் முரண்களை ஆதாரத்துடன் சுட்டாமல், மொத்தச் சம்பவத்திற்கும் திமுக அரசுதான் காரணம் என எடப்பாடி கூவி வருவது அவரது தில்லி தலைமை இடும் கட்டளை என்பதைத் தமிழக மக்கள் அறிந்தே இருக்கின்றனர். பாவம், அவர் என்ன செய்வார்? ஓடி ஒளிந்த விஜய் கூட்டம் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக, அரசியல் பிரச்சனைகளுக்காக, பொருளாதாரப் பிரச்சனைகளுக்காக எப்போதும் போராடிப் பழக்க மற்ற கூட்டம் இது. காவல்துறையின் நெருக்கடிக ளுக்கோ, அவசர சூழலில் செயல்படும் பாங்கோ தெரி யாத கூட்டம் இது. வி
ஜய் என்ற ஒற்றைப் பிம்பத்தை ஆராதிக்கும் அரசியலற்ற திரள் இது. இந்தக் கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் மேட்டிமை ஆலோசனைக் குழுவுடன் கார்ப்பரேட் அரசியல் செய்யும் கலாச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ளார். அதன் விளைவுதான் மரணங்கள் நிகழ்ந்ததும் விஜய் கட்சியின் மொத்தத் தலைமையும் ஓடி ஒளிந்தது. தன்னைக் காண வந்த ரசிகனின் மர ணங்கள் அவர்களை உலுக்கவில்லை. மரணம டைந்த குடும்பங்களுடன் இணைந்து நிற்க வேண்டும் என்ற அற உணர்வு சிறிதும் இல்லாமல் தலைமறை வானார். இரண்டு தினங்கள் கடந்து, கொஞ்சமும் வெட்கமின்றி தமிழக அரசுக்கு எதிராக ஒரு வீடியோவை விஜய்யால் வெளியிட முடிகிறது. மாதம் ஒரு கட்சி மாறும் ஆதவ் அர்ஜுனால் அரசுக்கு எதிரா கப் ‘புரட்சி’ உருவாக வேண்டும் எனப் பதிவிட முடி கிறது. தங்களின் குற்றம் இன்னும் இவர்களுக்கு உறைக்கவே இல்லை. ஒன்று மட்டும் உண்மை: “அரசியல் பிழைத்தோ ருக்கு அறம் கூற்றாகும்.” அரசியலில் வெற்றி பெற்ற ஒருவர், அறத்தை (நீதி, தர்மம்) பின்பற்றாமல், தன்னலம், மோசடி, சுரண்டல், பொய்ச் செயல்கள் செய்து வந்தால், அது அவருக்கே எதிராக மாறி, அவரை அழிக்கும் என்பதே இதன் பொருள். கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபி(ஐ)எம்