மக்கள் செத்துமடியும் போது தவெகவினர் தப்பியோடியதை ஏற்க முடியாது விஜய் கட்சியினருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை!
அரசு கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்; உயர்நீதிமன்றம் விளாசல்
சென்னை, அக்.3- கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம் பர் 27ஆம் தேதி இரவு நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் இன்றும் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த பேரழிவுக்குப் பிறகு கட்சியின் தலைவரோ, இரண்டாம் கட்ட தலைவர்களோ பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேரில் சென்று ஆறு தல் கூற முன்வரவில்லை என்பது வேத னையின் உச்சம். மாறாக, தமிழ்நாடு அரசின் மீது பழி சுமத்தி தப்பிக்க முயல்கிறார்கள். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற விவாதத்தில் வெளிவந்திருக்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
“மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு”: நீதிபதி காட்டம்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் இந்த சம்பவத்தை “மனிதனால் உருவாக்கப்பட்ட பேர ழிவு” என்று தெளிவாக குறிப்பிட்டுள் ளார். இது இயற்கை சீற்றமோ, தவிர்க்க முடியாத விபத்தோ அல்ல. முறையான திட்டமிடல் இல்லாமை யும், பொறுப்பற்ற தன்மையும் ஏற் படுத்திய மனித உருவாக்கிய பேரழிவு என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தி யுள்ளது. மேலும், “கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேர ழிவு. ஒரு கட்டுப்படுத்தப்படாத கல வரம் போல சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று நீதிபதி செந்தில்குமார் விளாசி தள்ளினார்.
“தலைமைத்துவ பண்பே இல்லை”
நீதிமன்றம், தவெக தலைவர் விஜய்யை நேரடியாக விமர்சித்து, “தவெகவுக்கு தலைமைத்துவ பண்பே இல்லை” என்று கடுமையாக தெரி வித்துள்ளது. சம்பவம் நடந்தவுடன் கட்சித் தொண்டர்களையும், பாதிக் கப்பட்ட மக்களையும் விட்டுவிட்டு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களும் மறைந்துவிட்டனர் என்ற நீதிமன்றமே கடுமையாக சாடியுள் ளது. இத்துடன், “கட்சியின் தலைவர் முதல் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து மறைந்துவிட்டனர். கட்சி தொண்டர்களை விட்டுவிட்டு தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களும் மறைந்துவிட்டனர். மக்களை யும், குழந்தைகளையும் மீட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் செல்வதா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறுப்பேற்க மறுக்கும் கட்சி
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் மீட்புப் பணியில் ஈடுபட்ட போது, தவெகவினர் மட்டும் அங்கி ருந்து வெளியேறிவிட்டனர் என்பதை நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள் ளது. “சம்பவத்துக்கு பொறுப்பேற் காத தவெகவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்” என்று நீதி பதி தெரிவித்துள்ளார். “என்ன கட்சி இது? சம்பவம் நடந்தவுடன் தவெக வினர் எல்லோரும் அங்கிருந்து தப்பி விட்டனர். நீதிமன்றம் மவுன சாட்சி யாக இருக்க முடியாது. கரூர் நிகழ்ச்சி களின் விளைவுகளை மொத்த உலக மும் கண்டிருக்கிறது” என்று நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி இரு சக்கர வாகனங்கள் சிக்கிய வீடியோ குறித்து நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. “ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்தும், பேருந்தை நிறுத் தவே இல்லை. அதிர்ச்சியாக இருக்கி றது. வீடியோக்களைப் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது” என்று நீதிபதி செந்தில்குமார் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ஹிட் அண்ட் ரன் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்”: நீதிமன்றம் எச்சரிக்கை
பொதுநல வழக்கு தொடர்ந்தவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வில்லை என்று வழக்கறிஞர் வாதாடிய போது, நீதிபதி செந்தில்குமார் காட்ட மாக பதிலளித்து, “சட்டத்தின் முன் அனைவரும் சமம். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார். “விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லா விட்டாலும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது” என்று நீதிமன்றம் காவல்துறைக்கு கடுமையான கேள்வி களை எழுப்பியுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கர்க் தலைமை யில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு விடம் ஒப்படைக்கவும் கரூர் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. “நான் பொறுப்பேற்க முடியாது”: தவெக தலைவர் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் கோரிய முன்ஜாமீன் மனு விசாரணையில், “இந்த இருவர் மட்டும் மக்களை கட்டுப்படுத்த முடியாது. பாதுகாப்பை பொருத்தவரை அரசுக்குத்தான் முழு பொறுப்பு இருக்கிறது” என்று அவர் களது தரப்பு வாதிட்டது. ஆனால், நிகழ்ச்சியை நடத்திய ஆனந்த் மற்றும் நிர்மல் குமாருக்கு பொறுப்பு இல்லையா, என்று நீதிபதி கேட்ட போது, “நிகழ்ச்சியை நடத்தியது மாவட்டச் செயலாளர் மதியழகன் தான்” என்று பொறுப்பை தட்டிக் கழித்துள்ளனர். அரசுத் தரப்பு, “தலை மறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிட்டது. ஆதவ் அர்ஜூனா மீதும் நடவடிக்கை வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதி விட்ட ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வார்த்தை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இவர்கள் சட்டத்திற்கு அப் பாற்பட்டவர்களா?” என்று நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் கோபம் நியாயமானதே 41 அப்பாவி உயிர்களை பலி வாங்கிய இந்த சோகத்திற்குப் பிறகும், கட்சித் தலைவர் விஜய் இன்றுவரை நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும் பங்களிடம் ஆறுதல் தெரிவிக்க வில்லை என்பது மன்னிக்க முடியாத குற்றம். மாறாக, தமிழ்நாடு அரசின் மீது பழி சுமத்தி தப்பிக்க முயல்கி றார்கள். பாஜக இவர்களின் பின்னணி யில் இருந்து இயக்குகிறது என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனிடையே, புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன் மறுத்துள்ள நீதிமன்றம் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.