விளம்பர அரசின் பகட்டு நாடகம் அம்பலமானது
பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்னாயிற்று?
பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஜனவரி 22-ஆம் தேதி ஹரியானாவின் பானிபட்டில் மிக ஆரவாரமாக தொடங்கப்பட்ட “பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் (BBBP) “ திட்டம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. “பெண் குழந்தைகளைப் பாதுகாக்கவும், கல்வி கற்பிக்கவும், அதிகாரம் அளிக்கவும்” என்ற உன்னத நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இன்று, சுய தம்பட்ட விளம்பரங்களின் மழையும், வெற்று அறிவிப்புகளுமாக சிதைந்து போயுள்ளது. இந்தியா முழுவதிலும் 640 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கூறுகிறது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் கசப்பான உண்மையை, கவலைகளை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் சிறப்பு நாடாளுமன்றக் குழு அறிக்கையே அம்பலப்படுத்தி உள்ளது! வீணாக்கப்பட்ட பணம் 2018-19ஆம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தின் நிதி ₹446.72 கோடி ரூபாயில் 78.91% விளம்பர நடவடிக்கைகளுக்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்ற நாடாளுமன்றக் குழுவின் தகவல் நம்மை அதிர வைக்கிறது. இது எப்படிப்பட்ட நீதி? பெண் குழந்தைகளின் உயி ருக்காக அல்ல, மோடி அரசின் முகத்திற்காகவே பணம் வீணடிக்கப்படுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பாஜக எம்.பி ஹீனா விஜய்குமார் காவித் தலைமையிலான பெண்கள் அதிகாரமளித்தல் குழுவின் அறிக்கையே இந்த அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. திட்டத்தின் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு ஊடக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை குழு புரிந்துகொண்டாலும், “திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவது என்பது மிகவும் முக்கியம்” என்று அவர்களே வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசின் மிக முக்கியமான திட்டங் களில் ஒன்றாக இருப்பதால், பின்தங்கிய பகுதி களில் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்து வதற்கும் பெண்கள் கல்வியை உறுதிப்படுத்து வதற்கும் அரசு தலையிட வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. மாநிலங்களின் அலட்சியமும் ஒன்றிய அரசின் தோல்வியும் 2014-15 முதல் 2019-20 வரை பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் திட்டத்தின் கீழ் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ₹848 கோடி. இந்த காலகட்டத்தில் ₹622.48 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது. ஆனால் “இந் நிதியில் வெறும் 25.13% மட்டுமே, அதாவது ₹156.46 கோடி மட்டுமே மாநி லங்களால் செலவிடப்பட்டுள்ளது,” என்று குழு வின் அறிக்கையில் வருத்தத்துடன் குறிப்பிடப் பட்டுள்ளது. இதைவிட கொடுமை வேறென்ன இருக்க முடியும்! வரதட்சணை பயங்கரம் பெண் குழந்தைகளின் நிலையை இந்த விப ரங்கள் அம்பலப்படுத்துவது போல், பெண்கள் மீதான கொடிய வன்முறைகளை மேலும் சில புள்ளி விபரங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரு கின்றன. ஒருநாளைக்கு 20 பெண்கள் வரதட்ச ணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமண மாகி 78 நாட்களே ஆன இளம் பெண் வரதட்ச ணை கொடுமையால் தற்கொலை செய்து கொ ண்டதும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யில் திருமணம் ஆகி 4 நாட்களே ஆன இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதும் மிகவும் சமீபத்திய கொடுமையான சம்பவங்கள் ஆகும். இவை வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல - இவை பெண்களின் வேதனையின் அடையாளங்கள்! இவை நம் சமுதாயத்தின் அவமானங்கள்! மாதவிடாய் அவமானமா? மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தின் ஷஹாப்பூர் பகுதியில் உள்ள தனி யார் பள்ளியின் கழிப்பறையில் ரத்தக்கறை ஏற்பட்டதால் மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை நடத்தப்பட்டுள் ளது. இது என்ன அவமானம்? இது என்ன கொடுமை? “பாதுகாப்பான மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” என்பது பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதை இங்கு நாம் உணர வேண்டும். பள்ளியில் பதின்ம வயது சிறுமிகளின் மாதவிடாய் பிரச்சனைகளை , அது சார்ந்த துயரங்களை எப்படி அணுக வேண்டும், அச்சிறுமிகளுக்கு உதவ வேண்டும் என்பதை ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் கற்றுக் கொடுக்கிற ஒரு சாதாரண விஷயத்தில் கூட இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது என்றால், படாடோபமாக இதை அறிவித்த பிரதமரே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். கிராமப்புறங்களில் பெண் குழந்தைகளின் பரிதாப நிலை கிராமப்புற மாவட்டங்களில் பெண் குழந்தை களின் இடைநிற்றல், இளம் வயது திருமணங்கள் அதிகமாக நடைபெறுகிறது. இதை கண்காணிக்க குழு இருந்தாலும் அதன் செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் போன்ற மாதர் அமைப்பு கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பல மருத்துவமனைகளில் போதுமான மருத்து வர்கள் இல்லாத நிலையில் பிரசவ காலங்களில் மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. 1961இல் இருந்து குழந்தை பாலின விகிதத்தில் தொடர்ந்த சரிவு கவலைக்குரிய விஷயம். 2018 மாதிரி பிறப்பு இறப்பு பதிவு அறிக்கையின்படி பெண் குழந்தை பிறப்பு விகிதம் 2015-17ல் 896 (1000 ஆண் குழந்தைகளுக்கு) இலிருந்து 2016-18இல் 899 ஆக உயர்ந்துள்ளது என்றா லும், உலக சுகாதார அமைப்பின் (WHO) தரத்தின்படி 1000 ஆண்களுக்கு 952 பெண்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எத்தனை காலம் தேவைப்படும். கல்வி விகிதத்தில் சிறிதளவு முன்னேற்றம் காட்டப் பட்டாலும், கிராமப்புற பகுதிகளில் பெண் குழந்தைகள் இன்ன மும் கல்வியிலிருந்து விலக்கப்படுகின்றனர். விளம்பர அரசியலை நிறுத்துங்கள் இத்தகைய சூழலில், கிராமப்புற மாவட்டங் களில் பெண் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்க வேண்டும். இளம் வயது திருமணங்களை கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பிரசவ காலங்களில் மரணங்களை தடுக்க வேண்டும். பெண்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் - என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்திப் போராடி வருகிறது. மேலும், வரதட்சணை கொடுமையை ஒழிக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தி வருகிறது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் குழுவும் இதையே பரிந்துரைத்துள்ளது. பேட்டி பச்சாவ் பேட்டி பதாவ் திட்ட நிதியின் முறை யான பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். இனி அரசு விளம்பரங்களுக்கான செலவுகளை மறுபரிசீலனை செய்து, கல்வி மற்றும் சுகாதா ரத்துறையில் துறைசார் தலையீடுகளுக்கு திட்ட மிட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டில் கவனம் செலுத்த வேண்டும். “பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது விளம்பரப்படுத்துவதல்ல - அதை நடைமுறைப் படுத்துவதுதான்!”