சுமைப்பணித் தொழிலாளர் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் சம்மேளனம்
தொழிலாளர் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அர ணாக விளங்கும் சிஐடியு தமிழ்நாடு சுமைப்பணி சம்மேளனம் பொன் விழா ஆண்டில் 10ஆவது மாநில மாநாட்டை செப்டம்பர் 21, 22 தேதிகளில் திருச்சி மாநகரில் நடத்துகிறது.
விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பு
உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான விநியோ கச் சங்கிலியில் மிக முக்கியமான பங்களிப்பைச் செலுத்துபவர்கள் சுமைப்பணி தொழிலாளர்கள். சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த இத்தொழில் தலைச்சுமையாகத் தொடங்கி, தள்ளுவண்டி, மாட்டுவண்டி, கைரிக்சா, லாரி, வேன் என உள்ளூர் பரிமாற்றத்தில் பல வடிவமெடுத்து இன்று ரயில், கப்பல், விமானம் என உலக அளவில் ஏற்றுமதி, இறக்குமதியாக மாறியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை அத்தியாவசியப் பொருட்களை நம்பியிருக்கிறது. பெருநகரங்கள் முதல் தொலைதூரக் கிராமங்கள் வரை பொருட்க ளின் நகர்வு இல்லாமல் எதுவும் இயங்காது. இந்த விநி யோகக் கட்டமைப்பே ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது.
பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சரக்கு விநியோகத்தில் 70 சதவிகிதம் லாரிகள் கையாளுகின்றன. 6.4 மில்லியன் கிலோமீட்டர் சாலை நெட்வொர்க்கும், 68,000 கிலோமீட்டருக்கும் அதிக மான ரயில்வே நெட்வொர்க்கும் இந்தச் சரக்கு சேவையை உறுதி செய்கிறது. இந்த சரக்குப் பரி மாற்றத்தில் பிரித்துப் பார்க்க முடியாத வகையில் சுமைப்பணி தொழிலாளர்கள் பின்னிப்பிணைந் துள்ளனர்.
கடுமையான உழைப்புச் சுரண்டல்
உடல் வலுவை மூலதனமாகக் கொண்டு மிகக் கடுமையாக உழைக்கும் சுமைப்பணி தொழிலா ளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி றார்கள். பல தொழில்களில் பணி நிரந்தரம் இருந்தா லும், சுமை தூக்குபவர்களுக்கு எங்குமே பணி நிரந்தரம் கிடையாது. ஊதியமும் நிரந்தரமில்லை. குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் மிகக் கேவலமான தொகை. அரசாங்கத்தால் நடத்தப்படும் கான்கர் கண் டெய்னர் கார்ப்பரேஷன், சென்ட்ரல்வேர்ஹவுஸ், மாநில அரசு குடோன்களில்கூட பிரதான பணி சரக்கு களை இறக்கி லாரிகளில் ஏற்றி அனுப்புவதுதான் என் றாலும் எல்லா அலுவலர்களும் நிரந்தரமுள்ளவர்களா கவும், சுமைப்பணி தொழிலாளி மட்டும் தினக்கூலி யாகவும் இருக்கின்றனர்.
சட்ட மீறலும் அரசின் அலட்சியமும்
ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம் 1970இன்படி நிறுவனத்தின் நிரந்தர இயல்புடைய வேலையில் ஒப்பந்தத் தொழிலாளர்க ளை வைக்கக்கூடாது என்கிறது. இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. மோடியின் சரக்குகள் கையாளுகை (லாஜிஸ்டிக்) கொள்கை சரக்குப் போக்குவரத்துச் செலவை ஒற்றை இலக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிறது. ‘சாகர்மாலா’ திட்டமும், சரக்குகள் கையாளுகை கொள்கையும் கார்ப்பரேட் சுரண்டலை அடிப்ப டையாகக் கொண்டது. சுமைப்பணி தொழிலாளர்களி டம் மிச்சம்மீதி இல்லாமல் அனைத்தையும் பறிக்கும் கொள்கை இது.
டாஸ்மாக்கிலும் அதே கொடுமை
தமிழக அரசுக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டித் தரும் டாஸ்மாக் குடோன்களிலும் இதே நிலைமை தான். மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஏற்றுக் கூலி, இறக்குக்கூலி, ஹேன்ட்லிங் லாஸ் என்ற பெய ரில் தொழிலாளர்களிடம் ஏமாற்றிப் பணம் பறிப்பதை எதிர்த்து சிஐடியு சம்மேளனம் பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
நீதிமன்ற தடையாணை பிரச்சனை
தற்போது வணிகர்கள் அமைப்பு நீதிமன்றம் சென்று “எங்கள் ஆட்களை வைத்துத்தான் வேலை செய் வோம். சங்க ஆட்கள் கேட்கும் கூலியைத் தர முடியாது” என தடையாணை வாங்கி விடுகின்றனர். இது விழுப் புரத்தில் தொடங்கி தமிழகம் முழுவதும் பரவும் நோயாக உள்ளது.
கார்ப்பரேட் சுரண்டல்
ஏற்றுமதி, இறக்குமதியில் கார்ப்பரேட் நிறுவனங் கள் புகுந்ததைத் தொடர்ந்து எல்லா கன்டெய்னர் டெர்மினல்களிலும், ரயில்வே கூட்ஷெட்களிலும் உள்ளூர் ஆட்களை வேலைக்கு எடுப்பதில்லை. வெளி மாநில தொழிலாளர்களை மிகக் குறைந்த கூலிக்குக் கொண்டுவந்து இரவும் பகலும் வேலை வாங்குகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இண்டீட், க்விக்கர், இண்டியா மார்ட், அமேசான், பிளிப்கார்ட் போன்றவை புற்றீசல்போல வந்துவிட்டன. இவர்கள் இணையதள ஆப் உருவாக்கி மக்களிடம் ஆர்டர் பெற்று மிகக் குறைந்த கூலியில் உழைப்பைச் சுரண்டுகின்றனர். இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களிலிருந்து தப்பிக்க “இவர்கள் தொழிலாளர் இல்லை, எங்கள் டெலிவரி பார்ட்னர்” என்கின்றனர்.
கேரளா முன்மாதிரி
இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் சுமைப்பணித் தொழிலாளர்கள் ஓரளவுக்குப் பாது காக்கப்பட்டுள்ளனர். கேரள இடது முன்னணி அரசு சுமைப்பணித் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்துள்ளது. முதலாளி-தொழிலாளி என்ற தொழில் தன்மையை உறுதி செய்துள்ளது. பணிப்பாதுகாப்பு, கூலி நிர்ணயம், போனஸ், ஓய்வூதியம், பிள்ளைகளின் மேற்படிப்புக்கு உதவி, வீடுகட்டக் கடன், நோய்வாய்ப்பட்டால் சிகிச்சைக்கு உதவி என குறைந்தபட்சம் மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்துள்ளது. வெளி மாநில தொழிலாளர்களை யும் பதிவு செய்து பாதுகாப்பு வழங்கியுள்ளது
. தமிழக அரசின் கடமை
தமிழகத்தில் இலவசங்களை அறிவிக்கும் தமிழக அரசு சுமைப்பணி தொழிலாளர்களுக்குச் சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகளை மறுத்து வருகிறது. தனி நலவாரியம் என்ற கோரிக்கையை உதாசீனப் படுத்துகிறது. பல்லாயிரம் கோடி சரக்குப் பரிமாற்றத்தில் வெறும் 2 சதவிகிதம் தொழிலாளர்களுக்கான சேம நலநிதி யை உருவாக்குவதன் மூலம் சுமைப்பணி தொழிலா ளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். நல வாரியம் உருவாக்கி கேரள அரசைப் போன்ற திட்டங்களைத் தமிழகத்தில் நிறைவேற்றிட வேண்டும். இத்தொழிலில் ஈடுபடுவோர் அனைவரும் நம் சமூ கத்தின் விளிம்பு நிலை மக்களே. இவர்களின் வாழ்க்கை யைப் பாதுகாப்பதே இம்மாநாட்டின் லட்சியம்.