“இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே!”
தமிழக அரசியல் களத்தில் அதிமுக - பாஜக கூட்டணி விசித்திரமான முரண்பாடுகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய நகர்வுகளில், நேற்றுவரை ஒருவரையொருவர் “துரோகி” என்றும் “ஊழல்வாதி” என்றும் மிகக்கடுமையாக விமர்சித்துக்கொண்டவர்கள், இன்று ஒரே மேடையில் வெட்கமின்றி கைகுலுக்குவது வாக்காளர்கள் மத்தியில் அருவெறுப்பான தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த அர சியல் அந்தர் பல்டிகளுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரப் பசி, வழக்கு பயம் மற்றும் தில்லியின் நிழல் மிரட்டல்களைத் திரைவிலக்கிப் பார்ப்பது அவசியமாகிறது.
வழக்கு அரசியலும் தற்காப்புச் சரணடைதலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் அர சியல் நகர்வுகள் விவாதப் பொருளாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு வரை, “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்பதை விடத் தூக்கில் தொங்கலாம்” என்று ஆவேசமாக முழங்கிய தினகரன், இன்று அதே எடப்பாடி பழனி சாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தஞ்சமடைந்துள்ளார். இதனை “விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை” என்ற வார்த்தை ஜாலத்திற்குள்
அவர் மறைக்க முயன்றாலும், இதன் பின்னணியில் இருப்பது அப்பட்டமான ‘சம்மன் அரசியல்’ என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2017-ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த இரட்டை இலைச் சின்னத்திற்காக லஞ்சம் கொடுத்த வழக்கு, சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு எனப் பழைய கோப்புகள் மீண்டும் தூசு தட்டப்படுவதும், தில்லி நீதிமன்றத்தில் இருந்து வந்த சம்மன்களுமே இந்தத் திடீர் மனமாற்றத்திற்குக் காரணம். ஒரு ‘லட்சியத்திற் காக’ உருவானதாகச் சொல்லப்பட்ட தினகர னின் கட்சி, இன்று வழக்கில் இருந்து தன்னைக் காப்பதற்காக ஒட்டுமொத்தமாகச் சரணடைந் திருப்பது அவரை நம்பி வந்த தொண்டர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம். அவர்களுக்குள் ஒரு காலத்தில் ‘
கதாநாயகனாக’ போற்றப்பட்ட தினகரன், இன்று நெருக்கடி வந்த வுடன் எடப்பாடி பழனிசாமியிடம் பணிந்து போயி ருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்தான். கூட்டணி தர்மமா? அதிகாரப் பசியா? இந்தக் கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் சொல்லி மாளாதவை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபுறம் தன்னைத் தலைமையாகவும், தனிப் பெரும்பான்மை பலம் கொண்ட கட்சியாகவும் நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கிறது. ஆனால், இக்கூட்டணி யில் இணைக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் போன்ற அதிருப்தி சக்திகள் பாஜக-வின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தோடு உள்ளே வரும் கட்சிகளை எடப்பாடி பழனிசாமி எப்படிச் சமாளிக்கப் போகிறார்? “பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்தி ருக்கலாம்” என்பது போல, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவது பெரிய மாற்றத்தைத் தந்து விடும் என்பது வெறும் மாயை. 2021 தேர்தலி லேயே ஒருங்கிணைந்த பலத்தோடு நின்றபோதே வெற்றி பெற முடியாத ஒரு கூட்டணி, இன்று சிதறிப் போய், பலவீனமடைந்து, ஒருவரை யொருவர் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டே கைகோர்ப்பது எத்தகைய வெற்றியை தரும்? கொள்கை வேறுபாடு இருந்தாலும் பொது
எதிரியை வீழ்த்த ஒன்று சேர்வது என்பது வேறு; ஆனால், சாதிய வாக்குகளைப் பிரிப்பதற்கும், வழக்குகளில் இருந்து தப்புவதற்கும் மட்டும் ஒன்று சேர்வது என்பது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். பாஜகவின் ‘நிழல் மிரட்டலும்’ அதிமுகவின் தவிப்பும் பாஜக தமிழகத்தில் ஒரு ‘ரெயின்போ அலை யன்ஸ்’ (Rainbow Alliance) அமைக்கத் துடிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் அதிமுகவை வலுப்படுத்துவது அல்ல; மாறாக, அதிமுகவின் செல்வாக்கைச் சிதைத்து அந்த இடத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதுதான். எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர் அழுத்தங்களைக் கொடுத்து, அவரை சுதந்திரமான முடிவெடுக்க விடாமல் பாஜக முடக்குகிறது. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அதி முகவின் தலைவர்கள் இல்லாமல், பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தினகரன் போன்றவர்கள் இணைக்கப்படு வது, தமிழகத்தின் பிராந்தியக் கட்சிகளின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கு கிறது. “முதலமைச்சர் வேட்பாளர் யார்?” என்ற கேள்விக்குக் கூடப் பதிலளிக்க முடியாமல் தினகரன் மழுப்பலாகப் பேசுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமையைத் தரம் குறைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. விஜய் எதிர்கொள்ளும் புதிய சவால்கள்
இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், புதிய அரசியல் சக்தி எனத் தன்னைக் கருதுகிற நடிகர் விஜய் சந்திக்கும் சவால்கள் மிகக் கடின மானவை. திமுகவை ‘அரசியல் எதிரி’ என்றும் பாஜகவை ‘கொள்கை எதிரி’ என்றும் அறிவித்த விஜய், தற்போது அதே பாஜகவின் நிழல் மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளார். அவரது நெருங்கிய வட்டாரங்கள் மீதான சிபிஐ மற்றும் வருமான வரித்துறை சோதனைகள் அவரை மௌனம் காக்கச் செய்துள்ளன. மக்களாட்சியில் ஒரு போராட்டக் குணத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நெருக்கடிகள் வரும்போது மௌனமாக இருப்பது அல்லது தற்காப்பு அரசியலில் ஈடுபடுவதை மக்கள் ஏற்பதில்லை. விஜய் ஒருவேளை பாஜக-அதிமுக கூட்டணிக்குச் சென்றால், அது அவரது அர சியல் வாழ்வின் தற்கொலை முடிவாகவே அமை யும். ஏனெனில், பாஜகவின் நோக்கம் திமுகவை ஒழிப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் திராவிட அடையாளங்களையே ஒழிப்பதுதான். விஜய்யின் மௌனம் என்பது அவருக்கு ஒரு பின்னடைவாகவே அரசியல் பார்வை யாளர்களால் கருதப்படுகிறது. தேர்தல் வியூகமும் நம்பகத்தன்மை கேள்வியும் தமிழக அரசியலில் “எதிரிக்கு எதிரி நண்பன்” என்ற சூத்திரம் சில நேரங்களில் வேலை செய்தி ருக்கிறது. ஆனால், அந்த நட்பு இயல்பாக முகிழ்த்த தாக இருக்க வேண்டும். ஆனால் தினகரன் விஷ யத்தில் ஒரு வலுவான கூட்டணி உருவாவதை விட, ஒரு கூட்டணியைக் கட்டமைக்க வேண்டிய பாஜகவின் அவசரம் மட்டுமே தெரிகிறது. பிரதமரின் தமிழக வருகைக்கு முன்னதாக ஒரு “மெகா கூட்டணி
” புகைப்படத்தை தில்லிக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகவே, முரண்பட்ட துருவங்கள் ஒட்டவைக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிமுகவின் வாக்குகளைப் பிரித்த தினகரன், இன்று கூட்டணிக்குள் வரும்போது அந்த வாக்கு கள் அப்படியே வந்துவிடுமா? நிச்சயமாக இல்லை. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தவே உரு வான ஒரு கட்சி, இன்று அதே கட்சியுடன் சேர்வதை அடிமட்டத் தொண்டர்கள் ஏற்பார்களா? அல்லது பாஜகவின் மேலாதிக்கத்தை விரும்பாத திராவிடத் தொண்டர்கள் இந்தச் சரணாகதி அரசியலை மன்னிப்பார்களா? தமிழகத்தின் உரிமைகளும் மௌனமாகும் கட்சிகளும் ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு திட்டங் களில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எய்ம்ஸ் மருத்துவமனை
, மெட்ரோ ரயில் நிதிப் பகிர்வு, மாநில உரிமைகளில் ஆளுநரின் தலையீடு எனப் பல முனைகளில் தமிழகம் நசுக்கப்படு கிறது. இத்தகைய சூழலில், தமிழகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தமிழகக் கட்சிகள், தங்கள் மீதான வழக்குகளுக்காக பாஜக தலைமையிடம் சமரசம் செய்துகொள்வது தமிழகத்திற்கு இழைக்கப் படும் வரலாற்றுத் துரோகம். எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி. தின கரன் போன்றவர்கள் ஒருவரையொருவர் “420” என்றும் “துரோகி” என்றும் விமர்சித்த காலம் மறைந்து, இன்று “மரியாதைக்குரியவர்” எ
ன அழைப்பது கேலிக்குரியது. உண்மையில் இது மக்கள் நலன் அல்ல, இது பதவி மற்றும் பிழைப்புவாத அரசியல். தமிழகத்தின் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு, இவர்கள் அமைக்கும் எந்தக் கூட்டணியும் மக்கள் மத்தியில் எடுபடப்போவதில்லை. தமிழக மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையிலும் இன்று அரசியல் பேசப்படுகிறது. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், பழைய சாதியக் கணக்குகளையும், “திமுக எதிர்ப்பு” என்ற தேய்ந்து போன ஒற்றை முழக்கத்தையும் கடந்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். 2026-இல் மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு, வெறும் ஆட்சி மாற்றத்திற்கானதாக இருக்காது; அது கொள்கையற்ற, முரணான மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு அடிபணிந்த சரணாகதி அரசியலுக்கு எதிரானதாகவே இருக்கும்.
