articles

img

ஸ்கேன் இந்தியா

2

அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கிகளை  கொண்டு திஷா பதானி என்ற நடிகையின் வீடு மீது தாக்குதல் நடத்தினர். உத்தரப்பிர தேசம், பரேய்லி நகரில் இது நடந்தது. தற்போது  சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சார்ந்தவர்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள்.  கடந்த ஆண்டில் கொலையான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாபா சித்திக் விவகாரத்திலும் இவர்களுக்குதான் தொடர்பு இருந்தது. சிறையில் இருந்தாலும் சுதந்திரமாகத் தாக்குதல்களை பிஷ்னோய் திட்டமிட முடி கிறது. இவரது குழுவிலும் சில விரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு குழுக்களாகப் பிரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவ ருடைய ஆட்களும், பிரிந்து போயுள்ளவர்களும் அமெரிக்காவில் இருந்தே இயக்குகிறார்கள். சமூக வலைத்தளப் பதிவுகளும் அங்கிருந்தே போடப்படுகின்றன. கார்ப்பரேட் ஸ்டைலில் பிஷ்னோய் செயல்படுகிறார் என்று சொல்லப்படுகிறது.

10

பீகாரில் எதிர்க்கட்சி அணி சார்பாக பத்து அம்ச அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டை முன்னிறுத்தி இதைத் தயாரித்தோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கூறியுள்ளார். கட்சி அரசியலைத் தாண்டி இந்த அறிக்கை உள்ளது என்று இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். எந்தவித முன்னேற்றத்தையும் மேற்கொள்ளாமல், இவர்கள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்து வந்த நிதிஷ் குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பதற்றத்துடன் இதை விமர்சித்திருக் கிறது. மாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரான மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பேசுபொருளாக மாறியிருப்பதைப் பல தரப்பினரும் வரவேற்கிறார்கள். ஆளும் தரப்பிலிருந்து பல வாக்குறுதிகள் வரும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

115

115 பார்வை மாற்றுத் திற னாளி மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். புதுதில்லியில் உள்ள பார்வையற்றோருக்கான இந்தப் பள்ளி, 1939 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் லாகூரில் அமைக்கப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, மகாத்மா காந்தியின் ஆலோசனையின்பேரில் புதுதில்லியில் இந்தப் பள்ளி உருவானது. அது  அமைந்துள்ள நிலம் குறித்து பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. பள்ளியின் முக்கியத்துவத்தைச் சொல்லி பிரச்சனையைத் தீர்க்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது காலி செய்யுமாறு தில்லி மாநிலக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறது. பார்வைக்குறையோடு, பொரு ளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகள் 115 பேர் தங்கள் எதிர்காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் உத்தரப்பிரதேசம், பீகார், உத்தரகண்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

17

சைதன்யானந்த சரஸ்வதி என்ற போலிச் சாமியார் ஓடி  ஒளிந்துள்ளார்.  சாரதா பீடத் தின் சார்பில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. புதுதில்லியில் உள்ள பெரிய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பொறுப் பாளராக பீடத்தின் சார்பில் இந்த சைதன்யா னந்த சரஸ்வதி இருந்து வந்தார். 17 பெண்  குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் மாணவி ஒருவரும், இந்திய விமானப்படையின் உயர் அதிகாரி ஒருவரும் அனுப்பிய மின்னஞ் சல்கள் அவரை அம்பலப்படுத்தின. இப்போ தல்ல 2016 ஆம் ஆண்டே அவர் மீது புகார் வந்தது. ஆனால் விசாரிக்காமல் விட்டுவிட்டார் கள் என்கிறார்கள் புகார் அளித்தவர்கள். ஐக்கிய நாடுகள் சபையின் எண்(39 UN 1) பொருத்தப்பட்ட காரில் இவ்வளவு நாட்கள் அவர் வலம் வந்திருக் கிறார். அதுவும் போலியானதுதான். இப்பொழு தாவது நடவடிக்கை இருக்குமா என்று பெற்றோர்கள் மத்தியில் விவாதம் நடக்கிறது.