இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகி யுள்ளது. இதனை தொ டர்ந்து 15 க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற் பட்டன. இதனால் அங்கு பல வீடுகள் சேதம டைந்தன. கட்டட இடிபாடுகளின் காரணமாக 29 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் அவர்க ளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.