tamilnadu

க.பரமத்தி பகுதியில் காவிரி குடிநீர் வழங்க சிபிஎம் கோரிக்கை

க.பரமத்தி பகுதியில்  காவிரி குடிநீர் வழங்க  சிபிஎம் கோரிக்கை

கரூர், ஆக. 18-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி கிளை கூட்டம், கிளை உறுப்பினர் அன்புராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.கந்தசாமி, மாவட்டக் குழு முடிவுகள் குறித்து பேசினார். கிளை உறுப்பினர்கள் கே.ரவி, சௌந்தரராஜன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சியில் உள்ள காவேரி நகர், முதல் தெருவில் தெரு விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். உடனடியாக தெருவிளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.  க.பரமத்தி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் கிழக்கு, மேற்கு தெரு, ஆதிரெட்டிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் காவிரி கூட்டு குடிநீர் வழங்காமல், அப்பகுதிக்குள் இருக்கும் மாசடைந்த ஆழ்குழாய் கிணற்று நீரை விநியோகிப்பதால் பொது மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.  உடனடியாக காவிரி கூட்டுக் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.