தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்
சென்னை மாநகராட்சியின் கீழ்15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வரும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் தனியார் மயம் கூடாது என வலியுறுத்தி சிஐடியு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஓசூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது. சிஐடியு மாவட்டச்செயலாளர் ஸ்ரீதர் தலைமையில், மாவட்டத்தலைவர் வாசுதேவன், கட்டுமான சங்க மாவட்டத்தலைவர் பி.ஜி.மூர்த்தி, செயலாளர் சீனிவாசன், முருகன்நாயனார், அசோக் லேலண்டு சிஐடியு அணி நிர்வாகிகள் தரணியன், மாதவன், மணி, வேலு, துர்காராம், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.