tamilnadu

img

கும்பகோணம் பேராசிரியருக்கு இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிதி

கும்பகோணம் பேராசிரியருக்கு  இந்திய சமூக அறிவியல்  ஆராய்ச்சி கவுன்சில் நிதி

கும்பகோணம்,  ஆக. 18-  கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வரலாற்றுத் துறையின் சமூக-பொருளாதார ஆராய்ச்சியாளரான டாக்டர் என். ரமேஷ்குமார், “தமிழ்நாடு, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இடையே பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (கிராம) சமூக-பொருளாதார தாக்கத்தின் ஒப்பீட்டு பகுப்பாய்வு” என்ற ஆராய்ச்சி திட்டத்திற்காக இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலிடமிருந்து (ICSSR) ரூ.5.5 லட்சம் மானியத்தைப் பெற்றுள்ளார். தமிழ்நாட்டின் விழுப்புரம் மற்றும் கன்னி யாகுமரி மாவட்டங்களில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (கிராம) சமூக-பொருளாதார தாக்கத்தை மதிப்பிடுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த ஆய்வு, இந்த இரண்டு மாவட்டங்களிலும் திட்டத்தின் செயல்திறனை ஒப்பிட்டு. சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் காணும்.  கல்லூரி முதல்வர் மற்றும் வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் பா. சகாதேவன், வரலாற்றுத்துறை பேராசிரி யர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் ஆசிரியர்கள், திட்ட இயக்குநர் டாக்டர் என்.ரமேஷ்குமாரை பாராட்டி வாழ்த்தினர்.