இந்திய வெளியுறவுச் செயலாளர் நேபாள பிரதமருடன் சந்திப்பு
நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலியை இந்திய வெளி யுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி ஞாயிற் றுக்கிழமையன்று சந்தித் த்தார். இரு நாடுகளுக் கும் இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் மேம் படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள வெளியுறவுத் துறை செயலாளர் அம்ருத் பகதூா் ராயின் அழைப்பின் பேரில், விக்ரம் மிஸ்ரி அந்நாட்டிற்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அரசு முறைப் பயணமாக நேபாள பிரதமா் சா்மா ஓலி அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.